பருப்பு குழம்பு

தேதி: December 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.9 (7 votes)

 

துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு


 

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி பருப்புடன் சேர்த்து வேக வைக்கவும்.
உருளியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வேகவைத்த வெங்காயம், தக்காளி, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
பின் வேக வைத்துள்ள பருப்பை குழைத்து சேர்க்கவும்.
பருப்பு கலவையை நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதிவந்ததும் கொத்தமல்லி தழை தூவவும்.
சாதம், அப்பளத்துடன் சாப்பிட கூடிய பருப்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்