தேதி: December 23, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வல்லாரை - 100 கிராம்
வரமிளகாய் - 3 அல்லது 4
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வல்லாரையை நன்றாக அலசி தண்ணீர் இல்லாமல் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய் போடவும், பின்பு தண்ணீர் வடித்து வைத்துள்ள கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.

சிறிது வதங்கியதும் பூண்டு பல்லை போட்டு வதக்கவும்.

கீரை நன்கு வதங்கும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

நன்றாக வதங்கி வந்ததும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

வல்லாரை துவையல் தயார். எல்லா வித சாப்பாட்டிற்கும் பொருத்தமாக இருக்கும். மிக சுலபமாக செய்யக்கூடிய துவையல் இது. மருத்துவ குணங்கள் உடைய இக்கீரையை துவையலாக சாப்பிட்டு நீங்களும் பயன் பெறுங்கள்.

Comments
க்ரீன் சட்னி...
இளையராணி,
கலர் பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.. ஆனா இங்க
இந்த கீரை கிடைக்காதே.. ;(
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்..
வல்லாரை துவையல்
படங்கள் கலர்ஃபுல்லா கலக்கலா இருக்கு :-)
KEEP SMILING ALWAYS :-)
இளையா
இளையா... நல்ல ஆரோக்கியமான குறிப்பு. பார்க்கவும் ரொம்ப நல்லா இருக்கு. சுலபமா செய்ய கூடியதாவும் இருக்கு. மொத்தத்தில் சூப்பரான குறிப்பு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இளையா
இளையா,
வல்லாரைக்கீரை துவையல் சிம்ப்ளி சூப்பர்! :) நல்லதொரு ஆரோக்கியமான குறிப்பு. கடைசிப்படம் ரொம்ப அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!
வல்லாரைக்கீரை நிறைய சாப்பிட்டால் நல்லா நியாபக சக்தி கிடைக்குமாம். எனக்குதான் இந்த கீரை இங்கே கிடைக்காது! :(
அன்புடன்
சுஸ்ரீ
ரொம்ப ரொம்ப நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி
சாந்தினி வாழ்த்துக்களுக்கு நன்றி கீரை கிடைக்ரப்போ செய்து பார்த்து பின்னூட்டம் தாங்க
நாகா அக்கா மிக்க நன்றி
வனி அக்கா ரொம்ப ரொம்ப நன்றி
சுஸ்ரீ ரொம்ப நன்றிங்க கிடைக்கும் பொது செய்து பாருங்க வாழ்த்துக்களுக்கு நன்றி by Elaya.G
இளையா
ஹாய் இளையா எப்படி இருக்க? உன்னோடு பேசியே ரொம்ப நாள் ஆகுது. வல்லாரை ரொம்ப நல்லது. ஞாபகசக்திக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதை வைத்து துவையல் செய்து எங்களுக்கு அனுப்பியிருக்கிறாய். வாழ்த்துகள். இன்னும் நிறைய குறிப்பு கொடுடா.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
வல்லாரை துவையல்
nice dish elaya ,good combination for rasam and cured rice
all the best.