வெந்தயக்கீரை சப்பாத்தி

தேதி: July 15, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - ஒரு கப்
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உலர்ந்த மாங்காய்த்தூள் - அரை தேக்கரண்டி
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயக்கீரையை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
கோதுமைமாவு, கடலைமாவு, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உலர்ந்த மாங்காய்த்தூள், எண்ணெய், வதக்கிய கீரை போட்டு ஒன்றாக கலக்கவும்.
பின் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக இடவும்.
பிறகு சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு சுடவும்.


மேலும் சில குறிப்புகள்