அமுக்கு முட்டை பொரியல்

தேதி: July 15, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 2
மலைப்பூண்டு - 3 பல்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - கால் ஸ்பூன்


 

முட்டையை முக்கால் அவியலாக அவித்து ஓடு நீக்கிக்கொள்ளவும். பிறகு உள்ளங்கையில் வைத்து மெதுவாக அமுக்கி அதை தட்டை வடிவமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அமுக்கிய முட்டையை இரண்டு பக்கமும் லேசான முறுகலாக பொரித்துக் கொண்டு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, நசுக்கிய பூண்டு அனைத்தையும் சிறிது தண்ணீர்விட்டு கரைத்து அதன் மேல் ஊற்றி, 2 நிமிடம் மூடிபோட்டு வைக்கவும்.
பிறகு ஒரு தட்டையில் முட்டையை எடுத்து வைத்து, எண்ணெயுடன் கலந்துள்ள மசாலாவை அதன் மேல் ஊற்றி பரிமாறலாம்.


இதற்கு சாதாரண பூண்டும் பயன்படுத்தலாம். ஆனால் சற்று அதிகமாக்கிக் கொள்ளவேண்டும். முட்டை முக்கால் வேக்காடாக இருப்பதற்கு, வேகவைக்கும்போது மூடிபோட்டு சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் வரை வேகவைத்தால் போதுமானது. முழுமையாக வெந்துவிட்டால் அமுக்கி விட்டு பொரிக்க முடியாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்மா.... அமுக்கு முட்டைப் பொரியல் செய்திட்டேன்... ஆனால் உங்கள் படத்தில் உள்ளதுபோல் எனக்கு வரவில்லை, அவிந்தது காணாதுபோல. ஆனால் நன்றாகவே இருந்தது. முட்டை என்றாலே எப்படியும் சாப்பிட்டுவிடலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நானும் இன்று அமுக்குமுட்டை பொரியல் செய்தேன். சுவை அருமை... முட்டைய வேகபோட்டு இதர பல வேலைகள் செய்ததால் 3 நிமிஷம் ரூல் மறந்திட்டது :(( ஆனாலும் விடாமல் அமுக்கியதில் 3 முட்டைக்கு வாய்பிளந்து உள்ளே என்ன இருக்குன்னு ஒரு பிக்க-பூ காமித்தாலும்.. விடாமல் செய்முறை படி செய்து சாப்பிட்டாச்சு.. நல்ல ருசி...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..