நான் கர்ப்பமா?

நான் தற்போதுதான் இதில் பதிவு செய்திருக்கின்றேன். இதில் இருக்கும் பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது. அதனால் எனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை உங்களிடம் கேட்டு கொள்ள ஆசைப்படுகின்றேன்.

எனக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகின்றது. எனக்கு பீரியட்சிற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கின்றது. எனக்கு இதுவரை மாதவிடாய் மிக சரியாகவே வந்து விடுகின்றது. ஆனால் தற்போது எனது அடி வயிறு வழக்கத்தை விட அதிகமாய் கனமாய் இருப்பதை போன்ற உணர்வு இருக்கின்றது. வழக்கம் போல் என்னால் உட்காரவோ, தரையில் அமரவோ முடியவில்லை. மூச்சு திணறுவது போல் இருக்கின்றது. வழக்கத்தை விட அதிகமாய் சோர்வாய் இருக்கின்றது.

ஆனால் எந்த தடவையும் இல்லாத வகையில் இந்த தடவை அடி வயிறு வலி அதிகமாய் இருக்கின்றது. வயிறுக்குள் ஏதோ ஒரு தண்ணீர் இருப்பது போன்ற உணர்வு. ஏதோ ஒன்று குலுங்கி கொண்டே இருப்பது போன்ற புதிய உணர்வு தோன்றுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது? நான் தற்போது என்னென்ன உணவுகளை மேற்கொள்ள வேண்டும்.

இது கற்பத்தின் அறிகுறியா? தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நன்றியுடன்....பால்சி

ennaku conform akiramathiri theriuthu but antha month la conform aka matikiren , nanga intercourse correct ta panurom but en preganant agamatikiren entha position la evalo neram pananum. intercourse panitu again antha month la intercourse panakudatha

hi sisters ,நான் இப்பதான் முதல்முதலில் பதிவு செய்கிறேன் .எனக்கு திருமணம் ஆகி 2 வருஷம் ஆச்சு ,10 மாதங்களாக குழந்தைக்கு முயற்சி செய்து வருகிறேன் .டாக்டர் கிட்ட போனப்போ எனக்கு நீர் கட்டி இருக்குனு சொன்னங்க .இப்போ 3 மாசமா மாத்திரை எடுத்துட்டு இருக்கேன் .நீர் கட்டிகாக கருத்தடை மாத்திரை கொடுத்தாங்க .இந்த மாசம் மாத்திரை finish ஆகுது .கருத்தடை மாத்திரை நிறுத்தின உடனேயே குழந்தைக்கு முயற்சி செய்யலாமா ?help me pls ...

Please I dont understand this type of massages

வணக்கம் எனக்கு டேட்ஸ் தள்ளிப்போய் 13 நாள் ஆகுது லாஸ்ட் 3 டேஸ் லைட்ட வெள்ளை படுது ரொம்ப கம்மியா தான் படுது நான் கர்ப்பம்மா இருக்குரான தெரியல

Hii sisters enoda age 23 ..na enoda udampa pathi adhigama kavalai padren yen nu therla adikadi vali erukum chest and back pain amma kitta sonen gastric nu sonanga raw garlic and pepper sapda sonanga saptadhum vali poidum ..ipo leg la pain eruku thigh bones valikithu nadakum podhum vali eruku somtime irritation eruku feet light ah valikithu idhu illusion la valikitha nu therla but im not comfortable idha epdi sari pandrathunu sollunga sisters plsss

இன்னும் 2 நாட்கள் கழித்து ப்ரெக்னன்சி டெஸ்ட் பண்ணிப் பாருங்க, தெரியும்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் ஒரேயொரு தரவு - உங்கள் வயதை மட்டும் தான் சொல்லியிருக்கிறீர்கள். வேறு விபரங்கள் இல்லை.

அனீமிக்காக இருந்தாலும் இப்படி இருக்கலாம்; எடை அதிகமாக இருந்தாலும் இப்படி இருக்கலாம். வைட்டமின் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம்; நீங்கள் செய்யும் வேலை காரணமாக இருக்கலாம்; ஸ்ட்ரெஸ் காரணமாகவும் இருக்கலாம். இல்லாமல் உங்கள் கற்பனை என்றேதான் வைத்துக் கொண்டாலும், ஒரு தடவை மருத்துவரிடம் பேசிவிட்டீர்களானால் மனம் தெளிவாகிவிடும். நிம்மதியாக இருப்பீர்கள். சிகிச்சை தேவைப்படும் விடயம் என்றாலும் ஆரம்பத்தில் கவனிப்பதுதானே சிறந்தது. அம்மா சொன்னதைச் செய்தீர்கள். பிரச்சினை தொடருகிறது எனும் போது காட்டிவிடுவதே நல்லது. எக்சர்ஸர்சைஸ் தேவையான அளவு கிடைக்கிறதா? எம் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் அப்பியாசங்கள் அவசியம். சும்மா விட்டுவைத்தாலும் திடீர் திடீரென்று வலிகள் வரும். அணியும் ஆடைகள் & காலணிகள் சரியான அளவுகளில் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

Enaku periods sariya vara maatingithu 2 days dhan erukuthu 1 pad kuda full agala..last 2 months apdi dhan eruku ..enaku epovume 5 days erukum first 3 days adhigama erukum remaining light ah erukum but ipo apdi ila just 2 days dhan eruku ..white discharge adhigama eruku ..last month tabler potu dhan periods vandhichu doctor dhan tablet kuduthanga periods vandhadhum
Vara sonanga but lockdown la poga mudila 25 th periods vandhichu ipo inum 5 days eruku periods fulla varathuku enna pananum

கட்டாயமாக இத்தனை நாட்கள் இருந்தாக வேண்டும் அல்லது இத்தனை மில்லிலீட்டர் இரத்தம் வெளியேற வேண்டும் என்கிறது இல்லை. ஒவ்வொருவர் உடல் ஒவ்வொரு மாதிரி இருக்கும். மருத்துவர் உதவியை நாடி இருக்கிறீர்கள் என்பது நல்ல விடயம்.

//lockdown la poga mudila// இந்தியா, இலங்கையில் என்றால் கூட தேவைக்கும் மருத்துவரிடம் போகக் கூடாது என்று சட்டம் இருக்க முடியாது. நீங்கள் ஃபோன் பண்ணிப் பாருங்க. கடைசியாகப் போன தேதி, மருந்து விபரங்களையும் ஒரு பேப்பர், பேனாவும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். கேட்க வேண்டிய கேள்விகளை ஒரு லிஸ்ட் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். மாத்திரைகளை எப்போது ஆரம்பிப்பது, எப்படி எடுப்பது, முடியும் சமயம் என்ன செய்ய வேண்டும் என்று தேவையானதாகத் தோன்றும் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மாத்திரையின் பெயர் சரியாகப் புரியாவிட்டால், ஸ்பெல் பண்ணச் சொல்லிக் கேட்டுக் குறித்துக் கொள்ளுங்கள். ஊகித்து எழுத வேண்டாம். (இங்கு மருத்துவர்கள் எங்கள் அருகே உள்ள ஃபார்மஸிக்கு ப்ரிஸ்க்ரிப்ஷனை ஈமெய்ல் செய்கிறார்கள்.) நீங்கள் ப்ரிஸ்க்ரிப்ஷனை உங்களுக்கு மெசேஜ் செய்யச் சொல்லிக் கேட்கலாம். உங்கள் மருத்துவர் over the phone ஆலோசனை சொல்லலாம். உங்களுக்குக் கொடுத்த மாத்திரை, அனேகமாக நீங்கள் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் ஃபார்மஸியில் வாங்கக் கூடியதாகவே இருக்கும்.

//periods fulla varathuku enna pananum// இந்த 'ஃபுல்' என்பது இன்ன அளவுதான் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கு ஒரு விதம்; அதுவும் கூட ஒவ்வொரு வயதுக்கு ஒருவிதமாக இருக்கும். இதைப் பற்றி யோசிக்காமல் உங்கள் டாக்டருக்கு ஃபோன் போடுங்க. சிகிச்சையை, விட்டு விட்டு எடுப்பதால் பயனில்லை. தொடர்ந்து எடுக்க வேண்டும். அப்போது தான் ஹோர்மோன் லெவல் தொடர்ந்து சீராக இருக்கும்; உடல் ஒரு ரூட்டீனுக்குப் பழக்கப்படும்.

‍- இமா க்றிஸ்

சில நாட்களாக வெள்ளைப்படுதல் அதிக நீர்த்த தன்மையில் வருகிறது, இதற்கு என்ன காரணமாக இருக்கலாம், எதுவும் பயப்படும் படியாக இருக்குமா?!

மேலும் சில பதிவுகள்