*** பட்டிமன்றம் - 56 *** வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா? உபத்திரவமா?

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு, இனிய இந்நன்நாளில் இனிதே பட்டியை தொடங்குகிறேன். பட்டியில் நாம் இதுவரை பொதுப்பிரச்சனைகள், அலுவலகப்பிரச்சனைகள்,குடும்ப பிரச்சனைகள் இப்படி பேசி பேசி போரடித்து போய்விட்டோம். அந்த குறையை போக்கவே இம்முறை வித்தியாசமாக தலைப்பை தேர்ந்தெடுக்க நினைத்து நம் அறுசுவையின் ஆல்ரவுண்டர் தோழி வனிதா தந்த இந்த தலைப்பையே பட்டிக்கு தேர்வு செய்துள்ளேன். தலைப்புக்கு நன்றி வனிதா. அதாகப்பட்டது...

***********************************************************
வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா? உபத்திரவமா?
***********************************************************

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

அதனால் தோழிகளே உங்கள் மனதில் வேலைக்காரர்கள் குறித்த நல்ல அபிப்ராயங்களையோ, மனக்குறைகளையோ மலைப்போல குவித்து வைத்திருப்பீர்கள். அவை அனைத்தையும் இங்கே கொட்டுங்கள். நான் அவற்றை கொண்டு செல்ல லாரியோடு காத்திருக்கிறேன். ரெடி ஜூட்ட்ட்ட்ட்ட்.....

நடுவர் திருமதி கல்பனா.....நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கீங்க....தோழிகள் இந்தத் தலைப்பில் பிச்சு உதறிடுவாங்கனு நினைக்கிறேன்.....பட்டி நன்கு நடைபெற வாழ்த்துக்கள்....நேரம் கிடைத்தால் கட்டாயம் வாதிடுகிறேன்...

ராதாம்மா, இந்த சின்ன பொண்ணுக்கு திருமதியெல்லாம் போட்டு பெரிய வெகுமதியே தந்துட்டீங்க ;) //இந்தத் தலைப்பில் பிச்சு உதறிடுவாங்கனு நினைக்கிறேன்// நானும் அதே நம்பிக்கைலும்,வனி மேல் உள்ள நம்பிக்கையிலும் இந்த தலைப்பை எடுத்துள்ளேன் :) உங்கள் வாழ்த்துக்கு நன்றி. வாழ்த்தோட நிற்காம வாதத்தோட வாங்க. வர்றீங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அப்பாடி... நேற்று இரவு தலைப்பை பார்க்க முடியலயேன்னு ஒரே ஃபீலிங்கா போச்சு... காலையில் முதல் வேலை அறுசுவை தான். :) தலைப்பு என்னோடதா ;) எதுக்கோ பழி வாங்குறாப்பல இருக்கே... ஹிஹிஹீ. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி. நடுவர் பொறுப்பேற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வரும்போதே எந்த அணின்னு முடிவோட தானே வரணும்... வேலைக்காறர்கள் உதவியே உதவியே உதவியே’னு அணி பக்கம் நம்ம ஓட்டு :) வாதம்... காலை உணவை முடிச்சுட்டு வந்து தெம்பா போடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல ஒரு தலைப்பை தந்த வனிதாக்கும் ,, அதை வெளியிட்ட கல்பனாவுக்கும் நன்றி நல்ல தலைப்பு.... பாத்த உடனே என்னோட அனுபவத்தை சொல்லலாம்ணு வந்ருக்கேன்.............இது பட்டி மன்றத்தில் என்னுடைய முதல் பதிப்பு.........
இன்றைய இயந்திர உலகில் வேலைக்காரர்களையும் ஒரு இயந்திரமா தான் பாக்றாங்க..... நானும் அதோடு தான் ஒப்பிட்டு பேச போகிரேன்........வேலைக்காரர்கள் உதவியா தான் இருக்காங்க எத்தனை நாள்... எத்தனை பேர்... விரல் விட்டு எண்ணலாம்.........இறுதியில் அது உபத்திரத்தில் தான் முடியும்........ இப்போ என்னோட தலைப்பு உங்களுக்கு புரின்சிருக்கும்........வனி அக்கா உங்கள எதிர்த்து வாதிட வந்துட்டே இருக்கேன்.....
பழக பழக பாலும் புளிக்கும் இந்த பழமொழி அவர்களுக்கு பொருந்தும்.......முதல்ல எல்லாருமே வேலைக்காரர்களை ஒரு வரிக் கோட்டில் தான் வைப்பாங்க....... நம்மளோட பலவீனம் என்ன? பார்த்த உடனே எல்லாரையும் நம்புவது....... அதனால் விளைவது நம்ம வீட்டு ரகசியங்கள் அடுத்த வீட்டில் பேசப்படுது................இதை தடுக்க முடியுமா?....வேலைக்காரர்களுக்கு பயந்து கதவைப் பூட்டிக்கொண்டு எப்பொழுதும் பேச முடியுமா? அவங்கள பத்தி ஒரு நம்பிக்கையை நம்ம மனசுல தர்ராங்க அதனால குடும்ப விஷயத்தை அவர்களிடம் பேசுரோம் அது வெளியில் தெரிந்து குடும்பத்தில் பிரச்சனை வருது.......இது யாரால்................. வேலைக்காரர்கள் நமக்கு உபத்திரமே உபத்திரமே.......... (இது என்னுடைய அனுபவத்தில் சொன்னது உதவியா இருக்காங்க அது சில பேர் தான் அதனால தான் இதை தேர்ந்தெடுத்தேன்)
இனியும் தொடரும்

நடுவரே... வாதத்தோட வந்துட்டோம்ல.

ஏன் வேலைக்காரர்கள் வேணும்னு ஒரு பட்டியல் போடலாம்...

1. காலையில் நாம டிஃபன் பண்றது பிள்ளைகளை கணவரை ரெடி பண்ணி அனுப்புறதுன்னு தலையை பிச்சிக்குற நேரத்துல பாத்திரம கழுவவாது ஒரு வேலை ஆள் இருக்குறது நல்ல விஷயம் தானே. கொஞ்சம் டென்ஷன் குறையும் இல்லன்னா ராத்திரி பயன்படுத்தி கழுவ போட்ட பாத்திரமெல்லாம் அந்த அவசர நேரத்தில் கழுவும் வேலையும் நமக்கு வந்துடும்.

2. குழந்தைகள் இருக்கும் வீட்டில் கையால் துவைக்கும் துணி ஏகம். அவ்வளவு ஏன் இந்த காலத்தில் சாயம் போகாத துணி, எல்லாம் சேர்த்து மிஷின்லயே போட்டுடலாம் என்ற வகை துணி சற்று குறைவே. எதை எடுத்தாலும் சாயம் போகுது. இதெல்லாம் கையால் துவைத்து கொடுக்க ஒரு வேலை ஆள் தேவை தானே.

3. வயதானவர்கள் இருந்தா இன்னும் கேட்கவே வேண்டாம்... உடம்புக்கு முடியலன்னா அவங்களூக்கு பெட்ஷீட், துணி என துவைக்கும் வேலை ஏகம். கூடவே சுத்தம் பண்ணும் வேலை... இதெல்லாம் செய்து கொடுக்க ஒரு வேலை ஆள் தேவை.

4. ஒரு விருந்தினர் வருகைன்னா கூட சமைக்க உதவி செய்யவாது ஒரு ஆள் தேவை.

5. நாம் மட்டுமே குடும்பத்தை பார்த்தால் தினுமும் வீட்டை பெருக்கி சுத்தம் பண்றதே கஷ்டம்... ஆனா வேலை ஆள் இருந்தா தினம் கூட்டி, தொடச்சும் விட்டுடுவாங்க. வீடும் சுத்தமா இருக்கும்.

6. இன்றையா காலத்தில் கூட்டு குடும்பங்கள் மிக குறைவு... ஆளா ஒரு வேலையை பகிர்ந்து செய்ய வாய்ப்பு இல்ல. இந்த சூழலில் தின வேலையை ஒருவரே செய்வது ரொம்ப கஷ்டம்.

7. என்னதான் கணவர் உதவி செய்தாலும் லீவ் நாளில் மட்டும் தானே உதவிக்கு ஆளிருக்கும்... வேலை ஆள் இருந்தா கணவரையும் தொந்தரவு பண்ண வேண்டாமே. கிடைக்கும் ஒரு நாள் லீவிலும் ஒட்டடை அடிக்குறது, ஃபேன் தொடைக்குறது, ஸ்க்ரீன் தொவைக்குறதுன்னு அவருக்கு வேலை வைக்க வேண்டாம்.

8. எல்லாரும் எல்லா நாளும் நல்லா இருக்குறதில்லை... முக்கியமா மாதத்தில் சில நாட்கள் பெண்களால் முடியாத போது உதவிக்கு யாராவது வர மாட்டாங்களான்னு தேடாத பெண்கள் குறைவு. இன்னைக்கு கூட ஓய்வுஇ கிடைக்காதான்னு மனசு ஏங்க தான் செய்யும்.

9. ஒரு உடல் நல குறைவுன்னா அன்னைக்கு நமக்காக கணவர் லீவ் போட்டுட்டு கூட இருந்து உதவும் சூழல் இருப்பதில்லை... அந்த நாட்களில் ஒரு சின்ன சின்ன சமையல் வேலை அது இதுன்னு செய்து கொடுக்க வேலை ஆள் இருப்பது பெட்டர்.

10. இப்பலாம் ஆண் பெண் இருவரும் வேலைகு பொகும் சூழலில் வீட்டு வேலை எல்லாம் பெண்ணே பார்த்து குழந்தை கணவரையும் பார்த்து கொள்வது சிரமம். நேரமே இருக்காது. இவங்களூக்குலாம் வேலை ஆள் அவசியம் தானே.

11. துணியை தேய்க்க வெளியே கொடுத்து வாங்குவதை விட துணி தேய்ச்சு கொடுக்க வீட்டில் வேலை ஆள் இருந்தா நமக்கு பிடிச்ச மாதிரி செய்துக்கலாமே.

12. என்ன தான் மாமியார், சொந்த பந்தம் உடன் இருந்தாலும் நம்ம விருப்பபடி வேலை செய்து கொடுக்க மாட்டாங்க... உரிமையோட இதை இப்படி செய்யுங்கன்னு சொல்லவும் முடியாது. ஆனா வேலை ஆள் இருந்தா நாம விருப்பபடி செய்ய வைக்கலாம். நாமும் சங்கட பட வேண்டாம் தானே.

இன்னும் பட்டியல் போடலாம்... வரேன்... நான் போய் மதிய சமையலை முடிச்சுட்டு வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே... நம்ம சொந்த மாமியார், நாத்தனாரிடமே நம்மலாம் உண்மையை சொல்லவோ நம்பிக்கையா பேசவோ கூடாது... அப்படி இருக்க வேலை ஆளை நம்பி குடும்ப விஷயத்தை பேசுவதா??? இதில் தப்பு யார் பக்கம்??? பெண்களுக்கே உள்ள கதைக்கும் சுபாவம் தான் இது... சில விஷயங்களை அருசுவையில் பகிரங்கமாக பேசுவது போல் தான் வேலைக்கறர்களிடம் சொல்வதும். நாம தான் உஷார இருக்கனும்... சொல்லிட்டு சொல்லிடுவாங்க்ளோன்னு பயம் ஏன்?? சொல்லிட்டா பிரெச்சனை ஆயிருச்சுன்னு புலம்பல் ஏன்... நமக்கு அந்த கண்ட்ரோல் கூட இல்லாம போகலாமா? வேலைக்கு வருபவர்களை வேலைகாரர்களாக மட்டுமே நடத்துங்க. குடும்பத்தினராக நடத்துவது கூடாது. உதவுங்க, டீ, காபி போட்டு கொடுங்க பாவம் நமக்காக வேலை செய்பவருக்கு இதெல்லாம் செய்யலாம் தப்பில்லை... ஆனால் நம்பிக்கை வெச்சு பீரோ சாவியை கையில் கொடுக்கலாமா?? கூடாது தானே?? அப்படி தான் நம்ம வீட்டு விஷயம் என்ற பெட்டியும் பூட்டியே இருக்கனும்.

பெண்களுக்கு தன் சொந்த விஷயங்களை பிறரிடம் புலம்பும் குணம் இயற்கையா உள்ளது... அது வேலைக்காறர்கள் என்றில்லை, பழகும் தோழிகளிடமும் நடக்கும்... அவங்களை மட்டும் எப்படி நம்பறீங்க??? அதுவும் ஆபத்து தானே... ஆப்போ மாற்றம் நம்மிடம் தான் வரனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவருக்கு வணக்கம்....வாழ்த்தோடு நிக்க முடியாத தலைப்பு....அதான் வாதம் பண்ணி பாத்துடுவோம்னு வந்துட்டேன்!!!

வீட்டில் வேலைக்காரர்கள் உதவிதான் என்ற அணிக்குதான் என் ஓட்டு....

*எல்லா வீட்டு வேலைகளையும் ஒருவரே செய்யும்போது அலுப்பும், சோர்வும் ஏற்படும்.

வீட்டில் அதிகப் படியான வேலைகளைச் செய்ய முடியாது.

ஒரு விசேஷம், விருந்தாளிகள் வருகையின் போது வேலைக்காரி இல்லாத நிலைமையை...ம்ஹூம்....என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

*ஏதோ அப்பப்ப லீவ் போட்டாலும் அவள் வந்த அந்த நிமிடம் ஏற்படும் நிம்மதி எல்லா இல்லத்தரசியும் அறிந்த ஒன்று.

*அவ்வப்போது அவளிடமிருந்து கிடைக்கும் அடுத்த வீட்டு, எதிர்த்த வீட்டு வம்பு, வழக்குகள் நமக்கு ஒரு டைம்பாஸ்!!!

*எல்லாவற்றிற்கும் மேல் சமயத்தில் மீந்து போகும் சாப்பாட்டைக் வீணாக்காமல் ஒருவருக்கு கொடுத்த மனத் திருப்தி...

இப்படி நிறைய பாயிண்ட்ஸ் இருக்கு நடுவரே....எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்க விரைவில் வருவேன்!!!

நான் சொன்னதில் ///வேலைகாரர்களுக்காக பயந்து கதவைப் பூட்டிக்கொண்டு எப்பொழுதும் பேச முடியுமா/// இதை கவனிக்கவும்...........வேலைக்காரர்களிடம் இப்படி பேசுவது சரி அல்ல அதை நான் ஒத்துக்கிரேன் .நம்ம அவங்க கிட்ட சொன்னாதான் வெளியில் போகும்னு இல்லை நம்ம வேரு ஒருவரிடம் பேசுவதை அவங கேட்டலும் அது வெளியில் போக வாய்ப்பு இருக்கே ... எத்தனை நாள் தான் அவர்களுக்காக பயந்து ஒதுங்கியே பேச முடியும் ................ வேலைக்கு ஆள் எடுக்றவங்க நீங்க சொன்ன பட்டியலில் உள்ள விஷயத்துக்காக தான் எடுக்றாங்க...ஆனா இறுதியில் இப்படி தான் முடியும்

சிம்ரா, வாங்க..வாங்க... வரும்போதே அணியையும் முடிவு செய்துட்டு, வாதத்தோட எக்ஸ்பிரஸ் வேகத்துல வந்திருக்கீங்க. நல்லது.
//பார்த்த உடனே எல்லாரையும் நம்புவது....... அதனால் விளைவது நம்ம வீட்டு ரகசியங்கள் அடுத்த வீட்டில் பேசப்படுது.// இப்போதுள்ள பெண்களில் சிலர் பக்கத்து வீட்டு கதையை கேக்கவே வேலைக்காரர்களை வச்சிருக்கறதாகவும் கேள்விபட்டேன். அப்படீங்களா?

குடும்பத்துல நடக்குற விஷயங்கள் நாம் சொல்லாவிட்டாலும் கூட, வீட்டில் நடக்கும் அன்றாட நிலவரங்களை வைத்து அவர்களே கதை-திரைக்கதை-வசனம் எல்லாம் எழுதி அக்கம்பக்கம் டிஸ்ட்ரிபியூட் பண்ணிடுவாங்க. ஆக.. வேலைக்காரர்கள் உபத்திரவமேன்னு சிம்ரா மனம் வெதும்பி சொல்லிட்டு போய்ட்டாங்க.

எதிரணியினரே நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க சிம்ராவுக்கு?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி. //தலைப்பு என்னோடதா ;) எதுக்கோ பழி வாங்குறாப்பல இருக்கே... // நான் ரெம்ப சின்னபுள்ளைங்க எனக்கு பழிவாங்கலாம் தெரியாது ;) ரொம்ப நாளா இந்த வேலைக்காரங்க பண்ற ரவுசு என்னை பாடாய் படுத்தி எடுத்துட்டு இருக்கு. அதை கொட்ட ஒரு சந்தர்ப்பத்தை உங்க தலைப்பு தேடித் தந்தது. அதனாலேயே இந்த தலைப்பை எடுத்துவிட்டேன்.

//என்ன தான் மாமியார், சொந்த பந்தம் உடன் இருந்தாலும் நம்ம விருப்பபடி வேலை செய்து கொடுக்க மாட்டாங்க... உரிமையோட இதை இப்படி செய்யுங்கன்னு சொல்லவும் முடியாது. ஆனா வேலை ஆள் இருந்தா நாம விருப்பபடி செய்ய வைக்கலாம். நாமும் சங்கட பட வேண்டாம் தானே.//ம்ம்... சரியா சொன்னீங்க.. மாமியார்,நாத்தனாரை நினைச்சுட்டு அதட்டி, உருட்டி வேலை வாங்கி ஒரு அற்ப ஆசையை தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் ;))

//பெண்களுக்கு தன் சொந்த விஷயங்களை பிறரிடம் புலம்பும் குணம் இயற்கையா உள்ளது... அது வேலைக்காறர்கள் என்றில்லை, பழகும் தோழிகளிடமும் நடக்கும்... அவங்களை மட்டும் எப்படி நம்பறீங்க??? அதுவும் ஆபத்து தானே... ஆப்போ மாற்றம் நம்மிடம் தான் வரனும்.// ஏங்க..வாலண்டரியா போய் உங்க குடுமியை வேலைக்காரிகிட்ட தந்துட்டு அவஸ்தைபடனும்?

வனிதா, பாயிண்டு பாயிண்டா வேலைக்காரர்கள் உதவியை புட்டு புட்டு வச்சிருக்கீங்க. இதில் எதையும் மறுக்க முடியாது.

என்னப்பா எதிரணி ஒருவரில உங்க உபத்திரவத்தை சொல்லிட்டு போய்ட்டீங்க. இப்ப வனிதா இவ்ளோஓஓஒ... பெரிய லிஸ்ட் போட்டு அவங்க பக்க நியாயத்தை சொல்லியிருக்காங்க. உங்க லிஸ்ட் தயாரா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்