கேரட் கூட்டு

தேதி: July 16, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உடைத்த உளுந்து - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மல்லித்தூள் - 3/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - கால் ஸ்பூன்


 

கேரட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு உளுந்து போட்டு லேசாக வறுத்து, நறுக்கிய வெங்காயத்தில் பாதி, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய கேரட், மீதி வெங்காயம் போட்டு நன்றாக வாசம் வரும் வரை வதக்கவும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வேகும் அளவு சிறிது தண்ணீர் சேர்த்து, மூடிபோட்டு வேகவைக்கவும்.
வெந்தவுடன் தேங்காய் துருவல் போட்டு பிரட்டி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றாக இருந்தது. நான் வெங்காயம் சேர்க்காமல் செய்தேன். தேங்காய் துருவல் சேர்த்து செய்தேன்.