பிரசவ சந்தேகம் epidural

தோழிகளுக்கு வணக்கம் எனக்கு இபொழுது 34 வாரம் நடக்குது... எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு தீர்த்து வைக்கவும்.

என் தோழி ஒருவர் சுக பிரசவத்திற்கு காத்திருந்து நேத்து மிகவும் பெரிய நரக வேதனை அனுபவித்து பிறகு c section பண்ணி தான் குழந்தை (குழந்தை தலை திரும்பி இருந்ததன் காரணமாக ) பெற்று எடுத்தார்..., அதிலிருந்து எனக்கும் பயம் அதிகம் ஆய்டுச்சு..., எதுக்கு இவ்ளோ வலிய அனுபவிக்கனும் முதலையே c section பண்ணிர்கலம்ல!!! நாங்க எல்லாரும் சொன்னதுக்கு அவர் கடைசி வரை காத்திருந்து பிறகு வேறு வழி இல்லாம c section க்கு ஒப்பு கொண்டார்..., ஏன்? c section தவிர்க்க என்ன காரணம்...?
1. குழந்தை தலை கீழே வந்து நின்ற பிறகு மீண்டும் மேலே வருமா? இல்ல ஒரு தடவ போய் கீழ வச்சுடா திரும்ப மேல வரவே வராதா?
2. என் பாப்பா எனது வலப்பக்கம் மட்டும் தான் இருக்கு இடப்பக்கம் எப்பவும் movement தெரியவே இல்ல ஏன் இப்படி இருக்கு?
3. epidural போடுறதுனால என்ன பயன்? என்ன பக்க விளைவு? normal deliveryக்கும் c-section க்கும் எபிடுரல் போடுவாங்களா?
4. ஏன் எல்லாரும் c section வேணாம் நு சொல்றாங்க..., normal பண்ண வலி நமக்கு தானே..., c section செய்றதுனால என்ன தப்பு ஏன் எல்லாரும் அதுக்கு பயபடுறாங்க...,?
5. நோர்மல் பண்ணா எவ்ளோ நாளைக்கு வலி இருக்கும், c section க்கு எவ்ளோ நாளைக்கு வலி இருக்கும்...
6. குழந்தைக்கு எப்போ தொப்புள் கொடி காய்ந்து விழும்...
எனக்கு முதல் குழந்தை ரொம்ப குழப்பமா இருக்கு இங்கயும் யாருமே இல்ல அதான் இப்படிலாம் யோசிச்சு யோசிச்சு சந்தேகம் வந்திருக்கு..., கோவிச்சுக்காம தோழிகள் பதில் சொல்லுங்க பா...

--

முதல்ல குழப்பம் பயம் இரண்டும் வேண்டாம். இது உள்ள இருக்க குழந்தையை பாதிக்கும். எதுவா இருந்தாலும் நல்லது தான்னு அமைதியா இருங்க. சரியா??

c-section வேணம்னு சொல்ல காரணம்... நிறைய இருக்கு:

1. முதல்ல வயிற்றில் தழும்பு. சிலருக்கு குறைவா இருக்கும், சிலருக்கு அசிங்கமா அதிகமா தெரியலாம்.

2. வயிறு குறைவது கஷ்டம். சிலருக்கு ஆபரேஷனுக்கு பின் பிள்ளை உள்ள இருக்க மாதிரியே இருக்கும் வயிறு.

3. சில நேரம் c-sectionகு வயிறு ஓப்பன் பண்ண பிறகு கருப்பை மூடாது... அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தா போகலாம். (இது ரேர் கேஸ்) வழக்கமா குழந்தையை வெளிய எடுத்த பின் கருப்பை சுருங்கி பழைய படி அடங்கிடும், அப்பறம் தான் தையல் போடுவாங்க. சிலருக்கு இது நடக்காது.

4. சில நேரம் உள்ளே போடும் தையல் ஆராமல் வெகு நளிருக்கும். இன்ஃபெக்‌ஷன் கூட ஆகலாம். இதுவும் ஒருவகையில் அபத்தானது தான்.

5. வெளியே போடப்படும் தையலும் ஆராமல் விட்டு போகவோ, அந்த இடத்தில் மசில் டேர் போன்றவை ஏற்படவோ சாத்தியம் உண்டு.

6. சில நேரம் சரியாக செய்யாமல் போனால் நரம்புகளில் அடிபட்டு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

7. பக்கத்தில் உள்ள மற்ற உறுப்புகளில் இஞ்சூரி ஆகிடவும் வாய்ப்பு இருக்கு.

8. முதல் குழந்தை c-section என்றால் இரண்டாவது அப்படியே ஆகும்னு பொதுவான கருத்து. காரணம் ஆப்பரேஷன் பண்ணா கருப்பை பலகீனம் ஆகும், அது அடுத்த குழந்தையை சுமக்கும் போது நார்மல் ட்ரை பண்ணா கருப்பை இறங்குவது போன்ற பிரெச்சனைகள் ஏற்படும்.

9. காயம் ஆரவும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் சிறிது மாதங்கள் பிடிக்கும். பண்ணும்போது தான் வலி இருக்காது, அப்பறம் பிரிச்சுடும்... ரொம்ப ஜாக்கிறதையா இருக்கனும் 6 மாதமாவது. தும்மல், இருமல் வந்தா கூட உடனே சரி பண்ணனும், இல்லன்னா தையல் போட்ட இடத்தில் வலி, பிரெச்சனைகள் ஏற்படும்.

சுகப்பிரசவத்தில் உள்ள + பாயிண்ட்ஸ்:

1. அடுத்த குழந்தை பெற்றெடுப்பது ரிஸ்க் இல்லை.

2. காயம் விரைவில் ஆறிவிடும். இயல்பு வாழ்க்கைக்கு சில நாட்களில் திரும்பிடலாம்.

ஆனா சுக பிரசவம் தான் வேணும்னு அடம் பிடிக்க கூடாது... காரணம் டாக்டர்களூக்கு எந்த நேரத்தில் ஆப்பரேஷன் பண்ணனும்னு தெரியும். சில நேரம் சுக பிரசவமும் கூட உயிருக்கு ஆபத்தானதாகலாம். அதனால் அது போல் சூழலை டாக்டர் சொன்னா மேற் கொண்டு ரிஸ்க் எடுக்காம நல்லபடி குழந்தையை பெற்றெடுக்கும் ஒரே எண்ணத்தை மனதில் வைத்து ஆப்பரேஷன்னு சொன்னா ஒத்துக்கனும். ஏன்னா சில ரிஸ்க் தாயை மட்டுமல்ல குழந்தையையும் பாதிக்கும். சிலருக்கு சுகபிரசவம் ஆகி போடும் தையல் கூட பிரெச்சனை உண்டு பண்ணலாம். அந்த ரிஸ்க்கும் இருக்கு.

எபிடியூரல் இஞ்சக்‌ஷன் (local anesthesia):

1. இத முக்கியமா c-sectionகு தான் பயன்படுத்துவாங்க. தண்டுவடத்தில் போடப்படும் ஊசி இது. போடுவதும் ரிஸ்க், போட்டா சில பக்க விளைவுகளும் உண்டு.

2. இப்போ இதை நார்மலுக்கு போடுறாங்க. (இதுக்கு தனியா காசு வாங்கலாம் இல்லையா... அதான்). போடுவதால் பிரசவ வலி இருக்காது. அவ்வளவு தான். ஆனா பிரசவம் ஆகும். அதில் பிரெச்சனை இருக்காது.

3. சில நேரம் இதை செலுத்துவதால் தசையின் பலம் குறையக்கூடும். இது சுக பிரசவத்தில் பிரெச்சனை செய்யலாம்.

4. இதை போட்டா தலையனை வைத்து படுக்க கூடாது. அப்படி வைத்தால் முகமெல்லாம் நீர் ஏறிவிடும். கடும் தலைவலி ஏற்படும். இம்மருந்து வெளியேற நிறைய நீர் எடுக்கனும். யூரீன் மூலம் தான் வெளியேரும் இந்த மருந்தின் தாக்கம்.

5. இதை முறையா செய்ய கூடியவங்க, கவனமா செய்யனும். இல்லன்னா உயிருக்கே ஆபத்தானது. போடும்போது நாம் அசைந்தாலோ, அல்லது அவங்க தப்பா வெயின்ல ஏத்திட்டாலோ உயிருக்கு ஆபத்து. அளவும் ரொம்ப சரியா குடுக்கனும்.

6. சிலருக்கு உடலுக்கு சேரலன்னா வலிப்பு, மயக்கம், கண் பார்வை பதிப்பு போன்றவை ஏற்படலாம்.

ஆனா நம்ம ஊர் டாக்டர்கள் இதை எல்லாம் ஒத்துக்கவே மாட்டாங்க. அதனால் கேட்பது வேஸ்ட். நான் இதில் சில பிரெச்சனைகளை அனுபவித்திருக்கேன்.

குழந்தைக்கு தொப்புல் கொடி விழுவது பொதுவா 5 - 15 நாளில் விழும். அது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும்.

குழந்தையின் அசைவு... அது எந்த பக்கம் வேணும்னா இருக்கும். சிலர் இதை வைத்து குழந்தை ஆணா, பெண்ணான்னு கூட சொல்வாங்க. நமக்கு தெரியாது. ஆனா இதை பற்றி கவலை வேண்டாம்.

மொத்தத்தில் டாகடரின் ஆலோசனை படி நடந்துக்கங்க. உங்க உடல் நிலை அவங்களுக்கு தான் முழுசா தெரியும். நல்லபடி குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள், பிராத்தனைகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல ஆரோகியமான குழந்தை பெற்று எடுக்க என் வாழ்த்துகள்.
என் குழந்தைக்கு இப்பொது 15months ஆகின்றது. உங்களை போல் தான் பயந்து கொண்டே இருந்தேன். இன்டர்நெட் இல் எதையாவது தேடி படித்து பயந்து கொண்டே இருப்பேன்.

எதற்கும் பயப்டதிர்கள், பிரசவத்தின் பொது கடவுள் நமக்கு 1000௦௦௦ யானையின் பலம் தருவாராம். எனக்கு நோர்மல் டெலிவரி தான் ஆனது. வலி இருக்காது என்று பொய் சொல்லி உங்களை ஏமாற்ற வில்லை. ஆனால் நோர்மல் டெலிவரி என்றால் 1day தான் வலி மீறினால் 2 நாள்...maximum 1 week ரெஸ்ட்...அவ்ளோதான்...குழந்தை பிறகும் பொது தான் வலி...அதன் பிறகு நீங்கள் எபோதும் போல இருக்கலாம்...ஆனால் c-section அப்படி அல்ல...குழந்தை துகுவதருகு குட நீங்கள் இநோருவரை எதிர் பார்க்க வேண்டும்...

epidural நிறைய பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என கேள்வி பட்டு இருக்கிறேன்...நான் எபிடுரல் எடுத்து கொள்ள வில்லை...நோர்மல் டெலிவரி என்றால் 1~2 நாள் வலி...குழந்தை பார்த்ததும் அதுவும் உங்கள்கு மறந்து விடும்...

நானும் பயந்து கொண்டேதான் இருப்பேன்...வலி வந்த பொது க-செச்டின் பனி கொள்கிறேன் என்று குட கூறினேன்....என் கணவர் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார்...நிறைய சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், இப்பொது நேரம் இல்லை...மீண்டும் வருகிறேன் :-)

உடம்பில் நோய் வரும்போது தான் உடம்பை கீறுவதை குறித்து யோசிக்க வேண்டும்..இது நோய் அல்ல..மலை போல் எடுத்துட்டா அப்படி சிம்பிளா எடுத்துட்டா சுலபம்..வலி சில மணிநேரம் தான் இருக்கும்.னார்மல் டெலிவெரிக்கு வரும் சில மணிநேர வலியை பொறுத்துட்டால் போதும் பிறகு பிரசவமானதும் ஒன்னுமே நியாபகம் இருக்காது சிசேரியனுக்கு அப்படியில்லை ஒரு வாரமாவது நல்ல வலி இருக்கும்..எந்த ரு உறுப்பையுமே அறுக்காமல் பாதுகாப்பது தான் கூடுமானவரை நல்லது..முன்பெல்லாம் நம்ப பாட்டி காலத்தில் ஏதூ மருத்துவமனை என் பாட்டி சொல்வாங்க அன்றெல்லாம் இன்று போல் இல்லை 10,11 பெற்றுக் கொள்வார்கள் ..கடைசி வரை பென்ட் நிமுத்தி விடுவாங்க வேலை செய்ய வச்சு..பிரசவ வலி வரும்போது பிள்ளைகளை எல்லாம் வெளிய போய் விளையாடுங்கடா என்பாங்களாம் பிரசவம் பார்க்கும் பெண் வருவார் சில மணிநேரம் அவ்வளவு தான் வீட்டில் தான் எல்லாமே..ஏன் அதிகம் நியூஸில் கூட கேட்கிறோமே யாருக்கும் தெரியாமல் தனியாக குழந்தை பெற்றுக் கொள்வதாக நம்மால் யோசிக்கவே முடியாது..
சில சமயம் கடைசி நேரத்தில் குழந்தையின் தலை சிக்கி விடும் கீழே இறங்காது போகும் அல்லது இதயத்துடிப்பில் மாற்றம் வருமாம் அல்லது குழந்தை வயிறிலேயே மலன் கழித்து விடும்.இந்த மாதிரியான சமயங்களில் மட்டுமே குழந்தையின் உயிர் காக்க சிசேரியன் செய்கிறார்கள்..இது சந்தோஷமான விஷயம்.
வருத்தப்பட வேண்டியது இன்று பலரும் தாமாகவே சிசேரியனை விரும்பி கேட்கிறார்கள் வலிக்கு பயந்து.பின்னாளில் பல ப்ரச்சனை வரும்.
ரொம்ப வலி தாங்காத அல்லது பயந்த சுபாவம் கொண்டவர்களுக்கு எபிடியூரல் ஒரு வரப்பிரசாதம் ..என்ன அதுவும் சிசேரியன் போல தான் ஆனால் இயற்கையான பிரசவம்..எபிடியூரல் போடுவதால் பிரசவ நேரம் தாமதமாகும் என்றும் குழந்தை சிறிது மயக்க நிலையில் பிறக்கும் என்றும் பின்னாளில் நமக்கும் முதுகு வலி வருமென்றும் கேல்விபட்டிருக்கிறேன்.
கடைசி மாசங்களில் குழந்தை திரும்பவும் திரும்ப வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
நார்மல் டெலிவெரிக்கு வலி அதோட போச்சு பிறகு எபிசியாடமி பண்ணினால் அதன் வலி மட்டும் கொஞ்ச நாள் இருக்கும் சிஏரியனை ஒப்பிடுகையில் அது பெரிய ப்ரச்சனை இல்லை
மூவ்மென்ட் இருந்தால் மட்டும் போதும் எந்த பக்கம் எப்படின்னு குழப்பிக்காதீங்க எல்லாருக்கும் இப்படி சந்தேகம் வரும்;-)
பிறந்து ஒரு வாரத்துக்குள் சாதாரணமா விழும் சில குழந்தைகளுக்கு தாமதமாகும்.எல்லாமே தானா நல்லபடி நடக்கும்..நாம மண்டை உடைக்கிறது வேஸ்ட்.

அபிராமி எனக்கு குழந்தை பிறந்து 25 நாட்கள் தான் ஆகுது... நான் எனக்கு ஆபரேஷன் தான் செய்வாங்கனு நினைச்சுட்டு இருந்தேன்(PCOD மற்றும் வெயிட் அதிகம்) ஆனா எனக்கு சுக பிரசவம் என்னால நம்பவே முடியல....

//எதுக்கு இவ்ளோ வலிய அனுபவிக்கனும் முதலையே c section பண்ணிர்கலம்ல!!!//

ஆபரேஷன் செய்தால் நாம் மயக்கமாகத்தான் இருப்போம் அப்பொது நம் குழந்தைக்கு உடனடியாக பால் கொடுக்க முடியாதாம் அந்த சமயத்தில் குழந்தைக்கு வேறு பால்(Formula milk) கொடுப்பார்களாம்... ஆனால் நம் பால் தானே அதுவும் முதலில் வரும் பால் தான் குழந்தைக்கு கொடுக்கணும் இதற்காகவே எவ்வளவு வலி வேணும்னாலும் பொறுத்து கொள்ளலாம் தெரியுமா?
குழந்தை நார்மல் பொஷிசனில் இருந்தால் தைரியமாக சுகபிரசவதுக்கு தயார் ஆகலாம்.... வலி இருந்தாலும் சிறிது இடைவெளி விட்டு விட்டு தான் வலிக்கும் அந்த டைமில் ரிலாக்ஸ் செய்துக்கலாம்.... குழந்தை பிறக்க போகும் கடைசி நிமிடங்களில் வலி மிகவும் குறைந்து விடும்... அரைமணி நேரத்தில் எழுந்து நடந்தே விடலாம்....
http://www.arusuvai.com/tamil/node/8870 இந்த லின்க் போய் பாருங்கள்...
நல்ல படியாக குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.......

நேச்சுரல் டெலிவரிக்கு முயற்சி செய்றது... குழந்தையை இயற்கையாய் பெற்றெடுப்பது.
சி செக்ஷன் என்பது... செயற்கையாய் குழந்தையை பிறக்க செய்வது. இது தப்பில்லை... ஆனால் குழந்தையின் இருதய துடிப்பு குறைந்தாலோ, குழந்தை உள்ளேயே மலம் கழித்தாலோ, குழந்தையின் பொசிஷன் மாறியிருந்தாலோ (தலை மேல் நோக்கி) மட்டுமே மருத்துவர் கண்டிப்பாக அதை செய்ய ஆலோசனை கூறுவார். க்ழோஹ்ந்தையின் தலை சுற்றளவு சற்று பெரியதாக பெரும்பாலான குழந்தைகளுக்கு இருக்கும் அப்பொழுதும் கூட எந்த பிரச்சனையும் இல்லை என்றால் சுக பிரசவத்திற்கே லாஸ்ட் மினிட் வரை முயற்சி செய்ய தான் சொல்லுவார்கள். அப்படி முயற்சி செய்யும் பொழுது தாய் நன்றாக மூச்சு இழுத்து விடனும், அதில்லாமல் மூச்சடக்கி அழுதாலோ, மூச்சு இழுத்து விடாமல் இருந்தாலோ குழந்தைக்கு ஆக்சிஜன் குறைபாட்டால் இதய துடிப்பு குறையும் அப்பொழுதான் சி செக்ஷன் ஏற்பாடு செய்வார்கள். அப்படி இல்லாமல் எல்லாமும் சரியாக நடக்கும் பட்சத்தில் குழந்தை சுகமாக பெற்றெடுக்க முடியும்.

# குழந்தை கடைசி வாரத்தில் (37-39)தான் தலை கீழே சென்று செட்டாகும். கடைசி வாரங்களில் மருத்துவர் கண்டிப்பாக அதை செக் செய்து உங்களுக்கு கூறுவார். அப்படி இல்லாமல் இருந்தாலும் கூறுவார்.

# தலை மேல் நோக்கி செட்டாகி விட்டால் கடைசி வார செக்கபிலேயே கூட சி செக்ஷன் என சொல்ல வாய்ப்பு உண்டு. குழந்தையின் எடை கூடுதலாக இருந்தாலும் அதை சொல்லுவார்கள்.

# கொஞ்சம் நல்லா லேபரை தைரியமா ஃபேஸ் பண்ணினா நல்லா டயலேஷன்(கருப்பை வாய் திறப்பு) ஆனதும் கூட (வழியை பொறுக்கணும்) ஹாஸ்பிட்டல் செல்லலாம். ஐந்து சென்டிமீட்டருக்கு மேல் திறந்ததும் தான் ஹாஸ்பிட்டலில் அனுமதிப்பார்கள் இல்லை என்றால் செக் செய்து விட்டு வீட்டுக்கே திரும்ப அனுப்பி விடுவார்கள் முழுவதும் பத்து சென்டிமீட்டர் ஆகும்.

# இப்படி ஒவ்வொரு சென்டிமீட்டராக ஒப்பன் ஆகும் பொழுதுதான் நல்லா வலி கூடும். அந்த வலியை போருக்க மாட்டது தான் தாய் மார்கள் எபிடியுரல் கேட்பதுண்டு. சிலரின் முயற்சி மற்றும் கண்டிஷன் பொறுத்து அதை போடுபவரே அதை நிராகரித்து விடுவார் ( அவர் மருத்துவர் அல்ல!!!).

# எபிடியுரல் எடுப்பதால், பின் முதுகில் எலும்பில் போடுவதே வலிக்கும். அதன் பின் இடுப்பிற்கு கீழ் பகுதி முழுவதுமாக மரத்து போய்விடும். சுக பிரசவத்திற்கே இதை எடுப்பதால் தாய் எந்த அளவு அழுத்தம் கொடுத்து குழந்தையை வெளியேற்றுகிறார் என்ற உணர்வு இல்லாமல் போய்விடும். அந்த நேரத்தில் ஆசனவாய் பகுதிக்கு கூட அழுத்தம் செல்லலாம். இதனால் பின்னால் பல பிரச்சனைகள் வரும். இப்பொழுது அனுபவிக்க வேண்டிய வலியை தவிர்ப்பதால் குழந்தை பெற்றதும் அந்த அத்தனை வலியும் மருந்தின் மகத்துவம் போனதும் தெரியும். அப்பொழுது அது வித்தியாசமாய் உணர முடியும். அதனால் தான் மறுத்து செலுத்திய முதுகெலும்பு அதிகமாய் வலிப்பது போன்றும் இடுப்பது வலி அதிகாமாகவும் இருக்கும்.

# அதனால எபிடியுரல் சி செக்ஷன் என்றால் மட்டுமே எடுப்பது நல்லது. சுக பிரசவத்திற்கு எடுத்த நூறில் தொண்ணூறு பேருக்கு பின்னால் பிரச்சனைகள் ஏற்பட்டு ஊள்ளது.

# லேபர் டைம் (வழியில் இருந்து குழந்தை பெற்றெடுக்க ஆகும் நேரம்) முதல் முழந்திக்கு பதினெட்டு முதல் இருபத்து நான்கு மணி நேரம் வரை ஆகும். முதல் குழந்தை என்பதால் தசை பகுதி மிகவும் பொறுமையாக தான் விரியதொடங்கும். அதனால் நேரமெடுக்கும். அதற்கான சில உடற்பயிற்சிகள் செய்து, வாக்கிங் சென்று தசைகளை இலகு படுத்தியிருந்தால் வலி கொஞ்சம் தெரியால இருக்கும். இரண்டாம் குழந்தைக்கு ஆறு மணி முதல் எட்டு நேரமே ஆகும்... இப்படியாக போக போக குழந்தை எண்ணிக்கை அதிகமாகும் பொழுது வலி நேரம் குறையும் (அதனால தான் அந்த காலங்களில் பல குழந்தைகள் பெற்றார்கள் போல!!!).

# தொப்புள் கொடி குழந்தயை பொறுத்து, அது காயும் வேகத்தை பொறுத்து ஒரு ஐந்து நாளுக்கு மேல் எப்போ வேண்டுமானாலும் விழலாம். அதற்கு தனியாக மருந்து ஒன்றும் தேவையில்லை ஆல்கஹால் சுவாப் மட்டுமே போதும். குழந்தை பிறந்ததில் இருந்து ஒவ்வொரு தாப்பர் செஞ்சும் பொழுது அதை துடைத்து விட்டு தான் புது டயாப்பர் போடணும்.

# குழந்தை இருக்கும் இடத்தில் தான் அசைவு இருக்கும். அது வலது பக்கமோ, இடது பக்கமோ அதில் தப்பில்லை. குழந்தை ஒரு புறமாய் இருப்பதால் அப்படி இருக்கும் அந்த நேரங்களில் அங்கே சின்ன சின்ன
ஃபால்ஸ் பெயின் கூட வரலாம்.

குழந்தை எழுந்து விட்டான் பிறகு வந்து ஏதாவது இருந்தால் சொல்றேன்.......... பயப்படாம.... எல்லாத்தையும் எதிர்நோக்கும்...... மனப்பாங்கோடு இருந்தாலே போதுமே... சில தைரியமான பெண்களை மனதில் நினைத்து கவலை கொள்ளாமல் இருங்க!!!

தோழி அபிராமி முதலில் ஆரோக்கியமான அழகான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்
பயம் வேண்டவே வேண்டாம் எல்லா தோழிகளும் உங்களுக்கு பதில் சொல்லி விட்டார்கள் எனக்கும் நார்மல் டெலிவரி தான் குழந்தை பிறந்து 6 மாதம் ஆகி விட்டது குழந்தை பிறக்கும் போது வலி இருக்கும் அதுவும் சில மணி நேரங்கள் தான் இருக்கும் பிறந்த பின் வலி தெரியாமல் ஓடி விடும் பிறகு 2 நாட்கள் லேசாக இருக்கும் அவ்வளவுதான் ஆனால் சிசேரியன் அப்படி அல்ல 6 மாதமாவது குறைந்தது ரெஸ்ட் எடுக்க வேண்டும் அதிக வேலை செய்ய கூடது ஆனால் அனைத்தும் மருத்துவரின் ஆலோசனை படி நடப்பது நல்லது

எனக்காக பதில் தந்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...,
நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் மனதில் வச்சுருக்கேன்..., எப்படியாது சுக பிரசவத்தில் தான் குழந்தி பெற்று எடுக்கணும் நு இருக்கேன்..., பாப்போம் கடவுள் எப்படி விட்டு இருக்காருன்னு ...,
ஆனால் இங்க உள்ளவர்கள் எல்லாரும் துணைக்கு ஒரு ஆள் இல்லாம எதுவும் செய்ய முடியாது நு சொல்லி பயமுறுத்துறாங்க பா..., இங்கு நானும் என் கணவர் மட்டும் தான்... என்ன பண்ண போறோமோ தெரியல..., :-(
எனக்கு குழந்தை உள்ள movement பண்ணும்போது வலிக்குது ரொம்ப..., சுருக்குனு வலிக்குது அப்றம் சரி ஆகிடும்..., அது ஏன் அப்படி வலிக்குது நு சொல்லுங்க ?
பாப்பா கடைசி ஸ்கேன் ரிப்போர்ட் ல gestational age நு எனோட (LMP) DD date க்கு முன்னாடி 5 நாட்கள் முன்னாடியே DD நு போட்ருக்காங்க அப்படினா 5 நாட்கள் முன்னாலேயே பிறந்துருமா?

அன்புடன் அபி

Don't be scared of normal delivery... The first que I asked the nurse after delivery was ," Ivalo thaana delivery pain...idhukku thaan ivalo built-up kuduthaanga ellorum"nu...;)

நார்மல் டெலிவரியில் உள்ள ஒரு risk- damaging ur tail bone(spinela last bone) when the baby comes out. 3 1/2 varushama anubavikiren . Homeopath says it can be cured but will take timenu. 21/2 yrsaa treatment poren...yet to be cured... Though this is a rarity, there is this risk...other than that, normal delivery is preferred as the body gets back to normal very quickly... less pain(just abt 4 hrs pain in my case),..there is more risk of hernia if u go for c-sec... other points already sollitaanga namma experts...;)

pl.read eraivazhiyil iniya sugapirasavam -book-by dr.fazrulrahaman.health time publications.17,custian beach rd,santhome,chennai

கடைசி மாதத்தில் குழந்தை அசையும் போது எனக்கு கூட வலி இருந்துச்சு. இது நார்மல் தான்.Gestational age ங்குறது age of the baby. மொதல்ல பயத்த விடு டா.... நா இப்படி பயப்பட்டது கூட என்னொட c section காரணமா இருக்காலாம்.... 1 இப்படியெல்லாதயும் யோசிச்சு கொழப்பிக்காத...... நார்மல் டெலிவரி பெயின் அதிகம் தான் பட் சேப். ஆன c section பெயினும் அதிகம் அதிக நால் நி rest எடுக்க வேன்டி இருக்கும் ( rendaium anubavichathanaala sollaren..). தனியா இருக்கறதுனால உனக்கு நார்மல் தான் பெஷ்ட் நானும் உனக்காக கடவுள் கிட்ட வேண்டிகிறேன்.

BE HAPPY MAKE OTHERS HAPPY

மேலும் சில பதிவுகள்