பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?

அன்பு தோழிகளுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... அதனால வனியேவா மீண்டும் நடுவர்ன்னு கோவிக்காம எல்லாரும் வாதிட வரணும்னு அன்போடு கேட்டுக்கறேன். :)

இன்றைய தலைப்பு நம் தோழி ஆயிஸ்ரீ அவர்களுடையது:

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

மிக்க நன்றி ஆயிஸ்ரீ. :)

தலைப்பை நான் விளக்கவே தேவையில்லை, அதுவே விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே ஏற்கனவே விவாதித்த / கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை எடுத்துக்காட்டாக பேச கூடாது என்பதே விதிமுறை. காரணம் தலைப்பு கொடுத்தவர் மனதை காயப்படுத்திட கூடாது. அதனால் இந்த தலைப்பு, அந்த தலைப்பு, அவசியமா இல்லையான்னு போகாம பொதுவா பொழுதுபோக்கானதா இருக்கனுமா, கருத்தோட இருக்கனுமான்னு மட்டும் பேச வேணும்.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

டும் டும் டும் டும் டும்... இதனால் எல்லாருக்கும் தெரிவிக்குறது என்னன்னா... இன்று திங்கள் நடுவர்கள் யாரையும் காணோம்னு, வனி பட்டியை துவங்கிட்டா... யாரும் கோவிக்காம, லீவ் எடுக்காம, ச்ண்டையை ஒளிஞ்சு நின்னு பார்க்காம, வந்து பட்டியில் பதிவிட்டு சண்டையில் கலந்துக்கனும்னு அன்போட கேட்டுக்கறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாட்டாமை பொறுப்பு எடுத்து இருக்கும் நாட்டாமை தோழிக்கு வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நல்ல தலைப்பு

பட்டி நடுவர் வனிதாவுக்கு வணக்கம்!! பட்டிமன்றங்கள் சில கருத்துக்களோடும் , முக்கியத்தகவல்களோடும் இருப்பதே சுவை!! அதுவே பட்டிக்கும் சுவாரஸ்யம் கூட்டும் நல்ல பொழுதுபோக்காக அமையும். ஆகவே "பயனுள்ளதே" என்ற அணிக்காக வாதாட வருகிறேன் நடுவரே!!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

ஹாய் என் அறுமைதோழியே பட்டிதலைவியாக பொறுப்பு ஏற்றதற்கு வாழ்த்துக்கள்.

நடுவருக்கு வணக்கங்களும்,வாழ்த்துக்களும். பட்டிமன்றங்கள் சிரிக்க, சிந்திக்க,கருத்துக்களை சேகரிக்க, தனக்கு தெரியாதை மற்றவர்களுடன் விவாதிக்க, இப்படி பல விஷயங்களில் பட்டிமன்றங்கள் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாகவே உள்ளது. பலகலவை சுவைகளின் சங்கமம் இந்த பட்டிமன்றங்கள். பட்டிமன்றங்களாலும் மக்களின் மனதை சென்றடைய முடியும் என்று உதாரணமாக இருப்பவர்கள் சாலமன் பாப்பையாவும்,லியோனி அவர்களும். பண்டிகை மற்றும் விழா நாளின் மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சியை சேர்ப்பது இது போன்ற பட்டிமன்றங்கள் தான். அப்போது தான் அந்த சந்தோஷ திருநாளே நிறைவாக முடிவு பெறும். அவ்வளவாக பொது இடங்களில்,பொது தளத்தில் பேச தெரியாத என்னையும் பேச வைத்தது இது போன்ற (அறுசுவை)பட்டிமன்றங்கள் தான் என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். பேச தெரிந்தும் தயக்கத்தோடு இருப்பவர்களுக்கு பல விஷயங்களில் தெளிவை ஏற்படுத்தி அவர்களை தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் பேச வைப்பதில் சிறந்த ஆசானாக இருப்பது இது போன்ற பட்டிமன்றங்கள் தான்.

ஆகவே பட்டிமன்றங்கள் பயனுள்ளவையே என்று கூறி என் இந்த சின்ன உரையை முடித்து ஜாம்பாவான்கள் வந்த பிறகு வருகிறேன் ! பட்டிமன்றத்தில் வாதிடும் மற்ற சிங்கம்,புலி தோழிகளுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவருக்கு வாழ்த்துக்கள் , அனைத்துத் தோழிகளுக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். பட்டிமன்றங்கல் என்பவை ஒரு விடயத்தை அக்குவேர் ஆணி வேராகப் பிரித்துக்காட்டி, நன்மை தீமையை எடுத்துக்காட்டி. நாம் விட்ட பிழைகளைச்சுட்டிக் காட்டி , இனிமேல் இப்படி நடக்கலாமே என்று ஒரு கருத்தை நமக்கு உணர வைக்கும் போது அது தானாகவே சுவையாகி விடுகின்றது. சிரிப்பதற்கான ஒரு விடயமாக பட்டிமன்றங்கள் இருக்குமேயானால் அது வெறுமையாகிவிடுகின்றது ஆனால் நல்லபல கருத்துக்களோடு வருமிடத்து பட்டிகல் நம்மை சிந்திக்க வைக்கின்றன அங்கே ஒரு மறுமலர்ச்சி உருவாகின்றது.
பொழுது போக்கிற்கான விடயங்களைவிட பயனுள்ள விடயங்களை மக்க்ள் தேடிக்கொண்டிருக்கிறார்கல் தங்களுக்குள்ள வேலைப்பளுவுக்கு மத்தியிலும். எனவே பயனுள்ள பட்டிமன்றங்கள்தான் சுவை அதுவே எமக்கு தேவை என்று கூறி விடைபெறுகிறேன் மீண்டும் தொடர்வதற்காக. இப்படிக்குப் பூங்காற்று.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நடுவர் வனி அவர்களே !
பட்டியை ஆரம்பிச்சு எங்க மூளைக்கு வேலையை வார்த்து புண்ணியத்தை கட்டிகொன்டிங்க.. ( வயித்துக்கு பாலை வார்த்து ம்மபாங்க இல்ல அது போல )

நிஜமா சொல்றேன் .. பட்டி கருத்துகள் நிறைந்து பயனுள்ளவையா இருக்கணும் !! அது தானே பட்டிக்கு அழகு ..( பொழுதுபோக்கா இருந்தா அது அரட்டை மன்றமா ஆயிடாதா ?)

நல்ல கருத்துகள் , ஒரு மனிதனுக்குள் நல்ல எண்ணங்களை மேம்படுத்தும் தூண்டுகோல்..

அதை தவிர என்ன தான் நிறைய புத்தகங்கள் படிச்சாலும் , அதை புரியும் படியா மேற்கோள் காட்டி , சிறு கதையாவோ இப்போதைய வாழ்கையை ஒப்பிட்டோ பேசும் போது , படிக்காதவர்களும், தன வாழ்கையை செம்மை படுத்த உதவுது ..

நாம தனியா என்ன தான் கத்துகிட்டலும் மற்றவரின் அனுபவங்களும் , எடுபடக்கூடிய வாதங்களும் , ஒருவரின் வெற்றிப் படியில் கைப்பிடி போன்றதுப்பா..
இப்போதைக்கு இந்த பாயின்ட்ஸ்சொட முடிக்கிறேன்..
ஆனா திரும்ப

வருவேன்னு சொல்றேன்..
நல்ல கருத்துகளை கேட்க காதை தீட்டிக்கிட்டு காத்திருங்க!!

பட்டியின் நடுவருக்கும் வாதிடும் சக தோழர்களுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம். இன்றைய காலகட்டத்தில் நாமெல்லாம் எப்படி ஒரு பண்டிகையை கொண்டாடுகிறோம்? கூட்டுக்குடும்பமாகவா இல்லை தொலை(தொல்லை)காட்சிபெட்டி முன்பாகாவா? கூட்டாக தொலைகாட்சி முன்பு தான். சிறியவர் முதல் பெரியவர் வரையிலும் பார்த்து ரசிக்கும் ஒன்று இந்த பட்டிமன்றம் தான். இந்த பட்டிமன்றத்தில் என்ன இருக்கிறது என்று சிரியர்வர்கள் கேட்டது போக இப்பொழுது அவர்களும் அட சாலமன் பாப்பையாவா, ராஜாவா என்று உட்கார்ந்து பார்க்கிறார்கள் என்றால் அதற்க்கு ஒரு முக்கிய காரணம் நகைச்சுவை, அவர்கள் பேசும் தமிழ், அவர்கள் எடுத்துக்காட்டும் உதாரணம். அதனால் பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருந்தால் தான் சுவையாகவும் இருக்கும். சுவையாக இருந்தால் தான் மக்களை கவர முடியும். மக்களை கவர்ந்தால் தான் அதன் பொருளும் எல்லோருக்கும் விளங்கும். மீண்டும் வாதங்களுடன் வருகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவர் அவர்களே ,பட்டிமன்றங்களில் நகைச்சுவை வேண்டும் நாம் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் வெறும் நகைச்சுவைமாத்திரம் பட்டி மன்றத்துக்கு சுவை சேர்க்காது உண்மையை காரமாகவும் தீமையை கசப்பாக இருந்தாலும் எடுத்துக்காட்டியும் மற்றும் எல்லா விடயங்களையும் உள்ளடக்கிவரும்போதுதான் நம் அறுசுவைபோல் மிகநல்ல பட்டிமன்றமாக அது விளங்கும் . பொழுதுபோக்கிற்காக என்றால் எத்தனையோ நிகழ்ச்சிகள் உண்டு அது பட்டிமன்ற எல்லையை தொட்டு விட முடியுமா என்ன? ( நடுவர் அவர்களே நீங்கல் எங்கே)

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்