பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்,அலை ஓசை யாரவது படிச்சிருக்கீங்களா,இந்த புக்ஸ் பற்றி சொல்லுங்களேன்?உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது?

பொன்னியின் செல்வன் நாவல் படிக்க படிக்க மிக சுவரசியமாக இருக்கும்.....ஆனால் அதன் முடிவு எழுதுவத்ற்க்குள் திரு கல்கி அவர்கள் இறத்துவிட்டார் அதனால் படித்து முடிததவுடன் திருப்த்தியகாக இருக்காது.......

பிரியா ,புது செய்தி சொன்னதுக்கு நன்றி ,இதை நான் இப்பதான் கேள்விபடுறேன்.வேறே கல்கியோட நல்ல படைப்புகள் ,பாத்திரங்கள் பற்றி முடிஞ்சா சொல்லுங்க,மற்ற படிக்க வேண்டிய புக் பற்றி முடிஞ்சா சொல்லுங்க,ஆனால்,பதிலுக்கு ரொம்ப நன்றிபா

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

அலைஓசை, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், தியாகபூமி, ஆகியவை கல்கியின் புகழ் பெற்ற படைப்புகள். நீங்கள் விரும்பினால் ஜெயமோகனின் சிறுகதை தொகுப்புகள் படித்து பாருங்கள். அதில் "நூறு நாற்காலிகள்" படியுங்கள் ஒரு நல்ல வாசிப்ப்பு அனுபவம் கிடைக்கும்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஹாய்

கல்கி,ஜெயமோகனின் புகழ் பெற்ற படைப்புகலை படிக்க நீங்கள் விரும்பினால் (http://www.projectmadurai.org/pmworks.html go to this website and download)மிகவும் இனிமையக இருக்கும் இந்தியாவில் இருந்தால் புத்தகம் வாங்கலாம். Or we should download.

,மிக்க நன்றி தோழிகளே,ரொம்ப பயனுள்ள தகவல்கள்.அலை ஓசை படித்து விட்டேன்,எனக்கு பிடிக்கவில்லை.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

தமிழில் வெளியான சிறந்த நாவல்களில் ஒன்று கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன். இன்றைய நவீன யுகத்தில், கூகிள் பயன்படுத்தி நாம் கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்களை ஆராய்ந்து அறிந்து கல்கி எழுதிய வரலாற்று நாவல் அது. எந்த வயதினரும் படிக்க தக்க விதத்தில் எழுத பட்டிருப்பது பொன்னியின் செல்வனின் தனி சிறப்பு. பிற்காலத்தில் ராஜ ராஜ சோழன் என்று பெயர் பெற்ற அருள் மொழி வர்மன் பற்றிய கதை என்ற போதும் கதையின் கதாநாயகன் வந்தியத்தேவன் தான். பொன்னியின் செல்வன் படித்து விட்டு வந்திய தேவனை பிடிக்காது என்று சொன்னவர்கள் யாரும் இல்லை. தமிழ் படிக்க தெரிந்தவர் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நல்ல புதினம் பொன்னியின் செல்வன்.

பொதுவாக அந்த காலத்து கதைகள் / திரைப்படங்களில் நாம் காணும் பெண்களில் இருந்து கல்கியின் கதையில் வரும் பெண்கள் மாறுபட்டு இருப்பார்கள். காதல், திருமணம், கணவன், குடும்பம் என்பதெல்லாம் தேவை என்ற போதும், சுயமரியாதையும் தைரியமும் உடையவர்கள் கல்கியின் கதாநாயகிகள்.

கல்கி எழுதிய மற்றுமொரு அற்புதமான நாவல் தியாக பூமி. விடுதலை போராட்ட காலத்திற்கு முன்பே எழுத பட்ட இந்த கதையின் நாயகி சாவித்ரியை வெறுக்கிறான் அவள் கணவன். பின் அதே சாவித்திரி நாகரிக பெண்ணாக மாறிய பின் அவளுடன் சேர்ந்து வாழ ஆசை படுகிறான். ஆனால் சாவித்திரி மறுக்கிறாள். அவள் கணவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடருகிறான்... அப்போது சாவித்திரி சொல்கிறாள்,
"கணவன் மனைவியுடன் வாழ விரும்பா விட்டால் அவளுக்கு ஜீவனாம்சம் என்று ஒரு தொகையை அளித்து விலகி விடலாம்... ஒரு பெண் அதை செய்ய கூடாதா? எனக்கு என் கணவரோடு வாழ விருப்பம் இல்லை... அவருக்கு நான் ஜீவனாம்சம் தருகிறேன்..."
என்று. இந்த கதையை கல்கி எழுதியது 1939ம் வருடத்தில். பொன்னியின் செல்வனை போலவே தியாக பூமியும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு உயர்ந்த சமூக நாவல்.

தமிழில் நான் முதன் முதல் படித்த நாவல் பொன்னியின் செல்வன்.. அதை ஒரு ஆயிரம் முறை படித்திருப்பேன் இருந்தும் இன்று வரை பொன்னியின் செல்வன் எனக்கு அலுத்ததே இல்லை... வந்திய தேவனும், குந்தவையும் என்னுடைய மனம் கவர்ந்த நாயகன் நாயகி மட்டும் அல்லாது என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ,மாறி விட்டார்கள். நேரம் கிடைத்தால் கட்டாயம் படியுங்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

bivi உங்களோட இந்த பதிவ படிச்சதுமே ஏதோ ஒரு உணர்வு இந்த நாவலை படிக்கனும்னு ரொம்ப ஆர்வம் அதரிச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் சீக்கிரம் தேடி பிடிச்சாவது படிச்சுடுறேன்ங்க. இப்படி ஒரு நல்ல புதினத்தை சுட்டி காட்டியமைக்கு ரொம்ப நன்றியும் கூட உங்களுக்கு. ஆயிரம் முறை படிக்கும் அளவுக்கு அவ்வளவு சிறந்ததான்னு எனக்கு ஆச்சரியமாகவே இருக்குங்க.

ஹலோ உமா... கட்டாயம் படியுங்க... ஆனால் அது அவ்வளவு சிறந்ததான்னு கேள்வியோட படிக்காதீங்க :) பொன்னியின் செல்வன் படித்தால் உங்களுக்கு சோழர் காலத்திற்கே போனதாக ஒரு பீல் ஏற்படும்... அது படித்தால் உங்களுக்கே புரியும்....

பொதுவாக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான craziness இருக்கும்... என்னுடையது புத்தகம் படிப்பது... எனக்கு பிடித்தது போல் புதிய கதை எதுவும் இல்லையென்றால் பொதுவாக முன்பெல்லாம் பொன்னியின் செல்வன் படிப்பேன்... இப்போதெல்லாம் ரமணி சந்திரன் கதைகள் படிப்பேன் :)

- பிந்து

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

எனக்கு புங்குழலி கதா பாத்திரம் மிகவும் பிடிக்கும். வந்திய தேவனோடு நானும் பயணிக்கிறன்

Be simple be sample

என்னோட உண்ர்வுகளை நீங்களே பதிவு செய்திடிங்க.படிகாதவங்களைய்ம் படிக்கிற உணர்வை ஏற்படுத்திடிங்க. நாமும் சோழ பிரதேசத்துக்குள் பயணிக்கிறோம்

Be simple be sample

மேலும் சில பதிவுகள்