ஸ்பெஷல் மீன் ரோஸ்ட்

தேதி: January 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

முள் அதிகமில்லாத மீன்(வஜ்ஜிரம்) - 1/2 கிலோ
தேங்காய் எண்ணை - 1/2 கப்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 இன்ச் துண்டு
தக்காளி - 1
புளிக் கரைசல் - 2 ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் மீனை கழுவி தண்ணீர் வடிய விட்டு மீன் வறுக்க தேவையான சிறிது மஞ்சள் தூள்,மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 2 மணிநேரம் வைக்கவும்
பின்பு தேங்காய் எண்ணை காயவைத்து மீனை முக்கால் பாகம் வேகுமளவு வறுத்து எடுக்கவும்.மொருமொருப்பான வறுக்க கூடாது
பின்பு வறுத்து மீதமுள்ள எண்ணையில் வெங்காயம்,பச்சை மிளகாயை நன்குசிவக்க வதக்கவும்
பின்பு அதில் பொடியாக நறுக்கின அல்லது தட்டிய இஞ்சியை சேர்த்து வதக்கவும்
பின்பு தக்காளி சேர்த்து உடைய வதக்கவும்
பின்பு புளிக் கரைசல் ஊற்றி மஞ்சள் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
பின்பு தேங்காய்ப் பால் ஊற்றி,தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
கொதித்ததும் மீனை போட்டு அதிகம் கிளறாமல் ஒருமுறை பிரட்டி விட்டு மூடி விடவும்
தீயை நன்கு கூட்டி அதிக தீயில் தேங்காப் பால் சேர்த்த குழம்பு வற்றும் வரை சுமார் 15 நிமிடம் விடவும்
குழம்பு சுண்டி மீனோடு சேர்ந்து மேலே எண்ணை தெளிந்து நிற்கும்போது தீயை அணைத்து விட்டு கறிவேப்பிலையை கசக்கி போட்டு லேசாக கிளறி மூடி விடவும்
சுவையான மீன் ரோஸ்ட் ரெடி


இதுவரை நான் சமைத்த உணவுகளில் அதிகம் பாராட்டுக்களை வாங்கித் தந்த குறிப்பு எனலாம்.மீனை அதிகம் கிளறினால் உடைந்து போகும் என்பதால் மீனைப் போடும் முன்பே குழம்பில் உப்பு சரிபார்த்து விடவும் மற்றும் வற்ற விட்டபின் உப்பு கூடும் என்பதால் குழம்பில் சிறிது பார்த்து உப்பு போடலாம்.இதனை அடுத்த நாளுக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அலாதியாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ரூபி-நீ-சொன்ன-மீன்ரோஸ்ட்-இதுவா.ரோஸ்ட்-என்று-நீ-சொன்னதும்-நான்_ஃப்ரை-என-நினைத்து-விட்டேன்.இது-திக்-க்ரேவி-போல-இருக்குமா?-இல்லை-குழம்பா?.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

yesterday i try your recipe, my friends all eat very well and so tasty.thanks.

" Life is a Festival, Celebrate it "

ஹாய் தளிகா இன்று உங்க மீன் ரோஸ்ட் செய்தேன்பா நல்லா இருந்தது