பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?

அன்பு தோழிகளுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... அதனால வனியேவா மீண்டும் நடுவர்ன்னு கோவிக்காம எல்லாரும் வாதிட வரணும்னு அன்போடு கேட்டுக்கறேன். :)

இன்றைய தலைப்பு நம் தோழி ஆயிஸ்ரீ அவர்களுடையது:

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

மிக்க நன்றி ஆயிஸ்ரீ. :)

தலைப்பை நான் விளக்கவே தேவையில்லை, அதுவே விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே ஏற்கனவே விவாதித்த / கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை எடுத்துக்காட்டாக பேச கூடாது என்பதே விதிமுறை. காரணம் தலைப்பு கொடுத்தவர் மனதை காயப்படுத்திட கூடாது. அதனால் இந்த தலைப்பு, அந்த தலைப்பு, அவசியமா இல்லையான்னு போகாம பொதுவா பொழுதுபோக்கானதா இருக்கனுமா, கருத்தோட இருக்கனுமான்னு மட்டும் பேச வேணும்.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

//பெரிய, பெரிய புத்தகங்களையெல்லாம் படித்து அறிவை வளர்த்த காலம் மலையேறிவிட்டது. //
அவ்வாறிருந்தால் புத்தகக் கண்காட்சிகள் இன்றும் எதற்காக நடத்தப் படுகின்றன..?? ;) போகிறபோக்கில் காதில் விழ வேண்டும் என்றாலும் அதை ஜனரஞ்சகமாகச் சொன்னால் தான் காதில் விழும். ;)

//அதுவே காரம் என்றால் வயிறு முட்ட சாப்பிடலாம்.//
வயிறுமுட்ட சாப்பிட முடிகிறது என்பதற்காக அதையே தொடர்ந்து சாப்பிட முடியுமா என்ன? காரமாகவே சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் அல்சர் தான் வரும் நடுவரே ;) அது போல் தான் வெறும் கருத்துக்களை மட்டும் கேட்டுக் கொண்டு இருந்தால் ஒரு வித வெறுமை வந்து விடும். எதிரணி கூறும் நீயா நானாவோ இல்லை மற்ற பட்டி மன்றங்களோ வெறும் கருத்து கந்தசாமிகளாக மட்டும் இருப்பது இல்லை.இடையிடையே நகைச்சுவை கலந்த தலைப்புகளையும் புகுத்தி தான் நிகழ்ச்சியை நடத்து கின்றனர்.

நகைச்சுவை கலந்து சொன்னா மக்கள் மனசில நிற்காதா!!
என்னங்க சொல்றாங்க எதிரணி??? நானும் பல நீயா நானா பார்த்திருக்கேன்..
எத்தனையோ பேரு எத்தனையோ விஷயங்களை சீரியசாவும் உணர்ச்சி மேலிடவும் பேசி இருக்காங்க. ஆனா இப்பவும் எனக்கு நீயா நானாவை நினைக்கும் போது எல்லாம் வில்லேஜ் கேர்ல்ஸ் Vs சிட்டி கேர்ல்ஸ் ல பேசின ”வைரமுத்து“ ன்ற பொண்ணுதான் நியாபகம் வரும். கூடவே அந்தப் பொண்ணு பேசிய கருத்துக்களும்.காரணம் அந்த பொண்ணு பேசின விதமே அவ்ளோ ரசிக்கும் படியா வெகுளியா இருந்ததுதான்.“வராத படிப்ப வா வாங்கிறங்க.. ஆனா எனக்குப் பேச வருது பேச விட மாட்டிங்கிறாங்க” அப்புறம் சிட்டி பொண்ணுங்க போடுற உடைகளைப் பற்றி பேசியது.இவை எல்லாம் மனதில் நிற்கக் காரணம் அந்த பெண்ணின் பேச்சு ஜனரஞ்சகமாக இருந்ததே ஒழிய வேறு எதும் இல்லை நடுவர் அவர்களே! சென்ற வார நீயா நானாவில் கூட ஒரு பெண்மணி 600 கிமீ கடந்து வந்து பேசுறேன்னு சொல்லி “கும்மி கோலாட்டத்தை எல்லாம் விடக்கூடதுன்னு” பேசினாங்களே.அப்போ கூட கோபி நாத் ஒரு ரியாக்ஷ்ன் கொடுத்தார்.. ;) இவையும் இவை சார்ந்த கருத்துக்களும் இன்னும் மனதில் நிற்கக் காரணம் அதில் இருந்த நகைச் சுவைதான்.இதில் யாரும் யாரையும் மனம் வருந்தும் படி கேலி செய்ய வில்லையே!! கார சாரமான விவாதத்தால் மனதளவில் ஒரு விதமான இறுக்கமான சூழல் ஏற்படும்.அத்தகைய சூழல்களை இலகுவாக்குவதே நகைச்சுவைதான். நகைச்சுவையான சொல்லாடல்கள் தான்.இது நம் பட்டி மன்றங்களிலேயே பல முறை நான் உணர்ந்த விஷயம்.எனவே பட்டி மன்றங்கள் கருத்துள்ளவையாக மட்டும் இருப்பது கண்டிப்பாக சுவைக்காது...

நசீம்... பொழுது போக்கேனு சொல்ல வந்திருக்கீங்க. தலைப்பு புரிஞ்சுடுச்சா... அப்பாடா... நிம்மதியா இருக்கு :)

அதெபடி நெலியாம உட்காருவது??? திட்டிட்டு கூட பொவாங்க... ;)

அதுவும் சரி தானே... கருத்து பட்டும் சொல்ல சும்மா பேசிட்டு போலாமே, ஏன் பட்டிமன்றம்??? கருத்து மட்டும் சொன்னா வாதாட முடியாதே நசீம்... ;)

அதுவும் சரி தான்... இன்று ப்ரெஷர் அதிகமானதால் தானோ என்னவோ பட்டிமன்றங்களூக்கு ரசிகர்கள் அதிகமாயிட்டாங்க :)

கலக்குங்க... தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம்ம்... எதிர் அணி நகைச்சுவை இருக்குறதால தான் எல்லாரும் விரும்பறாங்கன்னு சொல்றாங்க... நீங்க கருத்துள்ளதா இருக்குறதால தான் நானே வந்தேன்னு சொல்லிட்டீங்க. :) நான் எதை நம்ப???

ஆகா... என்னங்க நீதிமன்றத்தயும், பட்டியையும் கம்பேர் பண்ணி கண்ல தண்ணி வர வெச்சுட்டீங்க. ’’ஆற்றுப்படுத்துவாங்க ’’ - நிஜமாவே புரியல ;( நான் ஒரு அர்த்தம் (கன்வின்ஸிங்) எடுத்திருக்கேன், ஆனா அது சரியான்னு தெரியல. கொஞ்சம் நீங்களே சொல்லிடுங்க.

நியாயம்... சிலர் மனைவியை மற்றவர் முன் காமெடின்ற பேரில் நோகடிப்பது போல தான் இருக்கும், இங்கையும் காமெடி என்ற பெயரில் எதிர் அணியை தாக்கினா... ;)

ம்ம்... பல நல்ல விஷயங்களை ஒப்பிட்டு சொல்லி இருக்கீங்க... பார்ப்போம் எதிர் அணி சொல்றதை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க குட்டி தல... பல நாளுக்கு பின் பட்டி பக்கம் வந்திருக்கீங்க... சூடு தாங்கலையே ;)

கரக்ட்டு... எந்த தலைப்ப எடுக்கன்னு குழப்பத்துல பட்டியை பற்றியே தலைப்பை எடுத்துட்டேன் ;) ஹிஹிஹிஹீ.

ஆர்ட் மூவீஸ், கமர்ஷியல் மூவீஸ்... எங்கையா பிடிக்கறீங்க... இப்படிலாம் கம்பேரிசன்??? எனக்கு தோனவே மாட்டங்குதே!!

//பட்டிமன்றங்கள் காய்ந்து போன பாலை நிலமாக வறணட கருத்துக்களமாக இருப்பதை விட அழகு கொஞ்சும் பசுமை நிறைந்த நகைச்சுவை நிறந்த விவாத களமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை ஐ எஸ் ஐ முத்திரை பதித்த "ஆணி"த்தரமா "நட்டுத்"தரமாக "போல்ட்டு"த்தரமாக அடித்துக் கூறுகிறோம் :)// - ஹஹஹா... முடியலங்க... இன்னும் என்னென்ன கம்பேரிசன் வரப்போகுதோ!!! கடவுளே... எப்படிய்யா இப்படில்லாம் யோசிக்கறாங்க???

கலக்கிட்டீங்க கவிசிவா... ஒன்னும் முடியல என்னால :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதுவும் சரி தானே... கருத்தே இல்லாம சிரிச்சுட்டு மட்டும் போக பட்டி எதுக்கு??? நகைச்சுவை சொல்லலாமே... ;)

எதாவது கத்துக்கனும் வாதங்கள் முடியும் போதுன்னு சொல்றீங்க... நேரம் கிடைக்கும்போது மீண்டும் வாங்க... காத்திருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாருங்கப்பா... மறுபடி தோசை மாவு உதாரணம்!!! கலக்குறீங்க... வெறும் கருத்துன்ற தோசை இட்லி சாப்பிட முடியாது... கூட நகைச்சுவைன்னு சட்னி, சாமார் வெரைட்டியா வேணும்னு சொல்றாங்க நசீம். எதிர் அணி... பதில் ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

போங்க நடுவரேன்னீங்க... நான் போயிட்டு வந்துட்டேன். :) உங்க வாய் முகூர்த்தம் பளிச்சுட்டுது.

கரக்ட்டு... மகாஙள் சொல்லாத கருத்தையா நாம சொல்லிட போறோம்??? அவங்க சொல்லியே கேட்கல, நாம சொல்லியா கேட்க போறாங்க??? நியாயமான கேள்வி... எதிர் அணி பதில் சொல்லுங்கப்பா. நான் கேட்கல, எதிர் அணி தான் கேட்கறாங்க.

கவிசிவா சொல்றதும் சரி தானே... நகைச்சுவை பட்டிமன்றம்னு விளம்பரம் பண்ணா தானே மக்கள் டிவி முன்னாடியே வராங்க.

வம்பிழுக்க சொல்ல விரும்பினேன் இழை தான் கிடைச்சுதா??? ;( என்ன பாவம் பண்ணுச்சு அந்த இழை??? என்னவோ... கருத்து கந்தசாமி, சிரிப்பு சின்னசாமின்னு நிறைய சொல்லிட்டீங்க... பார்ப்போம், எதிர் அணி என்ன பதில் சொல்றாங்கன்னு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க... வருகை நல் வரவாகுக :)

பொழுது போக்கு அணியா... உண்மை தான் எப்படி கருத்து சொன்னாலும், நகைச்சுவையா சொன்னாலும் நேரம் கிடைச்சா தானே வருவாங்க. அப்போ கிடைக்கும் ஓய்வு நேரம் பொழுது போக்கு தானே.... கரக்ட்டா பயிண்ட்டை பிடிச்சுட்டீங்க சாந்தினி. தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவைக்கு புதிது என நினைக்கிறேன்... வருக வருக. இந்த கேள்வியை சின்ன சின்ன சந்தேகங்கள் இழையில் கேளுங்க தெரிஞ்சவங்க பதில் சொல்வாங்க. இங்கே பட்டிமன்றத்தில் கேட்டால் யாரும் பதில் போட மாட்டாங்க தோழி. சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது தான் உங்க முதல் படின்னு நினைக்கிறேன்... சரியா??? ஆனா கருத்துக்கள் முத்து முத்தாக இருக்கின்றன. உதாரணங்களூம் சொன்ன விதமும் அருமை. வாழ்த்துக்கள்.

அடுத்தவரை காயப்படுத்தாத நகைச்சுவை இன்று குறைவு தான். நீயா நானா எல்லாம் சீரியஸ் டாப்பிக் போக தானே செய்யுது... எல்லாரும் பார்க்க தானே செய்யறோம்... ஏன்?? நான் கேட்கலங்க... தான்யா கேக்கறாங்க.

உண்மை தானே... சீரியஸான விஷயத்தை சீரியஸா தானே பேச முடியும்??? எல்லாத்தையும் நகைச்சுவையா சொல்ல முடியாதே.

//பட்டிமன்றம் என்று நாம் இன்று சொல்வது அக்காலத்தில் "பட்டிமண்டபம்"னு சொல்லப்பட்டதாம். ஒவ்வொரு கோயிலின் முன் பகுதியிலும் பட்டிமண்டபம் அமைக்கப்பட்டிருக்குமாம். அரங்கேற்றங்கள், நாட்டின் முக்கிய முடிவுகள் எல்லாம் இங்குதான் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுமாம். இத்தகைய நமது பாரம்பரியத்தின், கலாச்சாரத்தின் அடையாளமாய் விளங்கும் பட்டிமன்ற(மண்டப)த்தை கேலிக்கூற்றாக்க வேண்டாமே!! ஆகவே நடுவரே, பட்டிமன்றம் என்பதே முக்கியமான கருத்துள்ள விஷயங்களை விவாதிக்கவே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர்.// - சூப்பரான விஷயம் தான். அருமையா சொல்லி இருகீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்