பால் பாயசம்

தேதி: January 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (10 votes)

 

பால் - ஒரு லிட்டர்
அரிசி - 4 மேசைக்கரண்டி
சர்க்கரை - ஒரு கப்
முந்திரிப் பருப்பு - 15
ஏலக்காய் - 8
குங்குமப்பூ - சிறிது


 

பாயசம் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பாலை குக்கரில் விட்டு அதில் அரிசியை நன்கு களைந்து போட்டு ஆவி வந்ததும் வெயிட்டைப் போடவும். கேஸை சிம்மில் அரை மணி நேரம் வைக்கவும். பின்பு அணைத்து விடவும்.
குக்கரைத் திறந்து கேஸை சிறிதாக வைத்து சிறிது நேரம் விடாமல் கிளறவும். அரிசி வெந்து பால் கெட்டியாகி இளமஞ்சள் நிறமானதும், அதில் சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை கரைந்து சேர்ந்து கொண்டதும், முந்திரிப் பருப்பை மிக்சியில் நைசாக அரைத்து சேர்க்கவும்.
ஏலக்காயைப் பொடி செய்து போட்டு குங்குமப்பூவை போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். முந்திரிப் பருப்பை சீவிப் போட்டு சூடாகவோ, குளிர வைத்தோ கப்புகளில் ஊற்றி பாயசத்தைப் பரிமாறவும். பார்ட்டிகளுக்கு ஏற்ற சுவையான ரிச்சான பாயசம் இது!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாயாசம் சூப்பர்ப், பார்க்க ரொம்ப அழகா இருக்கு.....

இப்படிக்கு ராணிநிக்சன்

ராதாம்மா பால்பாயாசம் மிக அருமையாக இருக்கு.பார்க்கும் போது இப்பொழுதே குடிக்கவேண்டும் போல் இருக்கிறது.

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கும் நன்றி

ராணி....என்னப்பா....எப்படி இருக்கே? எங்க உன்னை ஆளையே காணும்? மறந்தாச்சா? டைம் கிடைக்கிறப்போ ஃபோன் பண்ணு....

தர்ஷினி....வாழ்த்துக்கு நன்றிம்மா....நலமா?

செய்முறை சுலபமா ரொம்ப நல்லா இருக்கு

KEEP SMILING ALWAYS :-)

ராதாம்மா சுவையான சுலபமான பாயசம் வாழ்த்துக்கள்ம்மா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஈஸியா செய்ய கூடிய பாயசம் ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்..

"எல்லாம் நன்மைக்கே"

நாகா, ஸ்வர்ணா, பாக்யலக்ஷ்மி....வாழ்த்துக்கு நன்றி...

பால் பாயச குறிப்பு சூப்பரோ சூப்பர்!

You never get a second chance to make a first impression.

மிக்க நன்றி ரஞ்சனி...

ராதாம்மா, பால் பாயாசம் சூப்பர். இன்னக்கே செய்து பார்த்துடறேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹலோ கல்பனா நலமா? பாராட்டுக்கு நன்றி....செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தால் இன்னும் மகிழ்வேன்!!

ராதாம்மா..... சூப்பர் பாயாசம்..... பார்க்கவே அமர்களமா இருக்கு.....
செய்து பார்த்துட்டு சொல்றேன்.....

Presentation அருமை. பார்டிகளில் நிச்சயம் தூள் கிளப்பும்.

தீபா....பாராட்டுக்கு நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க.

ந்யூ மாம்....உங்க பேரைத் தெரிஞ்சிக்கலாமா? வாழ்த்துக்கு நன்றி....நீங்க சொல்ற மாதிரி பார்ட்டிகளுக்கு சிறப்பான பாயசம் இது. ஜெர்மனியில் உள்ள என் மகன் வீட்டுக்கு போனால் அவனுடைய அந்நாட்டு ஃப்ரண்ட்ஸெல்லாம் மிக விரும்பும் பாயசம்!

ராதாம்மா உங்க பால் பாயசம் இன்னைக்கு தான் பண்ணேன் ரொம்ப நல்லா இருந்தது பசங்களுக்கு புடிச்சு இருந்தது நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா நலமா?செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி....

என் பெயர் கவிதா

Mam, I tried this pal payasam as advised. It came out very well. Great thanks to you

payasam super