நான் கர்ப்பமா?

நான் தற்போதுதான் இதில் பதிவு செய்திருக்கின்றேன். இதில் இருக்கும் பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது. அதனால் எனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை உங்களிடம் கேட்டு கொள்ள ஆசைப்படுகின்றேன்.

எனக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகின்றது. எனக்கு பீரியட்சிற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கின்றது. எனக்கு இதுவரை மாதவிடாய் மிக சரியாகவே வந்து விடுகின்றது. ஆனால் தற்போது எனது அடி வயிறு வழக்கத்தை விட அதிகமாய் கனமாய் இருப்பதை போன்ற உணர்வு இருக்கின்றது. வழக்கம் போல் என்னால் உட்காரவோ, தரையில் அமரவோ முடியவில்லை. மூச்சு திணறுவது போல் இருக்கின்றது. வழக்கத்தை விட அதிகமாய் சோர்வாய் இருக்கின்றது.

ஆனால் எந்த தடவையும் இல்லாத வகையில் இந்த தடவை அடி வயிறு வலி அதிகமாய் இருக்கின்றது. வயிறுக்குள் ஏதோ ஒரு தண்ணீர் இருப்பது போன்ற உணர்வு. ஏதோ ஒன்று குலுங்கி கொண்டே இருப்பது போன்ற புதிய உணர்வு தோன்றுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது? நான் தற்போது என்னென்ன உணவுகளை மேற்கொள்ள வேண்டும்.

இது கற்பத்தின் அறிகுறியா? தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நன்றியுடன்....பால்சி

உங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகிருக்கு பா... எதாச்சும் அறிகுறி தெரிகிறதா....

ஹாய் தோழிகளே,
எனக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. எனக்கு வழக்கமாக 28வது நாள் Periods வந்துவிடும். ஆனால் கடந்த மாதம் 34 நாட்கள் ஆனது. இந்த மாதம் 38 நாட்கள் ஆகி இன்னும் வரவில்லை. 35வது நாள் Pregnancy test செய்து பார்த்தேன். ஆனால் Result Negative . நான் கற்பமாக இருக்க வாய்ப்பு உள்ளதா? இல்லை நான் மருத்துவரிடம் சென்று Check up செய்யலமா? கூறவும்.

அன்புடன்,
ரேகா சுரேஷ்

நீங்கள் கர்பமாக இருக்க வாய்ப்பிருப்பின் மறுமுறை கூட டெஸ்ட் செய்து பார்க்கலாம். மறுமுறை கிட் வாங்கி காலை முதல் சிறுநீரில் செக் செய்யவும். பெரும்பாலும் அந்த ரிசல்ட் கண்டிப்பாக கரக்ட்டாகவே இருக்கும். இங்கே மருத்துவரும் முதல் பரிசோதனையை இப்படியே செய்ய சொல்லுவார். மேலும் உங்களுக்கு சந்தேகமாக இருப்பின் மருத்துவரிடம் சென்று சிறுநீர் பரிசோதனை செய்துக் கொள்ளலாம்.

சில நேரங்களில் திருமணம் ஆனபிறகு சிலருக்கு இப்படியாக தள்ளி போகலாம். சாப்பாடு சரியில்லை என்றாலும் தள்ளி போகலாம். இல்லை அதிகப்படியான ட்ராவல் இப்படி இருந்தாலும் தள்ளி போகலாம். ஆல் த பெஸ்ட்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

enaku marriage agi 1 1/2 month aguthu. kulanthai ella.enaku neerkati & my husbandku semen count , motlity low va eruku. dr ta poi tablet eaduthukiten but no improvement. enaku food habits & veetilaiye medicine aedukura mathiri vali soluga

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி லாவண்யா.
ஆனா எனக்கு periods ஆகிருச்சு :( இன்னக்கி.
நீங்க சொன்னதும் சரி தான் நான் சரியாய் சாப்டுறது இல்லை. எனக்கு திருமணம் ஆகி 8 மாதம் ஆகிறது. திருமணமான 20 நாட்களிலே நாங்க US வந்துட்டோம். இங்க எனக்கு friends யாரும் இல்ல. வீட்டில் தனியாக இருப்பதால் வேளைக்கு சாப்பிடுவது இல்லை. நான் ரொம்ப வீக் ஆனது என்னால் உணர முடிகிறது. Sorry லாவண்யா. ஏதோ சொல்லணும் போல இருந்தது அதான் சொன்னேன்.

அன்புடன்
ரேகா சுரேஷ்

Dear Friends - Hope you are all doing well. I am new to Arusuvai, Sorry for posting in English, I shall try my best to post in Tamil from next time onwards.

Its been almost 2 years since I got married, We did not try for baby for first 1 year, I was not on any birth control pills as well. We have started trying for baby in March 2011, But I was unaware of ovulation timings, fertility window..etc. By the time I got to know these, I had my appendicitis surgery done in May 2011. We did not try for couple of months and we have again started trying since July 2011. Nothing has happened until Sep though we had intercourse during fertility window. I have regular periods(28 days). It was 4 days delayed in Oct and the home pregnancy test came out positive, But it got miscarried on 33 days with huge pain. The same has happened the next month(Nov) as well. I am scared nowadays. I started taking Prenatal MultiVitamin and have been consuming for past 1 1/2 months. My last period was on jan 06. This time I feel having pregnancy symptoms but the home pregnancy test came out negative on 25th day. In case if I m pregnant, I donno what all to be taken care to not loose this time.

I am really confused with my 2 consecutive miscarriage. its been difficult getting doctor appointment here in US when we in need. I lost my confidence and donno what to expect, Plsss advise if you have any clue.

Awaiting your valuable response.

Regards,
Anitha.

Always remember that you are absolutely unique. Just like everyone else.
Anitha.

அன்பு அனிதா....

உங்க பிரெச்சனை என்னன்னு எனக்கு சரிய தெரியல, எதனால் இப்படி 2 முறை ஆனதுன்னு கெஸ் பண்ன கூட முடியல. வருத்தமாகவே இருக்கும். புரிகிறது.

எனக்கு தெரிஞ்சு சில ஆலோசனைகள்:

//I am really confused with my 2 consecutive miscarriage.// & //I lost my confidence and donno what to expect// - இதை முதல்ல விடுங்க. இந்த குழப்பம், நம்பிக்கை இன்மை, எதிர்பார்ப்பு, டென்ஷன் இது தான் கரு உண்டாக முதல் எதிரி. இது இல்லன்னாலே நிச்சயம் கரு உண்டாகும்.

அடுத்தது... நீங்க பண்ண ஆப்பரேஷன் பற்றி உங்க கைனகாலஜிஸ்ட் கிட்ட சொல்லி ஆலோசனை கேளுங்க. அதனால் ஏதும் பிரெச்சனை இருக்கா என கண்டரிய.

அடுத்து... நீங்க சாப்பிடும் மல்டி விடமின் போதுமானதா, அல்லது ஃபாலிக் ஆசிட் மாத்திரைகள் தேவையா எனவும் மருத்துவரைடம் ஆலோசனை கேளுங்கள். இது ஆரம்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

முடிஞ்ச வரை முழுமையாக ஒரு டெஸ்ட் எடுத்துடுங்க... அது உங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கும். ஏன் சொல்றேன்னா, இது போல் மீண்டும் மீண்டு ஆனால் கருப்பை பாதிக்கும், அதனால் முறைப்படி டாக்டரை அனுகி, முழுமையான பரிசோதனைக்கு பின் தாயாக முயற்சி செய்வது நல்லது.

நான் சொன்னதுல ஏதும் தப்பிருந்தா மன்னிக்கனும்... உங்க பதிவை படிச்சு வருத்தமா இருந்தது, எனக்கு தெரிஞ்சதை சொல்ல வந்தேன். இங்க தோழிகள் பிரெச்சனை பற்றிய அனுபவம் இருந்தால் அவசியம் சொல்வாங்க. பயப்படாதீங்க.

நீங்க விரைவில் தாய்மை அடைந்து நல்லபடியாக ஆரோக்கியமான பிள்ளையை பெற்றெடுக்க பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Dear Vanitha, Thanks a lot for your reply, It means a lot to me.

Last week the Gynecologist has suggested me a fertility Evaluation. As it was around implantation period, I thought of waiting until this complete cycle and then to plan for fertility evaluation, 2 more days to go for the result:).
I too have a doubt if the surgery has something to do with this as the laproscopy was done near uterus. We didnt go for scan though. But the gyne has not listen any of my concerns and doubts and suggested for fertility evaluation in a single word.

Hoping for the best and expecting to hear from God.

Always remember that you are absolutely unique. Just like everyone else.
Anitha.

ஏப்படி இருக்கிறேஎர்கள்? உங்கள் ரத்த பரிஸோதனை என்ன ஆயிட்று?

Always remember that you are absolutely unique. Just like everyone else.
Anitha.

அனிதா நீங்க வனி சொன்ன மாதிரி ரத்த பரிசோதனை செய்து பாருங்க..ரத்தத்தில் சிலது கம்மியா இருந்தாலும் இப்படி ஆகலாமாம்...உங்க டாக்டருக்கு இது தெரியாமல் இருக்காது தான் இருந்தாலும் மற்ற பல சோதனைகள் செய்யும் முன்பு பேசிக் ரத்தப் பரிசோதனை செய்துக்குங்க..ஹீமோக்லோபின் குறைவு என்றாலும் கூட நீங்க பொறுத்திருந்து எல்லாம் சரியான பின்பு தான் அடுத்தது முறை ட்ரை பண்ணுவது நல்லது

மேலும் சில பதிவுகள்