பொங்கல் போனஸ் அரட்டை !!!

ஹிஹிஹீ... அங்க நிரம்பி வழியுது பதிவுகள்... இந்த பக்கம் ஷிஃப்ட் பண்ணிக்கங்க :)

இருக்கீங்களா? பாஸ் இன்னும் வரல, அதான் இங்கே ஓடி வந்துட்டேன்.... பொங்கல் எப்ப வைக்க போறீங்க?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கொடுத்தவச்ச மஹராசி ஹாயா இருக்கீங்க என்ஜாய் வனிக்கா. அம்மாகிட்ட கேட்டாச்சா என்ன செய்யனும்னு அங்க கரும்புலாம் கிடைக்குமா வனிக்கா. குமரன் என்ன செய்றார்.

நான் நலம், நீ எப்படி இருக்க? பொங்கல் ஆபீஸ் ல தான் வரும். இன்னைக்கும் ஆபீஸ் இருக்கே... கிளாஸ் எல்லாம் முடுஞ்சுதா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நானும் நல்லா இருக்கேன் சுகி. முடிய போகுது சுகி உன்னோட கார்ட் எதிர்பார்த்தேன் டா.(நீயே டிசைன் செய்தது) இந்த முறை எதுவும் செய்யலியா? its ok. பொங்கல் என்ன ப்ளான் பொங்கல் எப்போ வைப்பீங்க. என்ன டிரெஸ் சாரீயா?

பொங்கல் வைக்க இன்னைக்கு தான் கேட்கனும்... அன்னைக்கு மறாந்துட்டேன் ;)

நாளை காலை வைக்கனும்... வேற எப்ப வைக்குறது சுகி ??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொங்கலுக்கு கார்டு டிசைன் பண்ணும் டா, நேரம் தான் இல்ல. சுடி தான், எப்பவும் போல நானே தைத்து போடறேன். :)
உங்க வீட்டுல என்ன ஸ்பெஷல்?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நாளைக்கு தான் வைப்போம் வனி, நீங்க அங்க பொங்கல் கொண்டாடிட்டு, என்ன என்ன பண்ணுநீங்கன்னு வந்து சொல்லுங்க. ஆசையா இருக்கோம்.... கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் தான? ச்ச பாக்க முடியலையே

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

எல்லாரும் எப்படீப்பா இருக்கீங்க? நிறைய புதுமுகங்கள்... சந்தோஷமா இருக்கு.இப்போ நாந்தான் அவங்களுக்கு புதுமுகம் :)

வனி சொல்ல விரும்பினேன் ல பதிவு போட்டுட்டு போனதுக்கு அப்புறமா இப்பதான் வரேன். (கமுக்கமா அவசரமா வந்து எட்டிப் பார்த்துட்டு ஓடுனது எல்லாம் கணக்குல வராது சொல்லிட்டேன் :)) ரென்டு நாளா கமுக்கமா வந்து பட்டியில் உலாவிட்டு போனேன் நிறைய மிஸ் பண்ணிட்டேன்னு ஒரே ஃபீலிங்கு ஆயிடுச்சு :(

கல்பனா கிட்ட கூட நேற்று இன்னும் 10 நாள் கழிச்சுதான் வருவேன்னு சொன்னேன். ஆனால் இருக்க முடியலை அறுசுவையையும் தோழிகளையும் விட்டுட்டு.

வீட்டு வேலை எல்லாம் முடிந்து கிரஹப்பிரவேசமும் நல்லபடியாக முடிந்து இந்தோனேஷியாவும் வந்து சேர்ந்தாச்சு. இனிமே என்ன அறுசுவையில் கலக்க வேன்டியதுதான் :)).

சீக்கிரமா பட்டியை ஆரம்பிங்கப்பா கை துருதுருங்குது :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி... எப்போ வந்தீங்க? எங்க இருக்கீங்க?? வருவீங்களா இனி (கமுக்கமா இல்ல.. ரெகுலரா ;))

சுகி... நாங்களாம் குக்கர்ல பொங்கல் வைக்கிற ஆட்கள்... இத பார்க்க வேற ஆசையா ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி மேடம், என்னை நியாபகம் இருக்கா? மறந்துட்டீங்களா?
இவளோ நாலா எங்க போனீங்க? வீட்டை காட்டி முடுஞ்சுதா, சூப்பர். பொங்கல் என்ன சொல்லுது? ரெடி ஆயாச்சா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்