போகி பண்டிகைக்கு

போகி பண்டிகைக்கு என்ன செய்ய வேண்டும்? பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் செய்து பூஜை செய்வது போல் போகிக்கு என்ன செய்ய வேண்டும்??? மாட்டுப் பொங்கலுக்கு என்ன செய்ய வேண்டும்?

போகி அன்று வாசலில் காப்புக்கட்டுவார்கள். உப்பு சேர்க்காமல் மொச்சை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு வேகவைத்து சங்கராந்தி கடவுளுக்கு படைப்பார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் சங்கராந்தி கடவுள் வரும் என்பது நம்பிக்கை. சங்கராந்தி கடவுள் வரும் விதத்தை பொருத்து நன்மை ஏற்படும் என்பார்கள். தீமை ஏதும் ஏற்படும் என்றால் எல்லா வீடுகளிலும் பரிகாரம் செய்வார்கள்.
உ.ம்: சகோதரிக்கு பச்சை சேலை, வளையல் கொடுப்பது. ஆண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் விளக்கு வைப்பது இப்படி. இதையெல்லாம் பஞ்சாங்கம் பார்த்து ஜோதிடர்கள் கணித்துக்கூறுவார்கள்.
எனக்கு தெரிந்தது இவ்வளவுதான். இன்னும் விஷயமிருந்தால் தோழிகள் கூறவும்.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

மேலும் சில பதிவுகள்