தேதி: December 27, 2011
பேப்பர் கப்
வண்ணங்கள்
பிரஷ்
கத்தரிக்கோல்
பசை
தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு பூ செய்ய இரண்டு கப்கள் தேவை.

கப்பின் விளிம்பை கவனமாக வெட்டவும்.

நீளவாக்கில் கப்பில் முக்கால் பாகம் வரை மட்டும் சிறிது இடைவெளி விட்டு விட்டு வெட்டவும்.

வெட்டிய பாகங்களை நன்றாக விரித்து விடவும்.

ஒவ்வொரு இதழையும் நுனியில் தாமரை இதழ் வடிவில் வெட்டவும். இது போல் இரண்டு கப்களையும் செய்யவும்.

இதழ்களுக்கு பொருத்தமான வண்ணம் தீட்டவும். ஒரு பூவிற்கு மட்டும் மகரந்தம் போல் உள்ளே வண்ணம் தீட்டினால் போதுமானது.

ஒரு பூவின் உள் பகுதியில் மற்றொரு பூவை பசை மூலம் ஒட்ட வேண்டும். இதழ்களை நன்றாக பொருந்தும் படி ஒட்டி விரித்து விட வேண்டும்.

அழகிய பேப்பர் கப் தாமரை ரெடி. இதே போல் சூரிய காந்தி பூவும் செய்யலாம்.

Comments
ப்ரியா
ரொம்ப கியூட்டா இருக்குங்க. அதுவும் தாமரை பூ ரொம்ப ரொம்ப அழகு. வாழ்த்துக்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ப்ரியா சூப்பர்ப்
ரொம்ப அழகு ப்ரியா இரண்டுமே எனக்கு சன்ப்ளவர் ரொம்ப பிடிச்சுருக்கு. ஈஸியான செய்முறையாவும் இருக்கு.
ப்ரியா
பேப்பர் கப் ப்ளவர்ஸ் அழகா இருக்கு வாழ்த்துக்கள். நானும் ஒன்னு செய்து வைச்சுக்க போறேன்.
கப் தாமரை
அழகா இருக்கு ப்ரியா. ஷேடிங் சூப்பர்.
- இமா க்றிஸ்
so cute... keep it up
so cute... keep it up
wow,,,superrrrrrrr.....
wow,,,superrrrrrrr.....
All is well...
very nice,its very simple
very nice,its very simple method i will try and suggestion send to u
UR FLOWER IS CUTE MAM
UR FLOWER IS CUTE MAM
hi
romba simplela athe time romba alga iruku pa