பெண்களின் படைப்பு என்றால்....

ஒரு நாள் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு போன் செய்திருந்தேன். இன்டர்நெட் மூலம் என் படைப்புகளை அனுப்ப இமெயில் ஐடி கேட்டேன். உடனே பத்திரிகை அலுவலர் "என்ன மேடம், சமையல் குறிப்பா?" என்றார். எனக்கு கொஞ்சம் கோவம், வியப்பு; பெண்களின் படைப்பு என்றால் சமையல் குறிப்பு, கோலம் இவை தானா?

சரியான கேள்வி ரஞ்சனி.....பல பேருக்கு பெண்கள் என்றாலே அவர்கள் இதற்குத்தான் லாயக்கு என்ற எண்ணம் நிறையவே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மைதான்!

ஹாய் ரஞ்சனி மேடம் எப்படி இருக்கிங்க.நிறைய பேர் பெண்களை வேளைகாரிபோல் நடத்துவது.பெண்களின் முன்னேற்றம் எத்தனை எத்தனை சொல்லவார்த்தை இல்லை.

நன்றாக இருக்கிறேன் தர்ஷினி. நீங்கள் நலமா? என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தது பற்றி மகிழ்ச்சி.
நீங்கள் சொல்லுவது மிகச் சரி. ஆனால் நாமும் (பெண்கள்) கொஞ்சம் மாற வேண்டுமோ என்று தோன்றுகிறது.

You never get a second chance to make a first impression.

என்ன செய்வது எங்களையும் மதிங்க என்று இமயமலைக்கு ஓடக் கூட வேணாம்.எப்பவும் அந்த பாழா போன சீரியலை பார்த்து பார்த்து மூளை மழுங்கி .சீரியல் கதையை அவங்க வாழ்க்கை ப்ரச்சனையை விட முக்கியமா பேசிக்கிறது சாதா சளி புடிச்சிட்டா கூட உயிர் போற அளவுக்கு பில்ட் அப் விடுறது,எந்த செய்தியை படிக்கிறோமோ இல்லையோ இன்னைக்கு எந்த நடிகை பெயரில் சேலை வந்திருக்குன்னு ரொம்பவே கரெக்டா தெரியும் இதெல்லாம் நம்மையே தரம் தாழ்த்திக்க சரியான காரணம்.ஒவ்வொரு பெண்ணும் அவங்கவங்க வீட்டுக்காரர்கிட்ட மதிப்பும் மரியாதையுமா நடந்துகிட்டாலே அவங்களுக்கு நம் மேலான பார்வை மாறும்

ரொம்ப நன்றி தளிகா. மிக அழகாகச் சொல்லி விட்டீர்கள். நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதிலேயே சுழன்று கொண்டு இருக்கிறோம்.
நம்மிடம் இருக்கும் தனித் தன்மையை கண்டு பிடித்து அதில் முன்னேறலாம் என்று நினைக்காமல் அடுத்தவரை பார்த்து பொறாமை, நன்றாக இருக்கிறவர்களை மனம் விட்டுப் பாராட்டாமல் அவர்களிடம் என்ன குறை கண்டு பிடிக்கலாம் என்றே வாய்ப்புக்குக் காத்திருப்பது...
இன்னும் இன்னும் எத்தனையோ.... மாறுவோமா இனியாவது?

You never get a second chance to make a first impression.

நான் இதுக்குலாம் வாக்குவாதம் பண்ண மாட்டேன். பெண்கள் என்றால் சமையலில் கெட்டிக்காறங்க தானே... அதனால் அதை -ve ஆக எடுக்காம, பதிலுக்கு இங்க இப்போ நீங்க கேட்ட இதையே ஒரு டாப்பிக்கா பெண்களுக்கான கட்டுரையா எழுதி அதே ஆளுக்கு அனுப்பிடுவேன். நல்லா நெத்தியில் அடிச்ச மாதிரி இருக்கனும். இதெல்லாம் மனசுக்கு கொண்டு போய் மூலையை குழப்பிக்க வேண்டிய விஷயம் இல்லை... இப்படி தான் தட்டிவைப்பாங்க, அதை மனசுக்கு கொண்டு போனா உட்கார்ந்துருவோம்.

பெண் என்றால் இதை தான் செய்யனும்னு ஏதும் இல்லை... எல்லாம் செய்ய முடியும்னு சொல்ல கூடாது, செய்யனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆட்ரி ஹெப்பர்ன் என்கிற பெண்மணி பிரிட்டிஷ் நடிகை. மிகச் சிறந்த மனித நேயம் கொண்டவர். இவர் கூறும் அழகுக் குறிப்புகளை படியுங்கள்.

• கண்கள் அழகாக வேண்டுமா? உங்களைச் சுற்றியுள்ளவர்களின் 'நல்ல தன்மை' யைப் பார்க்கவும்.
• மெல்லிய உடல் வேண்டுமா? உங்களின் உணவை பசித்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
• அழகான கூந்தலுக்கு: தினமும் ஒரு முறையாவது ஒரு குழந்தை உங்கள் கூந்தலை தன பிஞ்சுக் கைகளால் கோதி விடட்டும்.
• உங்களது அறிவுத் திறனால் நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட தோளும் பெறுங்கள்.
• யாரையும் துச்சமாக எண்ணாதீர்கள்; பொருட்களை விட மனிதர்கள் தான் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்; துயரத்தில் இருப்பவர்களை மீட்டுவாருங்கள்; அவர்கள் நம்பிக்கையை புதுப்பியுங்கள்; கவலைகளில் இருந்து விடுவியுங்கள்; அவர்களுக்கு புத்துயிர் கொடுங்கள்; அவர்களது பாதையை சீர்படுத்துங்கள்.
• இதனால், உங்களுக்கு ஒரு தேவை ஏற்படும்போது, உதவ ஆயிரம் கரங்கள் இருக்கும்.
• வயது ஆக ஆக உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பது - ஒன்று உங்களுக்காகவும், இன்னொன்று மற்றவருக்காகவும் என்பதை உணருங்கள்.
• பெண்ணின் அழகு அவளது உடைகளிலோ, அவளது உருவத்திலோ, கூந்தலை முடியும் அழகிலோ இல்லை.
• ஒரு பெண்ணின் அழகை, அவளது அன்பு நிறைந்த இதயம் என்கிற வாசல் மூலம் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
• ஒரு பெண்ணின் அழகு அவள் முகத்தில் இருக்கும் மறுவில் இல்லை. அவளது உண்மையான அழகு அவளது ஆத்மாவை பிரதி பலிப்பது. அவள் நம்மிடம் காட்டும் பரிவில், பேரார்வத்தில் அழகு இருக்கிறது; வருடங்கள் செல்லச் செல்ல அவளது அழகும் வளர்ந்து கொண்டே போகிறது.

படித்து முடித்தவுடன் நீண்ட மௌனத்தில் ஆழ்ந்து விட்டேன். எத்தனை அருமையான, சத்தியமான வார்த்தைகள். கடைப் பிடிப்போமா பெண்மணிகளே?

You never get a second chance to make a first impression.

சரி விடை பெறுகிறேன். நாளை பார்ப்போம்

You never get a second chance to make a first impression.

சில நேரங்களில் சில மனிதர்கள்.

போற்றுவார் ​போற்றட்டும்
புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்... விடுங்க

வணக்கம் ரஞ்சனி மேடம், நானும் எனக்கு நடந்த ஒரு விஷயத்தை அறுசுவைத் தோழிகளிடமும், உங்களிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
என் திருமணத்தின் போது எனக்கு வயது 18. நான் பெங்களூரில் 3ம் வகுப்பு வரை கன்னடத்தில் படித்ததால் அப்போதுதான் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன், என் படிப்பை இடை நிறுத்தி என் அப்பா திருமணம் செய்துவிட்டார்.என் கணவர் எனக்கு உறவுமுறை, ஆனாலும் அவரும் அவர் குடும்பத்தாரும் மெத்த படித்தவர்கள்.
ஒருநாள் அவர் நண்பர் அழைப்பின் பேரில் அவருடன் ஹோட்டலுக்கு சென்றிருந்தோம்.அந்த நண்பரும் அவர் மனைவியும் ஆசிரியராக இருக்கிறார்கள்.
என் கணவரும், அவர்களும் உலக விஷயங்கள் பற்றியும் , அரசியல் பற்றியும், இன்னும் நிறைய விஷயங்கள் பற்றியும் பேசினார்கள்.
எனக்கு ஒன்றுமே தெரியாத காரணத்தினால் நான் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். இதை பார்த்த அந்த நண்பரும், அவர் மனைவியும் என்னை பார்த்துக் கேட்டார்கள் "ஏன் பேசாமல் இருக்கிறீர்கள், சரி எங்களுடன் நீங்கள் என்ன பேச முடியும் .சமையல் பற்றியும், சமையலறைப் பற்றியும் பேசினால் ஏதாவது பேசுவீர்கள்"வேறென்ன தெரிந்து விட போகிறது உங்களுக்கு" என்றார்கள்.
ஆம் உண்மைதான்; அன்று எனக்கு சமையலைத்தவிர எதுவுமே தெரியாதுதான். ஆனால் இன்று நான் எம்.காம் பட்டதாரி.
ஆங்கிலம், ஹிந்தி கற்றுக்கொண்டேன், கணிணி வகுப்புகளுக்கு சென்று கற்றுக்கொண்டேன். ஐஏஎஸ் என் லட்சியம். இந்த என் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த நண்பரும்,அவர் மனைவியும்தான்.எனக்கு சோர்வு வரும்போது அவர்களின் பேச்சுதான் ஊக்கம் கொடுக்கும்..அவர்கள் பேசிய அந்த அலட்சிய வார்த்தைகள்தான் எனக்குள் இன்னும் இன்னும் உயர வேண்டும் என்ற வெறியை தூண்டிவிட்டது.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

மேலும் சில பதிவுகள்