பரங்கிக்காய் பாயாசம்

தேதி: January 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

பரங்கிக்காய்
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள்
முந்திரி, திராட்சை, பாதாம் - சிறிது


 

பரங்கிக்காயை நன்றாக மிக்ஸியில் அரைத்து 2 கப் அளவு எடுக்கவும்.
பாத்திரத்தில் நெய் சிறிது விட்டு அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
பரங்கிக்காய் நன்றாக சாஃப்ட்டாகி வெந்திருக்கும் போது சர்க்கரை சேர்த்து கலந்து அரை கப் தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு ஏலக்காய் தூவி எடுக்கவும்.
பின் திக்காக காய்ச்சி ஆற வைத்த பால் கலந்து விடவும்.
முந்திரி, திராட்சையை சிறிது நெய்யில் வறுத்து இதில் சேர்க்கவும்.
கடைசியாக பொடியாக நறுக்கிய பாதாம் தூவி அலங்கரிக்கவும். சுவையான பரங்கிக்காய் பாயாசம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் பாயாசம்.

பரங்கிக்காய் பாயாசம் செய்ய சுலபமா இருக்கு வனி. வாழ்த்துக்கள்

பரங்கிக்காய் பாயாசம் நல்லாயிருக்கு, படங்கள் சூப்பரா இருக்கு செய்வதற்கு ஈசியா இருக்கு.

அடடா.. வித்தியாசமா இருக்கே

வாழ்த்துக்கள் அக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பாயாசம் அருமை, படங்களும் அருமை!! கடைசிப்படம் ஆங்கிள் கலக்கிட்டிங்க வனி, ரொம்ப அழகா இருக்கு! :)

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

கீஃபா... முதல் பதிவு உங்களுடையது தான்... பிடிங்க பாயாசம். மிக்க நன்றி :)

வினோ... மிக்க நன்றி. நம்ம ஹர்ஷா கொடுத்து தான் பரங்கிக்காய் பாயாசமே தெரியும்... அதை வேறு வேறு விதமா ட்ரை பண்ணது தான் இது :)

ஆனந்தி... மிக்க நன்றி :)

ஆமினா... உங்க குறிப்பை விடவா?? மிக்க நன்றி.

சுஸ்ரீ... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. குட்டீஸ்க்கு கண்டிப்பா பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba romba thanks. I made this weekend and came out wonderful.

abarna

மிக்க நன்றி தோழி. செய்து பார்த்து ஒரு பின்னூட்டம் வந்தா அதன் மகிழ்ச்சியே தனி தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலா பரங்கிக்காய் பாயாசம் செய்தேன். ரொம்ப டேஸ்டியா இருந்தது. பரங்கிக்காய்ன்னு சொல்லவே முடியலை. ரவா பாயாசம் மாதிரி டெக்ஸ்சரில் யம்மி யம்மி! தேங்க்ஸ் வனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி... என்ன தான் சொல்லுங்க, யாராவது நம்ம குறிப்பை செய்து சொன்னா அது ஒரு பெரிய சந்தோஷம் தான்... அதனாலயே இங்க விசிட் அடிக்காதவங்க கொடுத்த குறிப்பா இருந்தாலும் செய்தா பின்னூட்டம் கொடுத்துடுவேன். :) உங்களுக்கு பிடிச்சதில் மிகுந்த மகிழ்ச்சி கவிசிவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் சும்மா வந்து பார்க்கவே நல்லாருக்குன்னு சொல்றதை விடவும் வாய்ப்பு கிடைக்கும் போது செய்து பார்த்து பின்னூட்டம் கொடுப்பதில்தான் விருப்பம். அடுத்ததும் உங்க ரெசிப்பி ஒன்னு எடுத்து வச்சிருக்கேன். எல்லா ஐட்டங்களும் கலெக்ட் பண்ணிட்டு செய்துட்டு வந்து சொல்றேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்படியா... அப்படின்னா இப்பவே அது நல்லா வரனும்னு நான் வேண்டிக்கறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் நல்ல சுவை மிக்க நன்றி