சகல கலா வ(னி)ல்லிக்கு வாழ்த்துக்கள் !!!

நம் அறுசுவையின் சூப்பர் ஸ்டார்...சமையல்,கைவினை,மெஹந்தி,பட்டி மன்றம்,தொடர் கட்டுரைகள்,அப்பப்ப கவிதை என கலக்கி கொண்டிருக்கும் சகல கலா வல்லி 'திருமதி.வனிதா கார்த்தி' கூட்டாஞ்சோறில் நானூறு குறிப்புகளுக்கு மேல் கொடுத்து நான்கு கோல்ட் ஸ்டார் வாங்கிட்டாங்க.என்றும் அறுசுவை தோழிகளின் அன்புக்குரிய நம் வனிதாவை,வனியை,வனி அக்காவை வாழ்த்தலாம் வாங்க தோழீஸ் !!!

அறுசுவையின் சகல கலா வள்ளி 4 கோல்டு ஸ்டார் வாங்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வனிதா,
தங்கம் விற்கும் விலையில் நான்கு கோல்ட் ஸ்டார் வாங்கிட்டீங்க.;-) கண்டிப்பா எங்களுக்கு ட்ரீட் தரணும்.வித விதமான குறிப்புகள்,அழகான ப்ரசென்டேஷன்,வித்தியாசமான ஆங்கிளில் ஃபோட்டோஸ் என எல்லாமே கலக்கல் தான்.
இன்னும் நிறைய குறிப்புகளுடன் தொடர்ந்து அசத்துங்க.என் மனம் நிறைந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

congratulation.always your craft,cooking, etc very nice. regards.g.gomathi.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வனி... :)

வாழ்த்துக்கள் வனிதா கார்த்தி உங்களுடைய மெகந்தி டிசைன் ,சமையல் குறிப்புகள் ....எல்லாமே சூப்பர் உங்களுக்கு எங்களுடைய குடும்பத்தின் சார்பாக பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

4 ஸ்டார்ஸ் யும் 400 க்கு மேலையும் சமையல் குறிப்பை தந்த நம்ம வனிதா அக்கா இன்னும் இன்னும் சமையல் கலையில் இரட்டிப்படைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
அப்படியே வனிக்காவுக்கு ஒரு பெரிய ஓ போடுவோமா ஓஓஓஓஓஓஓ ......................

வனிக்கா 4 தங்க ஸ்டார் இல்ல 400 கொடுத்தாலும் தகும் உங்க குறிப்புகளுக்கு அவ்வளவு குறிப்புகள், எளிமையானவை, போட்டோஸ் அருமை, விதவிதமானவை, வித்தியாசமானவை, வழங்கும் விதம் இப்படி சொல்லிட்டே போகலாம். வாழ்த்துக்கள் வனிக்கா. இன்னும் பல குறிப்புகள் கொடுத்து நிறைய தங்க ஸ்டார்ஸ் வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஹாய் வனி வாழ்த்துக்கள் உங்க குறிப்பு நெறைய நான் செய்து பார்த்து இருக்கேன் நீங்க 4 கோல்ட் ஸ்டார் வாங்கினது ரொம்ப ரொம்ப சந்தோசம் இன்னும் நெறைய ஸ்டார் வாங்கணும் நீங்க தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ........................................சொல்லிகிட்டே போகலாம் வாழ்த்து அவளோ சந்தோசம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வாழ்த்துக்கள் வனிதா, 400 இல் இருந்து 4000 வரை, அதற்க்கு மேலும் தொடர வாழ்த்துக்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஹர்ஷா... இது எப்போ நடந்தது? பல நாட்களா காணாம போயிட்டு திரும்ப வரும்போது எனக்கு வாழ்த்து சொல்லி இழை துவங்கி வந்திருக்கீங்க... அதுவே பெரிய மகிழ்ச்சி. :) வனிதா கார்த்தின்னு பார்த்ததும் ஒரு நிமிஷம் எனக்கே குழப்பமா போச்சு... யாரை சொல்றாங்கன்னு. இப்படி என்னை இங்க அழைத்த முதல் ஆள் நீங்க தான். இழை துவங்கி வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஹர்ஷா. இனி தொடர்ந்து வந்தீங்கன்னா இதை விட அதிகமா சந்தோஷப்படுவேன். வருவீங்க தானே? ட்ரீட் எப்பா வேணும்னு ஆர்டர் போடுங்க.

வினோ... மிக்க நன்றி. எல்லாம் உங்களை போல் அன்பு தோழிகளின் ஆதரவு தான். :)

கோமதி... மிக்க நன்றி. நீங்க எல்லாரும் ரெகுலரா பதிவு போட்டு ஊக்கப்படுத்தியதே காரணம். :)

சாந்தினி... மிக்க நன்றி. சாந்தினி வந்து வாழ்த்து சொல்றதுன்னா சும்மாவா. ;) உங்க பதிவை ஏதும் குறிப்பில் பார்த்தாலே மகிழ்ச்சி ஆயிடும்.

கவிதா... உங்க எல்லார் வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றிகள் பல :)

சிம்ரா... அநியாயமா காலேஜ் பிள்ளைகளாட்டும் எல்லாருமா சேர்ந்து ஓட்டுறீங்க :) ரொம்ப நன்றி... ஓ போட்டு என் வயசை குறைச்சதுக்காக.

யாழினி... மிக்க நன்றி. உங்க பதிவுகள் என் குற்ப்பில் மிஸ் ஆகியே இருக்காதுன்னு நினைக்கிறேன். எல்லாம் உங்க அன்பு தான் :)

தனா... ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய செய்து பார்த்து நீங்களாம் பதிவு போடுறது தான் மேலும் குறிப்புகள் கொடுக்க ஊக்கப்படுத்துகின்றது. மீண்டும் நன்றி. :)

கார்த்திகா... மிக்க நன்றி. 4000!!! அம்மாடியோ... அறுசுவை தாங்குமா? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்