அசிங்கமான கேள்விகளுக்கான பதில்

வர வர ஒரு எல்லையே இல்லாமல் சர்வ சாதார்ணமாக ஆபாசமான கேள்விகள் வந்தவண்ணம் உள்ளது..அது அறியாமையா இருந்தாலும் படிக்கவும் பதில் சொல்லவும் ரொம்ப தர்ம சங்கடமான நிலமை..ஒருவருக்கொருவர் முகம் தெரியாமல் பேசுவதென்றால் எந்த எல்லையிலும் பேசலாமா ???.தயவு செய்து நீங்களே கேக்க கூச்சப்படக் கூடிய அல்லது சுறுக்கமா சொன்னால் உங்க அம்மா அக்கா விடம் கூட கேட்க முடியாத கேள்வியை www.google.com என்னும் தளத்தில் போய் தேடிப் பாருங்க நிறைய விளக்கம் கிடைக்கும்.
இப்படி செய்வதா அப்படி செய்வதா அங்க இது வருது இங்க அது வருது போன்ற அந்தரங்கமான கேள்விகளை தயவு செய்து தோழிகள் கூடுமானவரை தவிர்க்கவும்.
யாரோ சொன்ன சில கட்டுக்கதைகளை நம்பி விட்டு பச்சை பச்சையாக அவங்க இப்படி சொன்னாங்க சரியா என்பது போன்ற கேள்cஇகளை தவிர்க்கலாம்..இது எனது தனிப்பட்ட அபிப்ராயம் .எனக்கு மட்டுமல்லாமல் நிறைய பேருக்கு இது ஒரு வருத்தமான விஷயமாக இருக்கிறது.

தளீகா சொல்வது சரிதான்..
//எனக்கு மட்டுமல்லாமல் நிறைய பேருக்கு இது ஒரு வருத்தமான விஷயமாக இருக்கிறது.//

அந்தரஙமான கேள்விகளை இங்கே கேட்பதை விட்டுட்டு,

டாக்டரிடம் கேட்கலாம்....

அன்புடன்
*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

தளீகா சரியாகச் சொன்னீங்க பார்க்கவே அருவருப்பான கேள்விகளைக்கூட சிலர் கேட்கிறாங்கஃ, அனைவரும் இதை புரிந்ஹு கொண்டு பொதுதள்மான அறுசுவையின் மாண்பைப் பேணுமாறு நானும் கேட்டுக்கொள்கிறேன்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஆண்களும் உலாவரும் இந்த பகுதியில் அந்தரஙமான கேள்விகலை கேட்பதும்,அதற்கு தோழிகலும் பதீல் கூறுவதும் தவிர்க்கனும்...

ஒரு தடவை ஒரு தோழியின் செக்ஸுவல் கேளவிக்கு, தோழிகல் பதில் தந்திருந்தாங்க,
அதற்கு அடுத்த பதிவில் ஒரு ஆண் உறுப்பினர், "பிரியானி செய்வது சூப்பர்’னு” நக்கலாக (உண்மயை சொன்னா அசிங்கமா) பதிவு செய்திருந்தார்...

படிக்கவே நமக்கு கூசியது...

”பெண்களீன் பெயரில் ஆண்களும் இருக்கின்ரார்கல்,,அனைவரும் நல்லரும் அல்ல. கெட்டவரும் அல்ல, நாம் தான் உஷாரா இருக்கனும்” ...

இது என்னுடைய சொந்த கருத்து..

அன்புடன்,
*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை தளிகா. நான் அறுசுவையின் பழைய பதிவுகளை விரும்பிப்படிப்பது உண்டு. எவ்வளவோ பயனுள்ள தகவல்கள் அவற்றில் இருக்குது. ஆனா..இப்பல்லாம் அறுசுவையை ஓப்பன் செய்தால் 75% கேள்விகளும் குழந்தை பிறப்பு சம்மந்தமான கேள்விகளாகத்தான் இருக்கின்றன. இப்படியே போனா அறுசுவையின் பெயரையே மாற்ற வேண்டியிருக்குமோ!!!(அட்மின் அண்ணா கவனிக்க!!!)

அறுசுவை ஓபன் பன்னி தலைப்பை பார்த்தா எதுவும் தெரியல உள்ளே போனால் தான் தெரியிது இவ்வளவு அசிங்கமா ஆபாசமா கேள்விகள்
கேள்விகளுக்கும் ஒரு வரை முறை இல்லயா???? என்ன பெண்களாக இருந்தாலும் அந்தரங்க விஷயங்களை கேட்ப்பது தவறு தயவு செய்து இது போன்ற பதிவுகளை தவிர்க்கவும்

உண்மை தான் தளிகா மேடம் ஆனா இதை நிறைய பேர் புரிந்து கொள்வதே இல்லை போல... இது ஒரு பொது தளம்... என்ன தான் முகம் தெரியவில்லை என்றாலும் எப்படி தான் கூச்சம் இல்லாமல் பேச முடிகிறதோ தெரியவில்லை... ஏற்கனவே இதை பற்றி பல பேர் சொல்லி இருந்தாலும் இது நின்ற பாடில்லை......
அதிகம் குழந்தை பிறப்பு கேள்விகள் வரக்காரணம் தோழிகள் முந்தைய பதிவுகளை இழைகளை தேடுவதே இல்லை போலும்..... எந்த ஒரு புது இழை சேர்ப்பதானாலும் அதை பற்றி மன்றத்தில் ஒரு முறைக்கு இருமுறை தேடுவது அதிக பலனை தரும்...

நல்ல வேளை நீங்கல்லாமும் சொன்னீங்க...சொல்லிட்டு எனக்கே கொஞ்சம் பயம் புடிச்சிடுச்சு.குழந்தையை எதிர்பார்த்திருப்போர் ஆயிரத்தெட்டு சந்தேகமும் கேள்விகளும் குழப்பங்களுமோடும் இருப்பது சகஜம் தான் ஆனால் ஒளிவு மறைவே இல்லாமல் பச்சையாக கேள்வி கேட்பது கஷ்டமா இருக்கு
.ஏங்க யோசிச்சா நமக்கே புரியாதா எது ரீல் எது உண்மை என்று.எந்த காலத்தில் இருக்கோம். ஒரு பக்கம் துணி மாத்த கூட வழியில்லாம அங்கங்க கேமராவை வச்சு அதை அஞ்சு நிமிஷத்தில் யூ டியூபில் உலகத்துக்கே காட்டர அளவுக்கு டெக்னாலஜி தாண்டவம் ஆடுரப்ப ஒரு பக்கம் எதோ முதல் முறை நம்ப ஊரில் ஒரு கர்ப்பம் நிகழ்ந்தது போல நான் கர்ப்பம் இனி நான் என்ன சாப்பிடனும்.எனக்கு பாயாசம் ரொம்ப புடிக்கும் டெயிலி 2 லிட்டர் பாயாசம் குடிக்கலாமா..மூஞ்சி கழுகினால் கர்ப்பம் தரிக்காதாமே போன்ற கேள்விகளை கேட்கிறப்போ என்னன்னு சொல்றது.

என்னைக் கேட்டால் ஆன்மீகம் போல இதற்கும் தடை போடலாம். பிறரிடம் அறுசுவையை பார்க்க சொல்லக்கூட சங்கடமா இருக்கு(பெரியவர்களிடம்).

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

எல்லோரும் இங்கே காட்டு கத்தல் கத்தினாலும் நாங்க அப்படிதான்னு அங்க கேள்வி கேட்டு பதிலும் சொல்றாங்க. என்ன பண்ண? அய்யோ! அய்யோ!

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

உதவி’னு தலைப்பை பாத்து ஓப்பன் பன்னி பாத்தா,படிக்கும்போதே நமக்கு உள்காய்ச்சல் வந்துடுதுபா...

எப்படிதான் இப்படி அந்தரஙமான கேள்வியலாம் மனசு வந்து டயிப் பன்ன முடியிதோ???

இதுல வேர கேக்குரது தப்புனு தெரிஞசும், ”தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க”ன்னு வேர சொல்ரது,,, படிக்கும்போதே நமக்கு கோவமும்,பாவமுமா இருக்கு...

அன்புடன்
*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

மேலும் சில பதிவுகள்