சிக்கன் நூடுல்ஸ் பிரியாணி

தேதி: December 21, 2011

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

நூடுல்ஸ் - ஒரு கப்
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
வெங்காய விழுது- கால் கப்
தக்காளி விழுது- கால் கப்
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
பச்சைமிளகாய்-1
தயிர்- 4 ஸ்பூன்
தனியா தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- அரைஸ்பூன்
சீரகத்தூள்- கால் ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-தேவைக்கு


 

கொதிக்கும் நீரில் நூடுல்ஸ் சேர்த்து பாதி வெந்ததும் நீரை வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் அலசி நீர் வடிய விடவும். சிறுது எண்ணெய் எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய் தாளிக்கவும்.

பின்னர் வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்.

அதில் தூள் வகைகளை சேர்க்கவும்.

பின்னர் தக்காளி விழுதும் தயிரும் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்

பின்னர் சிக்கனை சேர்த்து தேவைக்கு உப்பும் போட்டு வேக விடவும்.

நீர் வற்றி கெட்டியாக சுருண்டு வந்ததும் நூடுல்ஸை சேர்த்து கிளறி பின்னர் இறக்கவும்.

சுவையான சிக்கன் நூடுல்ஸ் பிரியாணி தயார்


மேலும் சில குறிப்புகள்