தேதி: July 20, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
செம்பருத்தி பூ - 10
எலுமிச்சைப்பழம் - 3
சீனி - 4 அல்லது 5 மேசைக்கரண்டி
தண்ணீர் - 5 டம்ளர்
தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதித்தவுடன் செம்பருத்தி இதழ்களை மூழ்கும்படி அதில் போட்டு மூடிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.
அதன் சாறு முழுவதும் இறங்கி தண்ணீர் ரோஸ் கலரில் ஆனவுடன் இதழ்களும் வெளிர் நிறத்தில் ஆகிவிடும்.
அதை வடிகட்டி எடுத்து, சீனியை அதனுடன் கரைத்து ஃபிரிட்ஜில் சுமார் ஒரு மணி நேரம் வைக்கவும்.
பிறகு அதில் எலுமிச்சைப்பழங்களை பிழிந்துவிட்டு தேவைப்பட்டால் ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறலாம்.
இது வெயிலுக்கேற்ற குளிர்ச்சி தரக்கூடிய சுவையான ஒரு பாரம்பரிய பானம்.