உளுந்து அடை

தேதி: December 17, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

புழுங்கல் அரிசி - ஒரு கப்
கருப்பு உளுந்து - அரை கப்
சின்ன வெங்காயம் - 30
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1 1/4 கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று


 

தனித்தனி பாத்திரத்தில் உளுந்து மற்றும் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊறியதும் உளுந்தை கழுவி தோல் நீக்கி கிரைண்டரில் போட்டு நன்கு அரைக்கவும். நன்கு அரைப்பட்டவுடன் வழித்து எடுத்து விட்டு அரிசியை கழுவி போட்டு அரைக்கவும். அரிசி போட்டவுடன் சோம்பு, வெங்காயம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும்.
ரவை பதம் வந்ததும் வழித்து எடுத்து விடவும். அந்த மாவுடன் முட்டை உடைத்து ஊற்றி உப்பு போட்டு கையால் அல்லது கரண்டியால் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு முழுக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி மூடி வைக்கவும்.
தேய்க்க வேண்டாம். 4 நிமிடம் கழித்து மொறுமொறுவென்று ஆனதும் திருப்பி போட்டு 3 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும்.
மொறுமொறு உளுந்து அடை தயார்
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்க குறிப்புகள் எல்லாமே எப்போவுமே அருமை தான் இதுவும் அப்படியே இருக்கு சீக்கிரமே செய்து சாப்பிட தோணுது ஒரு சந்தேகம் கருப்பு உளுந்து தான் பயன்படுத்தனுமா ? by Elaya.G

ரொம்ப நல்லா செய்திருக்கீங்க... கடைசியில் அந்த உளுந்து அடை படம் பார்க்கவே சூப்பரா இருக்குங்க. கண்டிப்பா செய்து பார்த்துடறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உளுந்து அடை பார்க்கும்போதே ஜம்முனு, சாஃப்டா தெரியுது! :) வித்தியாசமான, சத்தான அடை! அவசியம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ