nose block

i have 2and half yrs son, avanukku adikadi mukadaipu atavathu moochu vidum bothu sound varuthu,vayale moochu viduran.ithukku yethavathu home remedy irukka pls tell me.pls..............

சலைன் ட்ராப்ஸ் வாங்கி வைக்கவும் அதை மூக்கில் விடவும் அல்லது தேங்காய் எண்ணை லேசா(ரொம்ப லேசா)சூடுபடுத்தி மூக்கில் ஒவ்வொரு சொட்டு விடவும்.அல்லது சுத்தமான சூடாறிய கொஞ்சம் நீரில் 1 பின்ச் உப்பு சேர்த்து மூக்கில் ஒவ்வொரு சொட்டு விடவும்
ஆனால் அடிக்கடிங்கறீங்க அலர்ஜியா என்று பாருங்க.எந்த ஊர்ல இருக்கீங்க?வீட்டை சுற்றி காட்டு செடி முளைத்திருந்தால் அதை எல்லாம் பறித்து தீ வச்சுடுங்க

விக்ஸை லேசாக சூடாக்கி மூக்கிர்கு வெளியெயும் தொண்டையிலும் ,,,தடவுங்க நல்ல ரிலீஃப் கிடைக்கும்...ரொம்ப நாள் இருந்தால் டாக்டரை பாருங்க,,,மூக்கில் சதை வள்ர்ந்தாலும் இப்படி வரும்..

என் மகனுக்கு 5 வயது அவனுக்கு மூக்கின் இரு துவாரங்களிலும் சிறிது வீக்கம் போல் உள்ளது எப்போது இருந்து உள்ளது என்று எனக்கு தெரிய வில்லை ஆனால் எனக்கு தெரிஞ்சு ஒரு 3 வருடமா இருக்கு நா அது வளர வளர சரி ஆகும் என்று விட்டுவிட்டேன் அவனுக்கு கடந்த 1.5 வருடமாக மூக்குஅடைப்பு ஜலதோஷம் அடிக்கடி வருகிறது எல்லா மருந்தும் கொடுத்தும் சரி ஆக வில்லை மாதத்தில் 20நாள் இதே தான் மருத்துவர்கள் அவன் மூக்கு தொண்டை எல்லாம் செக் செய்வார்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரை இருக்கும் பின்பு ஜலதோஷம் அடைப்பு எல்லாம் சரி ஆகி விடும் என்று கூறி விட்டனர் இப்போது ஆஸ்பத்திரி கு செல்வது இல்லை எந்த மருந்து கொடுத்தும் பலன் இல்லை என்பதால் விட்டு விட்டேன் இப்போவும் 15 நாட்களாக மூக்கு அடைப்பு ஜலதோஷம் தான் ஊரில் இருந்து வரவைத்து ஹோமியோ கொடுக்கிறேன்

இன்று நெட்டில் பார்த்த போது அந்தமாறி வீக்கம் இருந்தால் இப்படி அடிக்கடி வரும் என்று உள்ளது அதை படித்ததில் இருந்து ரொம்ப பயமா இருக்கு ஆனால் அவனுக்கு பள்ளி சென்றதில் இருந்து தான் ஜலதோஷம் உள்ளது டாக்டர் கூட இந்த வீக்கம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை இன்று அதை படித்ததில் இருந்து மனது சரி இல்லை அப்படி இருந்தால் அதன் பெயர் nasal abscess என்று உள்ளது இது உண்மை தானா நான் இது வளர வளர சரி ஆகும் என்று தான் நினைத்தேன். இது இருந்தால் ஆபத்தா? உதவுங்கள் தோழிகளே..

//nasal abscess// உங்கள் தேடுதல் தவறான‌ இடத்தில் போய் முடிந்திருக்கிறது. :‍) //nasal// மூக்கு (தொடர்பான ‍- சரியாக‌ தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்ய‌ முடியவில்லை.) //abscess// நீங்கள் கட்டு மாதிரி சீழ் இருப்பதாகச் சொல்லவில்லை. உங்கள் குழந்தைக்கு இருப்பது இது அல்ல‌.

3 வருடமாக‌ சீழ் பிடித்த‌ கட்டு மூக்கினுள் இராது. எப்போதோ மருத்துவர்கள் கவனத்திற்கு வந்திருக்கும்; உங்கள் கவனத்திற்கே வந்திருக்கும். அது தானாகவே உடைந்து சீழ் வடிந்தும் இருக்கும். உங்கள் பையனுக்கு இருப்பது நேசல் ஆப்சஸ் அல்ல‌.

//அதை படித்ததில் இருந்து மனது சரி இல்லை// ஆப்சஸ் இருந்திருந்தாலும் கூட‌ பயப்பட எதுவும் இருந்திராது. டாக்டர்கள் சரியாக்கிக் கொடுத்திருப்பார்க்ள். கை கால்கள் உடலின் மீதிப் பகுதிகளில் எங்கு சீழ் கட்டிய‌ கட்டு வந்தாலும் ஆங்கிலத்தில் ஆப்சஸ் என்று தான் சொல்வார்கள். நேசல் என்றால் மூக்கில் என்று கருத்து, அவ்வளவுதான். சொற்களைப் பார்த்துப் பயந்து போகக் கூடாது.

//இது இருந்தால் ஆபத்தா?// உங்கள் பையனுக்கு இருப்பது ஆப்சஸ் அல்ல‌. அப்படி இருந்தாலும் அது ஆபத்து இல்லை.

//இன்று நெட்டில் பார்த்த போது// நெட்டில் என்றால் எங்கே! (இங்கே லிங்க், தளத்தில் பெயர் எல்லாம் கொடுக்க‌ அனுமதி இல்லை. நான் கேட்டேன் என்று கொடுத்து வைக்க‌ வேண்டாம்.) ஆங்கிலத்தில் உள்ள‌ மருத்துவச் செய்திகளே பலது தவறாக‌ இருக்கிறது. தமிழில்... கேட்கவே வேண்டாம். நெட்டில் எழுதுவது... பெரும்பாலும் உங்களையும் என்னையும் போன்றவர்கள் தான். சரியானவர்கள் எழுதுவதைத் தேடிப் படித்தாலன்றி தகவல்களை நம்ப முடியாது.

//அந்தமாறி வீக்கம் இருந்தால் இப்படி அடிக்கடி வரும் என்று உள்ளது// எந்த‌ மாதிரி? சீழ் உள்ள‌ கட்டுக்கா? இல்லை, மூக்கில் அழற்சி இருந்தால் (அழற்சி என்று எழுதியதும் பெரிய‌ வியாதி என்று நினைக்காதீர்கள். சும்மா சின்ன‌ வீக்கம் போல‌.) ஜலதோஷம் பிடித்தது போல‌ குணாதிசயங்கள் இருக்கலாம். ஜலதோஷம் இருந்தால் மூக்கில் அழற்சி வரலாம். இவை இரண்டும் எதிலிருந்து எது வரும் என்று சொல்ல‌ முடியாதவை. யோசிப்பதற்குரியதாக‌ இருந்திருந்தால் மருத்துவர் சொல்லியிருப்பார். //ஒரு குறிப்பிட்ட வயது வரை இருக்கும் பின்பு ஜலதோஷம் அடைப்பு எல்லாம் சரி ஆகி விடும் என்று கூறி விட்டனர்.// சரி. அப்படியானால் யோசிக்க‌ ஒன்றும் இல்லை. நீங்கள் செய்யக் கூடியது வைட்டமின் சீ அதிகம் உள்ள‌ பழங்களாகக் கொடுக்கலாம். நோய்த்தொற்று சட்டென்று அண்டாது.

//ஊரில் இருந்து வரவைத்து ஹோமியோ கொடுக்கிறேன்// பலனில்லையா?

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இமா ஹோமியோவில் பலன் மெல்ல மெல்ல தான் தெறியும் என்கிறார்கள் இப்போதான் ஒரு மாதமாக இதை கொடுக்கிறேன் ஆனால் குறைந்து கூடுகிற மாறி தான் இருக்கு முழுமையா குணம் தெரியல 6மாதம் தொடர்ந்து கொடுக்க வேண்டுமாம். நீங்கள் சொல்வது புரிந்துவிட்டது ரொம்ப நன்றி இரவு முழுதும் தூக்கம் இல்லை இப்படி ஜலதோஷம் அடிக்கடி வர ஆரம்பித்தத்தில் இருந்தே ஏதாவது ஒன்றை நெட்டில் தேடி கொண்டே இருக்கிறேன் தீர்வு கிடைக்காதா என்று. 6மாதம் இதை கொடுத்து பார்த்துவிட்டு ஊருக்கு போகும்போது நேரில் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.விட்டமின் சி என்னால் முடிந்த அளவு தினமும் மகன் உணவில் சேர்த்து விடுகிறேன். மிக்க நன்றி.

மேலும் சில பதிவுகள்