தேதி: December 24, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இறால் - 15
நறுக்கிய பீன்ஸ் - 2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகாய் வற்றல் - 2
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
பீன்ஸை நீளவாக்கில் சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் நறுக்கின வெங்காயம், மிளகாய் வற்றல், தேங்காய் துருவல், இறால், சோம்பு, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை போடவும்.

அதன் பிறகு கறிவேப்பிலை போட்டு 15 நொடி கழித்து அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

விழுது நன்கு வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸை போட்டு பிரட்டி விடவும்.

பீன்ஸ் உடன் மசாலா நன்கு ஒன்றாக சேரும்படி 2 நிமிடம் பிரட்டி விடவும். கை விடாமல் பிரட்டிக் கொண்டே இருக்கவும்.

2 நிமிடம் கழித்து 2 மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து பிரட்டி விட்டு ஒரு தட்டை வைத்து 3 நிமிடம் மூடி வைக்கவும்.

பிறகு திறந்து பீன்ஸ் வெந்ததும் ஒரு முறை நன்கு கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

ருசியான இறால் பீன்ஸ் மசாலா தயார். இறாலை மிக்ஸியில் போட்டு அரைக்காமல் பீன்ஸ் உடன் போட்டு வதக்கியும் செய்யலாம்.

இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.

Comments
இறால் பீன்ஸ்
காம்பினேஷனே புதுசா இருக்கு... :) எங்க இருந்து தான் இப்படிலாம் யோசிச்சு செய்வீங்களோ... அசத்தலான குறிப்புங்க. செய்யனும், இறால் வாங்கிட வேண்டியது தான். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இறால் பீன்ஸ்
வாவ்... அருமையான குறிப்பு! இறாலை அரைத்து செய்வது ரொம்ப புசுசா இருக்கு! பார்க்கும்போதே செய்யத்தூண்டுகிறது! : ) படங்களும் ரொம்ப அழகா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
இறால் பீன்ஸ் மசாலா
அருமையான குறிப்பு. ரொம்பவே வித்தியாசமா இருக்கு. புதுமையான குறிப்பை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
eral beense masala
Rombavea nalla kurippu,
kandippa naanum try pannitu soldren,thanks fairoja_jamal.
100
100 marks...suvai,sathu,fiber,easy cooking,pudhumai....waw...romba arumayai irundadu aunty..thanks for shaing.