தேதி: July 13, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முட்டை - 4
பழுத்த தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப்பால் - ஒரு கப்
தேங்காய் விழுது - அரை கப்
மல்லிக்கீரை - பாதி கட்டு
மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய், பாதி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு எண்ணெயில் போட்டு தாளிக்கவும்.
பிறகு முறுக ஆரம்பிக்கும் போது மிளகாய்தூள் போட்டு, அதனுடன் மீதமுள்ள வெங்காயம், தக்காளியை நைசாக நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.
ஓரளவு கூழ் போன்று வதங்கியவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி, தேங்காய் விழுது, மசாலாத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட வேண்டும்.
கொதிக்க ஆரம்பிக்கும் போது முட்டையை உடைத்து கலங்காமல் அதில் ஊற்றி, மல்லிக்கீரையை நைசாக நறுக்கிப்போட்டு 3 அல்லது 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கிவிடலாம்.
இது இடியாப்பம், பராசப்பம் போன்றவற்றுக்கு ஒரு நல்ல, ஈஸியான சைட் டிஷ்.
Comments
வணக்கம்
வணக்கம்,
தங்களின் குறிப்பிற்கு மிகவும் நன்றி.
மிக நன்றாக இருந்தது.
with cheers,
Dejaswini
with cheers,
Dejaswini
Dear Dejaswini!
மிக்க மகிழ்ச்சி! பாராட்டுக்கு நன்றிகள்.
மசாலா தூள் ?
மசாலா தூள்னா என்ன தூள்?
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.