"நச்" னு இருக்கணும்..

ஹாய் தோழீஸ்!!

ஒரே ஒரு உதவி பிளீஸ்... திருமணத்திற்கு பின் வெளிநாடு செல்லவிருக்கும் ஓர் இந்து மணப்பெண்ணுக்கு என்ன மாதிரி பரிசு குடுக்கலாம்? எதிர் பார்க்காத மாதிரியும், விட்டிட்டு போக மனசு வராத மாதிரியும், "நச்" னும் இருக்கணும்.. அதுக்காக ஐடியா சொல்றன்ற பேரில என்னை பிச்சைக்காரி ஆக்கிடாதீங்கப்பா.. பிளீஸ்..
<!--break-->

போட்டோ பிரிண்ட் பண்ண keychain coffee mug குடுக்கலாமான்னு பாருங்க. Tshirt நல்ல சாய்ஸ் தான், foreign ல அதெல்லாம் போட்டுக்க வெட்கபடமாட்டாங்க. இன்னும் சொல்ல போனா ரொம்ப சந்தோஷ படுவாங்க. உங்க friend விருப்பம் இருக்கா நு தெரிஞ்சுக்குங்க. spouse pet நேம் embroidery பண்ணிகுடுங்க. உங்க friends gang குனு எதாவது ஸ்பெஷல் நேம் இருந்தா அது embroidery பண்ணிகுடுங்க. உங்க friend உடைய சின்ன வயசில இருந்து எடுத்த முக்கியமான போடோஸ் collect பண்ணி collage மாதிரி pannikudunga.
traditional ஆக எதாவது குடுக்கனும்னா காமாட்சி விளக்கு ஐம்பொன் ல வாங்கி குடுங்க. விலை கம்மியா தான் இருக்கும். வெள்ளி குங்கமசிமிழ் வாங்கி குடுங்க.
உங்கள் friendku படிப்பதில் ஆர்வம் இருந்தால் ஒரு நல்ல புத்தகம் வாங்கி பரிசளியுங்கள்

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

திவ்யா...கதை முடிவை சொல்லாமல் ஏமாத்திட்டிங்களே...

சரி.. உங்க தோழிக்கு கண்ணாடி வளையல் பிடிக்கும்னா.. ஒரு ரோல் {கடையில் இருப்பது போல்,(2,3 பழைய வார மலர் புக்கை அப்படியே உருட்டி நல்ல டைட்டா நூலால் கட்டினால் வளையல் ரோல் ரெடி)} 5, 6 செட் நல்ல டிசைனா வாங்கி தரலாம்..

அவங்க வெளிநாடு போனால் டிரஸ்க்கு மேட்சா போட்டுகலாம்...

வெளீநாட்டில் கிளாஸ் வலையல் கிடைக்காது, கிடைத்தாலும் விலை அதிகம் அங்கே..

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

நல்லா ட்ரெண்டியா ஒரு handbag வாங்கி கொடுங்களேன்..
கடையில் பார்த்தேன் சின்ன பிளாஸ்க் வித் 2 மக்ஸ்.. நல்லா யூஸ் ஆகும்......
அவங்க ரெண்டு பேர் போட்டோவை வாங்கி அழகா பெட் ரூமில் டேபிளில் வைக்கிற மாதிரி சின்னதா பிரேம் பண்ணலாம்.. கிளாஸ் பிரேமா இருந்தால் க்யூட்டா இருக்கும்... சின்னதா இருந்தாதான் எடுத்துட்டு போவாங்க........

ரொம்ப நன்றி எல்லோருக்கும்.. நானே யோசித்துப்பார்க்காத அளவிற்கு என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யிற மாதிரி உங்கள் அனைவரின் ஐடியாக்களும் சூப்பரா இருந்தது.. அக்ஷுவலா உங்கள்ள ஒருத்தர் சொன்னதைத்தான் நான் சூஸ் பண்ணியிருந்தேன்.. அதுக்காக ஷொப்பிங்க் போறப்போ தான் ஒரு ரொம்ப அழகான புதுமாதிரியா ஒரு பித்தளை விளக்கை பார்த்தேன்.. விட்டுட்டு வரவே மனசில்லை.. சோ அதையே வாங்கிட்டேன்.. இதுக்கும் உங்க எல்லோருக்கும் தான் நன்றி சொல்லணும்.. ஏன்னா நீங்க சொன்னதை தேடப்போய் தானே இது கிடைத்தது.. மீண்டும் ஆர்வமாக பதிலளித்த எல்லா தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

மேலும் சில பதிவுகள்