5 வாரம் கர்ப்பம் - Hypothyroid problem

நான் அறுசுவை-யில் புதிதாக இணைந்துள்ளேன். எனக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. டிசம்பர் மாதத்தில்(போன வாரம்) நாட்கள் தள்ளி போனதால் டாக்டர்-ரிடம் செக்கப் செய்தேன். 5 வாரம் கர்ப்பம் என்று சொன்னார்கள். ரத்த பரிசோதனையில் HCG அளவு சரியாக உள்ளது. ஆனால், எனக்கு hypothyroid பிரச்சனை இருப்பதாக கண்டு பிடித்துள்ளார்கள்.மாத்திரை தந்துள்ளனர்.
இன்று ஸ்கேன் செய்து பார்த்ததில், yolk sac 4mm இருப்பதாகவும், heartbeat தெரியும் வரை எதுவும் confirm- ஆக சொல்ல முடியாது என்றும் கூறி விட்டனர். யாருக்காவது thyroid பிரச்சனை பற்றி தெரிந்தால் கூறுங்களேன்.

ஹைபோதைராய்டிசம் எனக்கும் இருக்கிறது. 9 வருடங்களாக தினமும் மாத்திரை எடுக்கிறேன். எந்த விதமான பக்கவிளைவுகளும் இல்லை; நன்றாகத்தான் இருக்கிறேன்.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்போம். என் அனுபவம்போல் உங்களுக்கு இருக்கவேண்டும் என்பது இல்லையல்லவா! உங்களைப் பரிசோதிப்பவர்கள் சொல்வதுதான் எப்போதும் சிறந்த அறிவுரையாக இருக்கும். பயமில்லாமல் அவர்கள் சொன்னதுபோல் செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

எனக்கொரு சந்தேகம்.தைரொய்டு பிரச்சினை இருந்தால் சிகிச்சை,மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்பொழுது கர்ப்பம் தரிக்குமா?

நீங்கள் மருத்துவரை கேட்டு பின்பு எடுக்கவும்.உங்கள் நிலை அவருக்குதான் தெரியும்.

divya

மேலும் சில பதிவுகள்