தேதி: January 17, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
எலுமிச்சை பழம் - ஒன்று
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு
கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு, எண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் - 2
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை - சிறிது
சாதம்
எலுமிச்சை சாறு எடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

இதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேர்கடலை சேர்த்து பிரட்டவும்.

எலுமிச்சை கலவை சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.

சாதத்துடன் இந்த எலுமிச்சை சாறு கலந்து அரை மணி நேரம் ஊற வைத்தால் சுவையான எலுமிச்சை சாதம் தயார்.

Comments
லெமன் சாதம்
ஹாய் வனிதாக்கா எப்படி இருக்கீங்க?பொங்களெல்லாம் எப்படி?பொங்கல் என்றதும் ஆளையே காணுமே. என்ன ஸ்பெஸல் செய்தீங்க?லெமன் சாதம் நன்றாகவுள்ளது.அழகான ப்ரசன்டேசன்.
வனிதாக்கா
வனிதாக்கா எங்க ரம்யாவ ரொம்ப நாளா காணும்.அருசுவையில் கொஞ்சநாளா ஆளே இல்லையே?
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
கீஃபா... மிக்க நன்றி. பொங்கல் வேலை கொஞ்சம் அதிகம் அதான் பதிவு போட முடியல. அடிக்கடி எட்டி பார்த்துட்டு தான் இருந்தேன்... சமீபத்திய பதிவுகள் ரொம்ப ஓடி இருக்காது, பார்த்துட்டு யாருமில்லைன்னு போயிடுவேன். ரம்யாவை நானும் தேடிட்டு தான் இருக்கேன். கொஞ்சம் பிசியா இருக்காங்க போல. மெயில் பண்ணா நீங்க தேடினதா சொல்றேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹலோ..வனீ...
ரொம்ப நல்லாயிருக்கு வனி லெமன் சாதம். தண்ணீர் சேர்ப்பதால் புளிப்பு சுவை மாறிடாதா வனி....ஏன்னா சுடுசாதத்தில் அப்படியே பழத்தை பிழிந்து பின்பு எண்ணெயில் வறுத்த பொருட்களை சேர்ப்பேன்.
radharani
ராதா
நிச்சயம் மாறாது நல்ல சுவையா இருக்கும். செய்து பாருங்க. நான் இது போல் தயாரித்து வைத்து கொண்டு தேவையான போது சாதத்தில் கலந்து கொள்வேன். மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vanika
ரொம்ப நாள் கழிச்சி வரேன் வந்ததும் என் பேவரைட் டிஷ் சூப்பர் வனிக்கா சேம் பிரபரேஷன் தா நானும் சைட் டிஷ்ஷும் சேர்த்து போட்டிருந்தா அப்டியே சாப்பிட்டிருப்பேன் வாழ்த்துகள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
ரேணு
மிக்க நன்றி. அடுத்த முறை செய்யும்போது உருளை வறுவலோட கொடுத்துடறேன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
வனிதா நாங்க தண்ணீர் சேர்க்காமல் செய்வோம் . தண்ணீர் சேர்ப்பதால் சாதம் நச நச வென்று நீர் விட்டது போல் இருக்காதா?. ஆனா உங்கள்த பார்க்கும் போது இப்பவே சாப்பிடணு போல தோணுது.
பாக்கவே சாப்பிடணும் போல
பாக்கவே சாப்பிடணும் போல இருக்கு.... என்ன அரிசி போட்டு இருக்கீங்க?
நன்றி
கலைமகள்... மிக்க நன்றி. கண்டிப்பா சொத சொதன்னு ஆகாது. நான் எப்பவுமே இது போல் தான் செய்கிறேன், சாதம் நீர் முழுவதையும் இழுத்து கொண்டு நன்றாக இருக்கும். செய்து பாருங்க. :)
பிரியா... மிக்க நன்றி. புழுங்கல் அரிசி தான் போட்டிருக்கேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
enakku romba pidicha satham
enakku romba pidicha satham but ennod amma differnta senju tharuvanga ithu differnta iruku pakumbothe sapdanumbola thonuthu thanks
கண்மனி
மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா