தேதி: December 17, 2011
A4 ஷீட் பேப்பர் - 2
கலர்
பென்சில்
கத்தரிக்கோல்
வெவ்வேறு அளவுகளில் 3 டப்பா மூடிகள்
குண்டூசிகள்
குச்சிகள்
தெர்மாகோல்
பூச்சாடி அல்லது சிறிய டப்பா
பேப்பர் ப்ளவர்ஸ் செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

A4 ஷீட் பேப்பரின் மீது வெவ்வேறு அளவுகளில் உள்ள 3 டப்பா மூடிகளை வைத்து வட்டங்கள் வரைந்துக் கொள்ளவும். பின்னர் அவற்றை தனித்தனியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

அந்த வட்ட வடிவ தாளை இரண்டாக மடித்து, பின் நான்காக மடிக்கவும்.

நான்காக மடித்த தாளை எட்டாக மடிக்கவும்.

மடித்த தாளின் ஓரங்களை வளைவாக வெட்டி விடவும். அந்த காகிதத்தை பிரித்தால் பூ வடிவம் கிடைக்கும்.

ஒவ்வொரு பேப்பருக்கும் விரும்பிய வர்ணங்களை அடித்து காயவிடவும்.

மூன்று அளவுகளில் நறுக்கி வைத்துள்ள பேப்பரை பெரியது முதல் சிறியது வரை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைக்கவும். பூக்களின் நடுவில் குண்டூசி சொருகி வெவ்வேறு அளவுகள் கொண்ட குச்சியின் முனையில் குத்தி வைக்கவும். இப்போது காகித பூக்கள் தயார்.

இதனை பூச்சாடியில் வைக்க, அதனுள் தெர்மாக்கோலை சொருகி வைக்கவும். அதில் இந்த பூக்களை சொருகி வைத்தால் பூச்சாடி தயார். விரைவில் எளிமையாக செய்யக்கூடிய பூச்சாடி இது.

Comments
nice
செய்வதற்கு மிகவும் எளிமையான பூக்கள்.... அழகாகவும் உள்ளது........
பேப்பர் ப்ளவர்ஸ்
குழந்தைகள் கற்க ஆரம்பிக்கும்போது சொல்லித்தர ஏற்ற கைவினை எளிமையா, அழகா இருக்கு.. :-)
KEEP SMILING ALWAYS :-)
நன்றி....
இந்த குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி....
\முதல் கருத்தை பதித்த ப்ரியாவுக்கு ரொம்ப நன்றி....
நாகா ராம் என் குறிப்புகளுக்கு தவறாமல் வந்து கருத்துக்கள் சொல்லி உற்சாக படுத்தும் உங்களுக்கும் மிக்க நன்றி...
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
கடதாசிப்பூக்கள்
சுலபமான, அழகான சிறுவர் கைவினை. பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
imma...
பதிவை பார்த்து கருத்துக்களை பதித்தமைக்கு மிக்க நன்றி....
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
சங்கீதா
ரொம்ப கியூட்டான சுலபமான குட்டீஸ் குறிப்பு. ரொம்ப பிடிச்சிருக்கு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சங்கீதா
மிகவும் எளிதாக ஈசியாக செய்ய கூடியதாக் இருக்கு
Jaleelakamal
வனிதா,ஜலீலா...
ரொம்ப நன்றி பா....
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
AZHAGIYA KHAGITHA POOKKAL
SEIYUM VITHAM, SEIMURAI VILAKKAM ARUMAI. VAAZHGA UNGAL MUYARCHI, VALARGA PUTHIYAVAIGAL.
PON THA SATHYASEELAN
nee vazha pirarai kedukkathe
sathyaseelan
உங்கள் உற்சாகம் மிகு கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.......
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"