பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?

அன்பு தோழிகளுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... அதனால வனியேவா மீண்டும் நடுவர்ன்னு கோவிக்காம எல்லாரும் வாதிட வரணும்னு அன்போடு கேட்டுக்கறேன். :)

இன்றைய தலைப்பு நம் தோழி ஆயிஸ்ரீ அவர்களுடையது:

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

மிக்க நன்றி ஆயிஸ்ரீ. :)

தலைப்பை நான் விளக்கவே தேவையில்லை, அதுவே விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே ஏற்கனவே விவாதித்த / கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை எடுத்துக்காட்டாக பேச கூடாது என்பதே விதிமுறை. காரணம் தலைப்பு கொடுத்தவர் மனதை காயப்படுத்திட கூடாது. அதனால் இந்த தலைப்பு, அந்த தலைப்பு, அவசியமா இல்லையான்னு போகாம பொதுவா பொழுதுபோக்கானதா இருக்கனுமா, கருத்தோட இருக்கனுமான்னு மட்டும் பேச வேணும்.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

நடுவரே பட்டிமன்றங்கள் ஓய்வு நேரப் பொழுதுதினைப் போக்கத்தானே?.. எதிரணி சொல்வது போல் பட்டிமன்றம் முழுதும் கருத்துக்களால் நிரம்பி வழிகிறதோ இல்லை அர்த்தமே இல்லாமல் நகைசுவையாக சிரிக்க மட்டும் வைக்கிறதோ எப்படி இருப்பினும் அதைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும்,பங்கு கொள்ளவும் நேரம் இல்லாத போதும்,வீட்டிலும்,அலுவலகத்திலும் அலுவல்கள் இருக்கும் போதும் கூட அவற்றை எல்லாம் விட்டுவிட்டு யாரும் பார்ப்பதில்லையே!! மனிதன் ஒடி ஆடி (ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கும் கம்ப்யூட்டர் வேலையிலும்)உழைத்து சற்று இளைப்பாறும் நேரத்தில் தானே பட்டி மன்றம்... நம் அறுசுவையிலேயே எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு பட்டியில் பங்கு பெரும் அனைவரும் அனைத்து பட்டிகளிலும் பங்கு பெறமுடிகிறதா? இல்லை படிக்கத்தான் முடிகிறதா அவரவர் வேலை நேரம் போக சற்றேனும் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தானே பதிவிட முடிகிறது.. தலை போகிற வேலையை வீட்டில் வைத்துக் கொண்டு யாரும் பட்டியில் பங்கு கொள்வதுமில்லை படிப்பதோ, கேட்பதோ இல்லை.. பதிவிட மனம் இருந்தாலும் சூழ்நிலை பதிவிட விடாது...கருத்து நிரம்பிய பட்டிமன்றங்களும் நகைச்சுவையுடன் ஜனரஞ்சகமாக இருக்கும் போதுதான் அனைவராலும் கவனிக்கப்படுகிறது...ஆக எப்படிப் பார்த்தாலும் பட்டிமன்றங்கள் அடிப்படையில் ஒரு பொழுது போக்கு அம்சமே!! எனவே பட்டி மன்றங்கள் பொழுது போக்காக இருப்பது தான் சுவையே!!

Hello,
Am New to this Forum. I need to do Tally course. Could u pls anyone tel me any good training center at Medavakkam or Velachery?

நடுவர் அவர்களே!! இன்றைக்கு உலகம் போகிற போக்கில் "டிவி, இன்டர்நெட், வெளியிடங்கள்" என எல்லாவற்றிலும் பொழுதுபோக்கும் அம்சங்களைத்தான் தேடுகிறோம். யாருக்குமே கருத்துக்கேட்க விருப்பமில்லைதான்; அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா?
"நகைச்சுவை, பொழுதுபோக்கு" என்றே நாம் ஓடிக்கொண்டிருந்தால், "நாலு பயனுள்ள விஷயங்களை" எப்படி நாம தெரிஞ்சிக்க முடியும்.
பெரிய, பெரிய புத்தகங்களையெல்லாம் படித்து அறிவை வளர்த்த காலம் மலையேறிவிட்டது. போகிற போக்கில் ஒரு கருத்தை காதில் போட்டால்தான் உண்டு. அதற்கு "பட்டிமன்றமே சிறந்த வழி". அதிலும் சமூகம் குறித்த காரசாரமான கருத்துள்ள விவாதங்கள் யாவரையும் கட்டிப்போட்டுவிடும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம் நடுவர் அவர்களே!!
"நீயா? நானா" , "அரட்டை அரங்கம்" போன்ற நிகழ்ச்சிகளில் என்ன நகைச்சுவை உள்ளது? சீரியசான டாப்பிக்குகள் தானே இடம் பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு நாம் எந்த அளவுக்கு அடிமை என்று உங்களுக்கே தெரியும் நடுவரே!! பட்டிமன்றங்கள் "பயனுள்ளதே" என்பதற்கு இதைவிடவும் உதாரணம் வேண்டுமோ!! நடுவர் அவர்களே!!
எதிரணியினர் சொல்லும் நகைச்சுவை பட்டிமன்றங்களால் நாம் சிரிக்கிறோம், கவலை மறக்கிறோம், உண்மைதான். ஆனால் எப்படி? "பெண்கள் சீரியல் பார்ப்பதையும், காதலிப்பதையும், நகை,புடவை வாங்குவதையும், மாமியார்,மருமகள் சண்டையும், வீட்டு பிரச்சினைகளையும் கணவர் வீட்டில் மனைவிக்கு வீட்டில் சிறுசிறு உதவிகள் செய்வதைப்பற்றியும்" கிண்டலடித்து பேசுகிறார்கள். பெண்ணாகிய நாமே அதைக்கேட்டு சிரிக்கவும், ரசிக்கவும் செய்கிறோம்.இத்தகைய நகைச்சுவைதான் வேண்டுமா? எதிரணியினரே!! எங்கே ஒருவரையும் கிண்டல் செய்யாமல், காயப்படுத்தாமல் ஒரு கருத்துள்ள நகைச்சுவை சொல்லுங்கள் பார்ப்போம் எதிரணியினரே!! நகைச்சுவையில் மயங்கி, பொழுதுபோக்கிலே மூழ்கி நம்மையே இழந்துவிடக்கூடாதில்லையா? ஸ்வீட் என்றால் எல்லோருக்கும் கொள்ளைப்பிரியம்தான், ஆனால் எவ்வளவு சாப்பிட முடியும்? திகட்டிவிடுமில்லையா!! அதுவே காரம் என்றால் வயிறு முட்ட சாப்பிடலாம். அப்படித்தான் பொழுதுபோக்கும், நகைச்சுவையும் கூட.
நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு மன்றங்களால் எந்த சாதனைகளும் நிகழ்ந்துவிடவில்லை. அவையெல்லாம் ஜஸ்ட் டைம்பாஸ்தான்.
ஒரு சீரியசான விஷயத்தை காமெடியாக சொன்னால் யார் ரசிப்பார்கள்? முகம் சுழிக்கவே செய்வார்கள். இன்றைய தலைமுறையினர் நல்ல கருத்துடன் காரசாரமாக விவாதிக்கவே (விவாதங்களையே)விரும்புகிறார்கள். அதற்கு உதாரணமாய் டிவி சேனல்களில் விவாத நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கின்றன.
நல்ல கருத்துள்ள பட்டிமன்றங்களால்தான் சமுதாயத்தின் பல முகங்கள் வெளிவருகின்றன. பொதுஅறிவு வளர்கிறது. விழிப்புணர்வு அதிகரிக்கிறது.
(செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை) என்று வள்ளுவர் சொல்கிறார். இதன் பொருள் "படிக்கும் திறனைக்காட்டிலும் கேட்கும் திறனே சிறந்தது" என்பது. அதனால் "கருத்துள்ள பேச்சை கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க!!" அது உங்க வாழ்க்கையில் எப்போதாவது, ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் பயன்படும். (சிறு துரும்பும் பல் குத்த உதவுமில்லையா!!)
ஆகவே எதிரணியினரே காமெடிக்கு காமெடி ஷோக்கள் பல இருக்கிறது. டைம்பாசுக்கும் ஷோக்கள் இருக்கிறது. அதையெல்லாம் பார்த்து சிரிங்க!! டைம்பாஸ் பண்ணுங்க. அதைவிட்டு பட்டிமன்றம் என்பதின் அடிப்படை அம்சத்தை ஏன் மாற்ற முயற்சிக்கனும்.
பட்டிமன்றம் என்று நாம் இன்று சொல்வது அக்காலத்தில் "பட்டிமண்டபம்"னு சொல்லப்பட்டதாம். ஒவ்வொரு கோயிலின் முன் பகுதியிலும் பட்டிமண்டபம் அமைக்கப்பட்டிருக்குமாம். அரங்கேற்றங்கள், நாட்டின் முக்கிய முடிவுகள் எல்லாம் இங்குதான் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுமாம். இத்தகைய நமது பாரம்பரியத்தின், கலாச்சாரத்தின் அடையாளமாய் விளங்கும் பட்டிமன்ற(மண்டப)த்தை கேலிக்கூற்றாக்க வேண்டாமே!! ஆகவே நடுவரே, பட்டிமன்றம் என்பதே முக்கியமான கருத்துள்ள விஷயங்களை விவாதிக்கவே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர்.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

இனிமே எதற்க்காக நாங்க வாதடனும்றேன்.....அதான் எதிரணியே சொல்லிட்டாங்களே...பட்டிமன்றங்கள் " நகைச்சுவைய்டன் மட்டுமல்ல பல்சுவையுடனும் இருக்க வேண்டும் "...இதை தானே நாங்களும் சொல்கிறோம்.

நாம் என்ன பேசுகிறோம் என்பதைவிட எதை பற்றி பேசுகிறோம் அது எப்படி மக்களுக்கு போய் சேருகிறது, அப்படி சேர்ந்த கருத்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். நானும் சொன்னேன், கேட்பது கேட்காததும் அவர்கள் விருப்பம் என்று விட்டுவிட்டால் பின்பு நாம் கருத்துகளை முன்வைத்ததே வேஸ்ட் ஆயிடுமே! எஹ்டை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். காலம் மாறிக்கிட்டே இருக்கு அதற்க்கு தகுந்த மாதிரி நாமளும் நம்மை மாற்றிக் கொண்டு தான் ஆகணும். இல்லை நான் இன்னமும் அம்மி குழவியில் தான் அரைப்பேன், எனக்கெதுக்கு மின்விசிறி அதான் மரம் (அது எங்கே இருக்கு?) இருக்கிறதே என்று எதனை பேர் சொல்கிறார்கள். அதே போல் தான் வெறும் கருத்தை மட்டுமே சொல்லும் பட்டிமன்றங்கள் இந்த காலத்தில் எடுபடவே படாது. அப்படி எல்லாம் இப்படி தான் பட்டிமன்றங்கள் இருக்கணும் என்று வாதிட்டால் பின்பு இவர்கள் மாற்றத்தை எதிர்ப்பவர்கள். மாற்றத்தை எதிர்ப்பவர்களால் எப்படி கருத்துக்களை சரிவர மக்களுக்கு எடுத்து செல்ல முடியும் நடுவரே?

நம்ப தொலைகாட்சி நிகழ்ச்சியே எடுத்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம் தூர்தர்ஷன், மெட்ரோ இப்படி இரண்டு தான் இருந்தது. பின்பு சாட்டிலைட் டிவி வந்தது. வந்ததும் இந்த சீரியல்களும் வந்து சேர்ந்தது. அதில் கூட கருத்தேதும் இருக்கிற மாதிரி தெரியலை. பின்பு பார்த்தான் இதென்ன ஒரே அழுகாச்சியா இருக்குனு யோசிச்சி சினிமாவில் வரும் துண்டு நகைச்சுவையை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அது வெற்றி பெறவே இப்பொழுது அதற்க்கேன தனி சானலே இருக்கு. நகைச்சுவையே காலத்திற்கு ஏற்ற மாதிரி மாறி இருக்கு. என் எஸ் கே வை யாரும் மறந்திருக்கவே முடியாது. அவரின் நகைச்சுவையில் கருத்துக்கள் இல்லையென்று யாரேனும் சொல்லமுடியுமா? கருத்துக்களை மக்களுக்கு வெறும் கருத்துக்களாய் (அதாங்க பிரசங்கம்) சொல்லும் அந்த காலத்திலே இவர் நகைச்சுவையாய் காருதுக்களை சொல்லி வெற்றியும் பெற்றார். எனவே நடுவரே எந்த கருத்துக்களையும் மக்களுக்கு சென்றடைய வைப்பது தான் அறிஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொறுப்பு. அதை தான் இப்போ நடந்து வரும் பட்டிமன்றங்கள் செவ்வன செய்கின்றன. நாங்கள் கருத்துக்களை மட்டும் தான் சொல்லுவோம் என்ற ஒரு சின்ன வட்டத்துக்குள் எங்களை அடைக்காமல் சுதந்திரமாய் மனதுக்கு பிடித்த விதமாய் கேட்பவர்களுக்கும் பிடித்த விதமாய் கருத்துக்களை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். எனவே நடுவர் அவர்களே இதனால் சொல்லுவது என்னெவென்றால் இப்படி கருத்துகளை சொல்லும் நாங்கள் முற்போக்கு சிந்தனையுள்ள மாற்றத்தை எதிர்ப்பார்க்கும் சாதாரண மக்கள். அதனால் தான் சாதாரண எங்களுக்கு ரொம்பவே பிடித்துள்ளது. இந்த சாதாரணம் சராசரியான எல்லா மக்களுக்கும் பிடிக்கும் என்று கூறி (இப்போதைக்கு) என் வாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அடேங்கப்பா... புது மக்கள், குட்டி தலை எல்லாம் வாதிட வந்து பட்டி கலக்கலா போகுது போல. இப்ப தான் குடியரசு தின கொண்டாட்டத்துக்கு போயிட்டு வரேன். ஒரு பட்டிம்னறம் இல்லாம என்ன நிகழ்ச்சி... வெச்சிருக்காலாம். அலுவலக நிகழ்ச்சிகளில் கொஞ்சம் பிசி ஆயிட்டேன் இன்று... நாளை வந்து விளக்கமான பதிவு போடுறேன் எல்லாருக்கும். அதுவரை நீங்க எல்லாரும் இப்ப போலவே தொய்வில்லாம சண்டையை தொடருங்க. :) கோவிக்கவே மாட்டீங்கன்னு தெரியும்... இருந்தாலும்.... கோவிச்சுக்காதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே, பட்டிமன்றங்கள் சிரிக்க மட்டும் தான் என்றால், அதற்கு இதுபோன்ற மன்றங்களே தேவையில்லையே. சிரிப்பு என்பது எல்லா இடத்திலும் கிடைத்துவிட்டு போகப்போகிறது. சர்க்கசிற்கு போய் பப்பூனின் செய்கைகளை பார்த்து சிரிக்கிறோம். என்றாவது அவருக்கு ரசிகர் மன்றங்கள் வைத்திருக்கிறோமா? அல்லது அவருடைய பெர்ஃபார்மன்சிற்காக தனியே கூப்பிட்டு பாராட்டுகிறோமா? இல்லையே. சினிமாவில் வரும் காமெடியன்கள் காஸ்ட்லி காமெடியன்கள் அதனாலேயே அவர்களுக்கென ஏகப்பட்ட கிராக்கி உண்டு. மக்கள் ஒவ்வொரு விஷயத்திலும் சுவாரசியத்தை தான் தேடிச் செல்கிறார்கள் என்றால், டிவியில் காட்டப்படும் மக்கள் அரங்கம்,அரட்டை அரங்கம், கவியரங்கம், கம்ப ராமாயண அரங்கம் என இப்படி கூட்டம் கூடுவதேன்? சிரிப்பதற்கு பல நிகழ்ச்சிகளும்,விஷயங்களும் இருந்தாலும், ஒரு சில விஷயங்கள் மட்டுமே மக்களுக்கு தேவையான, அவர்கள் எதிர்பார்க்கும் கருத்துக்களை, சுருங்க சொன்னால் அறுசுவையோடு சேர்த்து தருகின்றன. அவை இந்த பட்டிமன்றங்களே என்று சொல்வதில் மிகையேதுமில்லை.

மக்களின் மனதிற்கு வார்த்தை ஜாலங்களால் மருந்தளிக்கும் நவீன மருத்துவர்களான, சுக்போகானந்தா,சுகி சிவம், ஜக்கி வாசுதேவ் இன்னும் இவர்களை போல இருக்கும் பலர் வெறுமனே போரடிக்கும் கருத்துக்களை தந்திருந்தாலோ, அல்லது வெறுமனே மக்களை சிரிக்க வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாலோ அவர்களின் தத்துவங்கள் மக்களை சென்றடைந்திருக்குமா? இவர்களுக்கும் பட்டிமன்றங்களுக்கும் சம்பந்தமில்லையென்றாலும், இவர்களும் இந்த தலைப்புக்கு பொருந்தி போகிறார்கள். இந்த இடத்திற்கு இந்த பொன்மொழி சரிவரும் என நினைக்கிறேன். ஒருவனுக்கு மீனை உணவாக தருவதை விட மீன் பிடிக்க கற்று தந்தால் அது அவனையும், அவன் தலைமுறையையும் காக்கும். அது போல தான் இந்த நகைச்சுவையும், அந்த சமயத்திற்கு சிரித்து விட்டு போவது நல்லதா? இல்லையென்றால், ஒரு நல்ல பயனுள்ள கருத்தின் உதவியால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ந்திருப்பது நல்லதா? அதைத்தான் இங்கே நமக்கு கிடைக்கும் பயனுள்ள பட்டிமன்றங்கள் செய்கின்றன.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவருக்கும், பங்கு பெறும் மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்.

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

இங்கே பட்டிமன்றங்கள் எப்படி இருந்தால் சுவைக்கும் என்பதுதானே கேள்வி?

சந்தேகமென்ன, கண்டிப்பாக பட்டிமன்றத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கணும். அப்பதான் சுவைக்கும். அரிய பல கருத்துக்கள், முக்கிய செய்திகள் இவையெல்லாம் பட்டிமன்றத்தில் விவாதிக்கணும், அதை மக்கள் புரிஞ்சுக்கணும் என்றாலும் கூட,அதையும் பல்சுவை கொண்ட பட்டிமன்றமாக ப்ரெசெண்ட் பண்ணினால்தான் எல்லோர் மனசிலும் பதியும்.

ஆரம்ப காலத்தில் பட்டிமன்றங்களில் பெரும்பாலும் புராணங்கள், இதிகாச கதாபாத்திரங்களைப் பற்றி விவாதித்து, அதன் மூலம் இலக்கியச் சுவையை அறிமுகம் செய்ய, ஒரு களமாகப் பயன்படுத்தினார்கள். கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா?, பாசத்தில் சிறந்தவன் இலக்குவனா, பரதனா?, .. இப்படி இருந்தன.

பிறகு - பாரதியாரின் கவிதைகளில் அதிகம் காண்பது தேசபக்தியா, புதுமை விருப்பமா?, - இப்படி சமகால இலக்கியத் தலைப்புகள் இருந்தன.

இவற்றில் பங்கு கொண்டவர்களும் சரி, ரசித்தவர்களும் சரி, இலக்கியத்தில் கரை கண்டவர்களாக இருந்தார்கள். சாமானியர்களுக்கு இவை ரசிக்கவில்லை, காரணம் அவர்களுக்குப் புரியவில்லை.

சமீப காலமாக பட்டிமன்றங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதன் காரணமே, அவை பொழுதுபோக்கு அம்சங்களுடன், நாட்டு நடப்பையும் வீட்டு நடப்பையும் விவாதிப்பதால்தான்.

இன்று கு.ப.ஞானசம்பந்தன், முனைவர் அறிவொளி போன்றவர்கள் நகைச்சுவையோடு கருத்துக்களைத் தந்து, மனதில் பதிய வைக்கிறார்கள்.

இன்னும் உதாரணத்தோடு சொல்கிறேன்.

கர்னாடக சங்கீத கச்சேரிகளைக் கேட்பவர்களுக்கு - ராகம் தாளம் மற்றும் அந்தப் பாடல்களைப் பற்றிய ஞானம் இருக்கும். அதனால் எந்தப் பாடகர்/பாடகி எப்படி ஸ்வரஸ்தானத்தோடு, தாள லயத்தோடு, ராக ஆலாபனை செய்து பாடுகிறார் என்றெல்லாம் விரிவாக அனலைஸ் செய்து ரசிப்பார்கள்.

இசையில் விருப்பம் இருக்கும் எல்லோருக்கும் சங்கீதக் கச்சேரிகளை ரசிக்க முடிவதில்லை. அதற்காக அவர்கள் எல்லோரும் அவுரங்கசீப் என்றும் அர்த்தம் இல்லை.

இன்று திரை இசை ஜனரஞ்சகமாக இருப்பதால்தானே சாமானியர்களையும் ரசிகர்களாக ஆக்கி இருக்கிறது!

கர்னாடக ராக அடிப்படையில் அமைந்த எத்தனையோ சினிமாப் பாடல்கள் இன்று எல்லா மக்களையும் தாளம் போட்டு ரசிக்க வைத்திருப்பதன் காரணம் என்ன?

ராகங்கள் அடிப்படையாக இருந்தாலும், எளிமையான பாடல் வரிகள், இனிமையான குரல், பொருத்தமான பிண்ணனி இசை, வண்ண மயமான திரை ஆக்கம் இதெல்லாம் சேர்ந்து, இசையை காலா காலத்துக்கும் நிலைத்து நிற்க வைத்து விட்டதே.

பாரதியாரின் எத்தனையோ கவிதைகளைப் படித்ததுண்டு, ரசித்ததுண்டு. இப்போ,”நிற்பதுவே நடப்பதுவே” மற்றும் “நின்னை சரணடைந்தேன்” இந்தப் பாடல்களை திரை இசையாகக் கேட்ட பின் மறக்க முடியவில்லையே. ஏனென்றால், இவை, மேலே சொன்ன பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு தரப்பட்டதால்தானே.

இப்படி பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து இருப்பதால்தான், சினிமா, நாடகம், போன்றவற்றுக்கு இணையான வரவேற்பை பட்டிமன்றங்கள் பெற்றிருக்கின்றன.

அன்புடன்

சீதாலஷ்மி

நடுவரே!! இங்குள்ள தலைப்பு என்ன? பட்டிமன்றங்கள் பயனுள்ளதா!! பொழுதுபோக்கா? என்பதுதான். அதுதான் எதிரணியினரே சொல்லிவிட்டார்களே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நகைச்சுவை மலிந்து கிடக்கிறதென்று, அப்புறமென்ன அதை பார்த்து பொழுது போக்கலாமே!! பட்டிமன்றத்தையும் ஏன் வெறும் பொழுதுபோக்காக வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
நகைச்சுவையுடன் ஒரு கருத்தை சொல்லவே முடியாது, அப்படியே சொன்னாலும் அதற்கு "வலு" இருக்காது. பேச்சோடு பேச்சாகவே மறந்து விடுவார்கள். பொட்டில் அறைந்தார் போல நறுக்கென்று சொல்ல வேண்டும். அதுதான் யார் மனதிலும் நச்சென்று பதியும். அதைவிடுத்து நகைச்சுவையாக சொல்கிறேன், நாசூக்காக சொல்கிறேன் என்று இழுத்தால் எப்படி?
"ஏழாம் அறிவு" திரைப்படம் "போதிதர்மன்" என்னும் மாபெரும் மனிதனை தெரிந்துக்கொள்ளவும், நம் மூலிகைகளின் மகத்துவத்தை புரிந்து கொள்ளவும் செய்யவில்லையா? "எங்கேயும் எப்போதும்" திரைப்படம் எத்தனை சிம்பிளாக அனுதினமும் நடக்கும் சாலை விபத்துகளை பற்றி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டது நடுவரே!! அதில் எதிரணியினர் சொன்ன எந்த மசாலாவும் இல்லையே!! படங்களும் கூட சூப்பர் டூப்பர் ஹிட்தானே!!
பொழுதுபோக்கான திரைப்படங்களிலேயே கருத்து சொல்லும்போது, மிக நல்ல தலைப்புகளாலும், சூடான விவாதங்களாலும் சமுதாயத்தை மாற்றும் சக்தி வாய்ந்த பட்டிமன்றங்கள் கருத்துக்களமாகவும், தகவல் களஞ்சியமாகவும் இருக்கக்கூடாது என்று சொன்னால் என்ன நியாயம் நடுவர் அவர்களே!! பொழுதுபோக்கே பயனுள்ளதாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே நடுவரே!!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

நடுவர் அவர்களே! கலக்கலான தலைப்பை கொடுத்துருக்கிங்க (மண்டையை கலக்க )... எப்பவுமே கருத்துச செறிவோடு விஷயங்களை ஆராயும் பட்டியே சிறந்தது..
நகைச்சவை மட்டும் பொழுதுபோக்குன்னு எதிர் அணியினர் நினைக்கிறாங்க.. அது நம் உடலுக்கு ஆரோக்கியம்... அது முதல் படி அதுலயே நிக்கிரான்களா நம் எதிர் அணியினர்.. வரச்சொல்லுங்க கொஞ்சம் மேல ஏறி!!!
ஏன்னா நம் மன ஆரோக்கியத்துக்கு ,பயனுள்ள பேச்சு தான் அறிவார்ந்த கருத்து என்னும் தீனி போட்டு மூளையை விருத்தியாகும்...
//இப்ப பட்டி பிரபலம் ஆனதே, இந்த பொழுதுபோக்கு அம்சங்கள்
நிறைந்ததால தான் /// அப்படியெல்லாம் இல்லைங்க கம்பன் விழா , பாரதி விழா இவைகள் எல்லாம் இப்பவும் பயனுள்ள பட்டிகளா கலக்கிட்டு தான் இருக்காங்க!! கடந்த பாத்து வருஷமா வந்த மீடியா நம்ம மூளையை மழுங்க அடிக்க வைக்கிறாங்க .. அது தான் உண்மை..
//பெரும்பான்மையினர் எதை விரும்பி பார்கிராங்களோ அதை தானே திரும்ப திரும்ப போடுவாங்க.//.ஆனா ஒரு சின்ன கூட்டம் அதுலயும் நல்ல கருத்துக்களை எடுத்து (நீங்க அறுவை ன்னு சொல்ற விஷயத்தை ) வாழ்க்கை படியில் ஏறி போயிட்டே இருப்பாங்க !! நீங்க அங்கேயே உக்காந்து கொல்லுன்னு சிரிச்சிக்கிட்டே இருங்க ...
வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் நகைச்சுவை கலந்து நாட்டு நடப்போட ஒப்பிட்டு சொல்லும்போது புரியாதவற்கும் புரியும்...இது நாங்களும் ஒத்துக்குறோம் .. ஆனா இந்த புலவர்கள், நம் முன்னோர்கள் எல்லாம் எழுதி வெச்சதையும் மிக அழகா பதம் பிரிச்சு விளக்கரப்போ, எவ்வளவு உவமைகள் , மேற்கோள்கள், மென்மையான அப்புறம் மேன்மையான கருத்துகள்., சிற்றின்ப சிறப்புகள், பேரின்பத்தை அடையும் வழி முறைகள் , எல்லாம் தமிழ் இல்லக்கியம் படிக்கத ஆனா தமிழ் மேல் காதல் கொண்டுள்ள அனைவருக்கும் பொருந்தும்...
பொது மேடை,அதில் சிரிக்க சிரிக்க பேசினாலும், மற்றவர் எந்த சூழ்நிலையில் இருக்காங்கன்னு பார்க்கரதையே நாகரீகமான பேச்சும்பாங்க !!இது எப்படி இருக்குன்னா பசியால் வாடும் ஒரு மக்கள் கூட்டத்தை உற்சாகப்படுத்தறேன் ன்னு சொல்லிக்கிட்டு அதிக ருசி சரவணா பவன் சாப்பாட்டிலா? இல்லை பிஸ்ஸா ஹட்டிலா ? பட்டி வெச்சு சிரிக்க சிரிக்க பேசின கதையாம்..
ஏதிக்கே தமிழை தமிழ் ன்னு உச்சரிக்கரவரங்களை ஏதோ வேற்று கிரக உயிர் ஏலியன் மாதிரி பார்க்கிறாங்க . நம் கலாசாரம் , நம் பண்பாடு எல்லாவற்றையும் குழப்பி , மோர் சாதத்தில் பாயசம் மாதிரி இவங்களே எதையோ க்ரியட் பண்ணி (உண்மையான ரசனை எதுன்னே தெரிஞ்சுக்க விரும்பாம ) பாராட்டி தள்ளிக்கிறாங்க . வொய் திஸ் கொலவெரிடி பாட்டையே கூறு போட்டு ஆராய்ந்தவங்களுக்கு கொஞ்சம் கசப்பு மருந்து தேவை தான்.. முதல்ல இந்த மாதிரி விவாத மேடைகள் அலுப்பூட்டும் அறுவை மேடைகள் மாதிரி தான் தோணும் ..ஆனா இந்த காதை கொஞ்சம் விரிச்சு வெச்சு கேட்க ஆரம்பிச்சாங்கன்னா “ கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு “ ன்னு அருமருந்து ஆயிடும் .. அருசுவை தளமே அதுக்கு எடுத்துக்காட்டு ..மசாலா மட்டும் இல்லாம எல்லாம் கலந்து ஆரோக்கியமாகவும் ஆக்குது!!
வாக்கு வாதங்கள் பிரச்சினைகளின் அடித்தளம்னு ஒரு சாரார் நினைத்து ஒதுங்கலாம் .. ஆனா எங்க அணியினர் வாகுவாதங்களை விவாதங்களாக மாற்றி , உறவுகளை பலப்படுத்தும் தூண்களா மாற்றுவோம் ன்னு சொல்லி அதில் ஈடுபடுவோம்.. அப்போ புதிர் சாவி கிடைச்சு அடுத்த கட்டத்துக்கு போவோம்..நிறைய கத்துக்கிட்டு எல்லா தரப்பினருக்கும் பயனுள்ள விஷயங்கள தர நாங்க ரெடிப்பா..
அப்ப நீங்க?
(பி.கு) பயனுள்ள பட்டியே கட்டி கரும்புன்னு ஏன் சொன்னேன்னா கரும்பை அப்படியே தின்ன முடியுமா ? ஆனா கொஞ்சம் கஷ்டப்பட்டு அந்த மேல் தோலை பல்லால் கடிச்சு இழுத்து துப்பிட்டு , சுவைச்சோம்னா எப்படி இருக்கு..அப்படியே இனிப்பு நம்மை இனிமை யால் மூழ்கடிக்கும்>>
என்னடா சீரியசா பேசறாளே , சிரிக்க எதுவும் இல்லையேன்னு நினைக்காதீங்க .. சிரிக்க சிரிக்க பேசினா எதிர் அணியினர் வாதம் செய்யாம சிரிச்சிகிட்டே கிளம்பிடுவாங்க ..அவங்களை பிடிச்சு இழுத்து சிந்திக்க வைக்கனுமே !!
மீண்டும் பதிவிடுவேன் ..ஒழுங்கா வாங்க , .உங்க செவிக்கு உணவிடறேன்..

//நகைச்சவை மட்டும் பொழுதுபோக்குன்னு எதிர் அணியினர் நினைக்கிறாங்க.. அது நம் உடலுக்கு ஆரோக்கியம்... அது முதல் படி அதுலயே நிக்கிரான்களா நம் எதிர் அணியினர்.. வரச்சொல்லுங்க கொஞ்சம் மேல ஏறி!!!
ஏன்னா நம் மன ஆரோக்கியத்துக்கு ,பயனுள்ள பேச்சு தான் அறிவார்ந்த கருத்து என்னும் தீனி போட்டு மூளையை விருத்தியாகும்...//

அடடா நடுவரே எதிரணி மன ஆரோக்கியத்துக்கு கருத்துச் செறிவுள்ள பட்டிமன்றம் தான் சிறந்ததுன்னு எந்த பட்டிமன்றத்தில் தெரிஞ்சுக்கிட்டாங்கன்னு புரியலியே! நகைச்சுவை பட்டிமன்றங்கள் மூலம் நல்ல நகைச்சவைகளைக் கேட்டு கேட்டு மனம் விட்டு சிரிப்பதால்தான் மனபாரங்களும் கவலைகளும் மறைந்து அவர்களது மனநலமும் அதனால் உடல்நலமும் ஏற்படுகிறது.

ஏற்கெனவே நொந்துபோய் இருக்கறவன்கிட்டே போய் கருத்துச் செறிவுள்ள ஆழ்ந்த சிந்தனையுள்ள பட்டிமன்றம் நடத்தினால் அவனுடைய மூளைக்கு ஏதாச்சு போய்ச் சேரும்னு நினைக்கறிங்க? நகைச்சுவையின் மூலம் அவனது மனதை லேசாக்கி புத்துணர்வூட்டி அதன் பின் சொல்லும் விஷயங்கள்தான் அவன் மூளையில் பதியும்.

// அப்படியெல்லாம் இல்லைங்க கம்பன் விழா , பாரதி விழா இவைகள் எல்லாம் இப்பவும் பயனுள்ள பட்டிகளா கலக்கிட்டு தான் இருக்காங்க!! //

போங்க நடுவரே கம்பன் கழகம்னு சொன்னாலே எனக்கு கடுப்புதான். அது ஏன்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்கறேன் :). அவங்க நடத்துற பட்டிமன்றங்கள் எல்லாம் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான். என்னைய மாதிரி ஆளுங்க அங்கிட்டு போனா ஏன்டா போனோம்னு நொந்துக்கிட்டுதான் வருவோம். ஒன்னுமே புரியாது.

பட்டிமன்றங்கள் பாமரனுக்கும் போய்ச் சேரணும்னா அவர்களுக்கு புரியும் சொல்நடையில் நகைச்சுவையாக பேசினால்தான் பட்டிமன்ற சுவையை அம்மக்களும் அனுபவிக்க முடியும்.

சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றங்கள் பிரபலமாகும் வரை பட்டிமன்றம் என்றால் கிராம மக்கள் பலருக்கும் அது என்னவென்று தெரியாது. எங்கள் ஊரில் "பட்டி" என்றால் அது நாயைக் குறிக்கும். பட்டிமன்றம்னா அது என்னவோ "பட்டிகள் (நாய்கள்)" கூடி குரைக்கும் இடம் போல இருக்குன்னு சொன்னவர்கள் இன்று பட்டிமன்றத்தை ரசித்து ருசிக்கிறார்கள் என்றால் அதற்கு பட்டிமன்றங்கள் சாமானியனுக்கும் புரியும் வகையில் எளிய தலைப்புகளோடு நகைச்சுவை மன்றங்களாக மாறியதுதான் காரணம்.

//முதல்ல இந்த மாதிரி விவாத மேடைகள் அலுப்பூட்டும் அறுவை மேடைகள் மாதிரி தான் தோணும் ..ஆனா இந்த காதை கொஞ்சம் விரிச்சு வெச்சு கேட்க ஆரம்பிச்சாங்கன்னா “ கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு “ ன்னு அருமருந்து ஆயிடும் ..//

முதல்லயே அறுவையா தோணிடுச்சுன்னா யாருங்க காது கொடுத்து கேட்பாங்க. எங்களுக்கு புடிக்காத விஷயம் அல்லது புரியாத விஷயத்தை கேட்டோம்னா கரகாட்டக்காரன் படத்துல வர செந்தில் மாதிரி கண்ணை மூடி தூங்கிடுவோம். அப்புறம் எங்கிட்டு இருந்து காதை திறந்து வைக்கறது?!!

//என்னடா சீரியசா பேசறாளே , சிரிக்க எதுவும் இல்லையேன்னு நினைக்காதீங்க .. சிரிக்க சிரிக்க பேசினா எதிர் அணியினர் வாதம் செய்யாம சிரிச்சிகிட்டே கிளம்பிடுவாங்க ..அவங்களை பிடிச்சு இழுத்து சிந்திக்க வைக்கனுமே !!//

பாருங்க நடுவரே! எதிரணியினரே நகைச்சுவை இல்லாம சீரியசா மட்டுமே பேசினா யாரும் ரசிக்காம போயிடுவாங்களோன்னு பயப்படறாங்க. ஆனா கருத்துள்ள பட்டிமன்றம்தான் சிறந்ததுன்னு வாதாடறாங்க. என்ன கொடுமை சரவணா இது????

//மீண்டும் பதிவிடுவேன் ..ஒழுங்கா வாங்க , .உங்க செவிக்கு உணவிடறேன்..//

அய்யோ நடுவரே! வெறும் கருத்துக்களா பேசினா பார்வையாளர்களை "ஒழுங்கா வாங்க"ன்னு மிரட்டி கூப்பிட வேண்டியிருக்கு. ஆனா நகைச்சுவை பட்டிமன்றம்னா அறுசுவை பட்டிமன்ற பக்கங்கள் ட்ராஃபிக் ஜாம்னால திக்கு முக்காடிப் போயிடும்.

கருத்துச் செறிவுள்ள பட்டி மன்றங்கள் கட்டிக் கரும்புன்னா நகைச்சுவை பட்டிமன்றங்கள் அந்த கட்டிக் கரும்பை பிழிந்தெடுத்து இஞ்சியும் எலுமிச்சையும் கலந்த கருப்புச்சாறு மாதிரி! நடுவரே உங்களுக்கு கரும்பு வேணுமா இல்லை சும்மா சர்ர்ர்ர்ன்னு உறிஞ்சி குடிக்கற கரும்புச் சாறு வேணுமா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்