டைமண்ட் வாங்குவது எப்படி

டைமண்ட் வாங்குவது எப்படி என்று ஆலோசனை சொல்லுங்கள்

இதில் எனக்கு நிறைய அனுபவம் இல்லை. தெரிந்ததை சொல்கிறேன். diamond வாங்கும் pothu கண்டிப்பா certified diamonds வாங்குங்கள். அப்புறம் அது எவ்ளோ carat , கலர்,அதோட கிளாரிட்டி, இதெல்லாம் விசாரித்து வாங்குங்கள். belgium cut diamond தான் பெஸ்ட் diamond நு jewellry ஷாப் ல சொன்னங்க, சின்ன சைஸ் stone விலை கம்மியாக இருக்கும். பெரிய சைஸ் stone விலை அதிகமாவும் இருக்கும்.
அப்புறம் அதோட கிளாரிட்டி, காரட் இதை பொருத்து விலை வேறுபடும். என் பையன் காதுகுத்துக்கு diamond sted வாங்கும் pothu damas ஷாப் ல இது எல்லாம் சொன்னங்க, முக்கியமா ccertificate எல்லாம் clear ஆ நோட் பன்னிருகான்னு செக் பண்ணி வாங்குங்கள் . இன்னும் detailed வேனும்ன நெட் ல சர்ச் பண்ணி பாருங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

இப்போது சில நாட்கள் முன் வைரம் பற்றி தெரிந்து கொண்ட சில தகவல்களை உங்களுக்கு சொல்கிறேன்:

1. வைரம் வாங்கும் முன் அதன் "Certificate" உள்ளதா என்று விசாரியுங்கள். இது தான் வைரத்தின் தரம், எடை(carat - இது வைரத்தின் எடையை சொல்வது. karat - தங்கத்தின் தரத்தை சொல்வது. ), கட், கலர் எல்லா தகவலையும் சரியாக கொடுக்கும்.

2. Certificate என்பது வைரத்தின் 4 அம்சங்களை கொண்டு அதை மதிப்பீடு செய்து கொடுப்பது. (Cut, Color, Clarity, Carat)

3. ஒரு நல்ல வைரம் என்பது நிறமே இல்லாத நல்ல கட்'ம், க்ளாரிட்டியும் கொண்டது.

4. இவற்றை பல அனுபவம் உள்ளவர்கள் கண்டரிந்து அந்த வைரத்தை மதிப்பிட்டு certificate கொடுப்பார்கள்.

5. நம்ம ஊரில் GIA (Gemological Institute of America)certificate உள்ள வைரங்கள் கிடைக்கின்றன. அதுவே உலகில் முதல் தரம் வாய்ந்த வைரம் என்றும் சொல்கிறார்கள்.

6. பொதுவாக வைரத்தில் ஒரு carat என்பது 200 மில்லி. இது வைரத்தின் அளவை குறிக்கும். இதை வைத்தே வைரத்தின் விலை.

7. certificate'ல் இருக்கும் தரம் பற்றிய தகவல் வைத்து எந்த கடையில் எந்த தரம் உள்ள வைரம் என்ன விலை என்று நீங்க ஒப்பிடூ பார்த்து வாங்கலாம்.

8. தனிஷ்க் போன்ற கடைகளில் சொல்வது "Precious Stone என்றால் 18 karat தங்கத்தில் தான் பதிப்போம்". ஏன் என்றால் அதில் பதித்தால் கல் விழாது என்றும், தங்கத்துக்கு நல்ல finishing, கல்லுக்கு நல்ல பளபளப்பும் கிடைக்கும் என்றும் அவர்கள் சொல்வார்கள். இது நான் ஒசூரில் இருக்கும் தனிஷ்க் நகை செய்யும் இடத்தில் ஒருவர் சொல்லி கேட்டது.

9. நம்ம ஊரில் வைரம் போட தோஷம் உண்டு என்பார்கள். அதனால் இத்தனை Carat'கு மேல் உள்ள வைரங்கள் போட கூடாது என்றும் சொல்வார்கள். அது அவர் அவர் ஜாதகத்தை பொருத்ததுன்னு சொல்றாங்க. நான் அதை பார்த்ததும் இல்லை, அந்த அளவு பெரிய வைரங்கள் வாங்கியதும் இல்லை.

// - 1 வருடம் முன் அறுசுவையில் தோழி ஒருவருக்காக நான் கொடுத்த பதிவு. உங்களுக்கு பயன்படும்னு நினைக்கிறேன்.:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்