களிப்பான அரட்டை!

அன்புத் தோழிகளே....காலை வணக்கம்...வாங்க வாங்க அரட்டைக்கு....

கவிதா...தர்ஷினி எல்லாரும் நலம்....ப்ரீத்தி ஸ்கூல் போயாச்சு...அவ வந்தா எனக்கு கம்ப்யூட்டர் கிடைக்காது!சமையல் இன்னிக்கு சிம்பிள்தான்...சாம்பார், ரசம், வாழைப்பூ பொரியல்...அதான்...சமைச்சு சமைச்சு போரடிச்சுப் போச்சு!!!!

ராதாம்மா , கவி, தர்ஷினி , எல்லாருக்கும் காலை வணக்கம் புதுசா ராணி ஒரு தோழி வந்து இருகாங்க வணக்கம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ராதாம்மா நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க, குட்டி பொண்ணு எப்ப்டி இருக்கா?
கவிதா, தர்ஷினி இதுதான் முதல்தடவை உங்க கூட பேசுவது ரொம்ப மசிழ்ச்சி உங்கள பத்தி சொல்லுங்க நாக் ஆபிஸ்ல இருந்து பேசரேன் அதனால விட்டு விட்டு வருவேன் கோவிச்சுக்காதீங்க... நேரம் கிடைக்கும்போது பதில போடுரேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ராணி....FB க்கு வாயேன்....உன் ஆஃபீஸ்ல FB வருமா? உன்னோட நிறய பேசணும்...தனா நல்லா இருக்கியா?

நான் குவைத்தில் இருக்கிறேன்,எனக்கு இரண்டு மகள்,பெரியவள் கமலி 3 std,இளையவள் வேதினி 1 std,அவர் சிவில் இஞ்ஜினியர்( quantity surveyor).நான் வீட்டில் தான் இருக்கிறென்.எனது சொந்த ஊர் வேலூர்.

நான் நல்ல இருக்கேன் ராதாம்மா பேத்தி ஸ்கூல் போயிடங்களா ? என்ன படிக்கிறாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

கவி இங்கு கறுப்பு ஆடை அனியவேண்டும் என்று கட்டாயம் இல்லை,நாம் நமது ஆடையே அனிந்து போகலாம்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,இருக்கு ஆனால் 2,3 பெண்களாக எங்கு போகலாம்,சிறிது தூரம் மட்டுமே.பக்கத்தில் இருப்பதற்கு மட்டும் தனியாக போவேன்.தியேட்டர் நிரைய இருக்கு,கோவில் இல்லை.

என்ன தர்ஷினி அங்கே இவ்ளோ கட்டு பாடு இருக்கா நீங்க அண்ணா இல்லாம எங்கேயும் போக முடியாதா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

இங்க கடுமையான குளிரா இருக்கு -0 டிகிரி செல்சியஸ்ல இருக்கு.இங்கு இன்னும் எத்தனை நாள் இருக்கும் என்று தெரியவில்லை.உங்களுக்கு தெரியாதா நாம் வீட்டுகட்ட அந்தபனியாரம் சாப்பிடாம வேச்சி இருக்கிறேன்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை தனா,அதனால் நான் எங்கும் போகமாட்டேன்.அப்படி போகவெண்டும் என்றால் இங்கு உள்ளதோழிகளுடன் தான் போவேன்.

மேலும் சில பதிவுகள்