ஸ்னோமேன் பேமிலி

தேதி: December 23, 2011

4
Average: 4 (13 votes)

 

ஸ்டைரோபோம் பால்ஸ் (Styrofoam Balls) - 3 அளவுகளில்
டூத்பிக்ஸ் அல்லது நீளமான குச்சி
டூத்பேஸ்ட் மூடிகள்
தடித்த அட்டை
வர்ண கடதாசிகள்
கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு - சிறிய அளவு
பைப் க்ளீனர் - ஆரஞ்சு மற்றும் வேறு நிறத்தில்
சிவப்பு பெயிண்ட் அல்லது மார்கர்
கம்பளி துணி - சிறிய துண்டு
டிசைனர் புஷ் பின்ஸ் (Push pins)அல்லது ஸ்டோன்ஸ்
குண்டூசி
க்ளூ
அக்ரிலிக் / பேப்பரிக் பெயிண்ட்

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
டூத்பேஸ்ட் மூடிகளுக்கு விரும்பிய வர்ணம் பூசி நன்கு காய விடவும்.
தடித்த அட்டையில் டூத்பேஸ்ட் மூடியை விட அரை அங்குலம் அதிகமாகவுள்ள வட்டங்கள் வரையவும்.
வட்டங்களை வெட்டி டூத்பேஸ்ட் மூடிகளுக்கு கொடுத்த அதேநிற பெயிண்டை அட்டையில் கொடுக்கவும் அல்லது அதே வர்ண கடதாசியை வெட்டி ஒட்டவும்.
பின்னர் மூடியை க்ளூ கொண்டு வட்ட அட்டையின் மேல் ஒட்டவும் - தொப்பி தயார்.
மூக்கு பகுதிக்கு ஆரஞ்சுநிற பைப் கிளீனரில் ஒரு அங்குல துண்டு வெட்டி இரண்டாக மடித்து வைக்கவும். வேறு நிற பைப் க்ளீனரில் கைகளுக்கு நீளமாக 2 துண்டுகளும், விரல்களுக்கு 1 - 1.5 அங்குல அளவில் 2 துண்டுகளும் வெட்டவும். பின்னர் ஒரு சிறிய துண்டை பெரிய துண்டின் முனையில் வைத்து முறுக்கி விடவும். இவ்வாறு இரு கைகளும் செய்யவும்.
ஒரு நீளமான குச்சியில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ஸ்டைரோபோம் உருண்டைகளை அதே ஒழுங்கில் சொருகவும். அல்லது டூத் பிக் கொண்டு இணைக்கவும். இரண்டு டூத் பிக் பாவிக்கவும் அப்போதுதான் திடமாக இருக்கும்.
பின்னர் நடுவிலுள்ள ஸ்டைரோபோமின் இரு கரைகளிலும் பைப் கிளீனர்களை கைகளைப் போல சொருகி விடவும். கண்களுக்கு கறுப்பு ஸ்டிக்கர் பொட்டையும், மூக்குக்கு ஆரஞ்சு பைப் க்ளீனரையும் வைக்கவும்.
சிவப்பு பெயிண்டால் அல்லது மார்கரால் வாய் வரையவும். டிசைனர் புஷ்பின்களை பட்டன்கள் போல குற்றவும். புஷ் பின்னிற்கு பதில் ஸ்டோன் மற்றும் குண்டு பின்களையும் குற்றலாம்.
பின்னர் தலையில் தொப்பியை வைத்து ஒட்டவும். கம்பளி துணியை ஸ்கார்ப் போல அடியில் குஞ்சங்கள் வெட்டி கழுத்தைச் சுற்றி வைத்து குண்டூசியால் குற்றி விடவும்.
அழகான இலகுவாக செய்யக்கூடிய ஸ்னோமேன் பேமிலி தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப சுலபமா, அழகா அருமையா இருக்கு :-)

KEEP SMILING ALWAYS :-)

வழக்கம் போல் சுலபமான அழகான கைவினை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்னோமேன் பேமிலி ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்

ஸ்னோமேன் பேமிலி ரொம்ப ரொம்ப அருமையா இருக்குங்க வாழ்த்துக்கள் by Elaya.G

;) மூன்று பேரும் வடிவா இருக்கிறாங்கள் நர்மதா.

‍- இமா க்றிஸ்

Hi Nila! Again naan thaan. ஸ்டைரோபோம் பால்ஸ் (Styrofoam Balls), வர்ண கடதாசிகள் na enna, enga kadaikum? Pipe cleaner pathi theruyum, aana kadaikala. Neenga enga vaanganeenga?

ரொம்ப‌ அருமையா இருக்கு. என் பிள்ளையின் ப்ராஜக்ட்காக‌ அவளே அழகாக‌, ஈசியாக செய்தால்.