பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?

அன்பு தோழிகளுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... அதனால வனியேவா மீண்டும் நடுவர்ன்னு கோவிக்காம எல்லாரும் வாதிட வரணும்னு அன்போடு கேட்டுக்கறேன். :)

இன்றைய தலைப்பு நம் தோழி ஆயிஸ்ரீ அவர்களுடையது:

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

மிக்க நன்றி ஆயிஸ்ரீ. :)

தலைப்பை நான் விளக்கவே தேவையில்லை, அதுவே விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே ஏற்கனவே விவாதித்த / கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை எடுத்துக்காட்டாக பேச கூடாது என்பதே விதிமுறை. காரணம் தலைப்பு கொடுத்தவர் மனதை காயப்படுத்திட கூடாது. அதனால் இந்த தலைப்பு, அந்த தலைப்பு, அவசியமா இல்லையான்னு போகாம பொதுவா பொழுதுபோக்கானதா இருக்கனுமா, கருத்தோட இருக்கனுமான்னு மட்டும் பேச வேணும்.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

பாயிண்டை பிடிச்சுட்டாங்க... னகைச்சுவைக்குன்னு தனி சேனலே இருக்குன்னா, நகைச்சுவை மக்களிடம் சீக்கிரம் கருத்தை சேர்க்க தானே செய்யுது??

என். எஸ். கே. உதாரணம் சூப்பர். நகைசுவையா கருத்தை சொன்னவர்... புகழ் பெற்ற மனிதர்.

நச்சுன்னு ஒரு உதாரணத்தோட நகைச்சுவை எவ்வளவு ரீச் ஆகும்னு சொல்லிட்டீங்க... தொடருங்க லாவண்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//சர்க்கசிற்கு போய் பப்பூனின் செய்கைகளை பார்த்து சிரிக்கிறோம். என்றாவது அவருக்கு ரசிகர் மன்றங்கள் வைத்திருக்கிறோமா? அல்லது அவருடைய பெர்ஃபார்மன்சிற்காக தனியே கூப்பிட்டு பாராட்டுகிறோமா? இல்லையே.// - இல்லையே... நிச்சயமா இல்லை.

நகைச்சுவை வெறும் நகைசுவையாக இருந்தால் மனதில் நிக்காது, கருத்து தான் முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு சொல்றீங்க. அப்போ தான் அது மனதை விட்டு நீங்காத இடம் பிடிக்கும்னு சொல்றீங்க.

//சுக்போகானந்தா,சுகி சிவம், ஜக்கி வாசுதேவ் இன்னும் இவர்களை போல இருக்கும் பலர் வெறுமனே போரடிக்கும் கருத்துக்களை தந்திருந்தாலோ, அல்லது வெறுமனே மக்களை சிரிக்க வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாலோ அவர்களின் தத்துவங்கள் மக்களை சென்றடைந்திருக்குமா// - சுகி சிவம் தவிற வேறு யாரையும் எனக்கு தெரியல... இருந்தாலும் நான் டிவி பார்ப்பதில்லை என்பதால் நீங்க சொன்னா சரி தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க... முக்கியமான வேலைகளுக்கு நடுவே, நேரமின்மையையும் மீறி பட்டியில் பதிவு போட்டிருக்கீங்க... இதுவே பட்டிக்கு கிடைச்ச பெருமை தான். :) மிக்க நன்றி.

அந்த காலம் முதல் இந்த காலம் வரை பட்டி எப்படி இருந்ததுன்னு தலைப்போட சொல்லி அசத்திருக்கீங்க.

//ராகங்கள் அடிப்படையாக இருந்தாலும், எளிமையான பாடல் வரிகள், இனிமையான குரல், பொருத்தமான பிண்ணனி இசை, வண்ண மயமான திரை ஆக்கம் இதெல்லாம் சேர்ந்து, இசையை காலா காலத்துக்கும் நிலைத்து நிற்க வைத்து விட்டதே.

பாரதியாரின் எத்தனையோ கவிதைகளைப் படித்ததுண்டு, ரசித்ததுண்டு. இப்போ,”நிற்பதுவே நடப்பதுவே” மற்றும் “நின்னை சரணடைந்தேன்” இந்தப் பாடல்களை திரை இசையாகக் கேட்ட பின் மறக்க முடியவில்லையே. ஏனென்றால், இவை, மேலே சொன்ன பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு தரப்பட்டதால்தானே.// - சரியான உதாரணம். மக்களை ரீச் ஆக அவர்களுக்கு பிடிச்ச மாதிரி தான் கொடுக்கனும். அப்படி பார்த்தா இன்று பொழுதுபோக்கான, நகைசுவை கலந்த பட்டிமன்றங்கள் தான் தேவைன்னு சொல்றீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னங்க... இத்தனை பக்கம் போன பிறகு தலைப்பு என்னன்னு என்னை கேட்கறீங்க :)

இழுத்து சொல்லாம நச்சுன்னு சொல்ல நகைச்சுவை சரி வராதுன்னு சொல்றீங்க... பொழுது போக்கு பயனுள்ளதா இருக்கனும்னு சொல்றீங்க. தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ நகைச்சுவை நகைச்சுவைன்னு டிவி நம்மை அழுத்திடுச்சு யோசிக்க விடாமன்னு சொல்றீங்க.

//பசியால் வாடும் ஒரு மக்கள் கூட்டத்தை உற்சாகப்படுத்தறேன் ன்னு சொல்லிக்கிட்டு அதிக ருசி சரவணா பவன் சாப்பாட்டிலா? இல்லை பிஸ்ஸா ஹட்டிலா ? பட்டி வெச்சு சிரிக்க சிரிக்க பேசின கதையாம்..// - கொடூரமா தான் இருக்கும் :(

//முதல்ல இந்த மாதிரி விவாத மேடைகள் அலுப்பூட்டும் அறுவை மேடைகள் மாதிரி தான் தோணும் ..ஆனா இந்த காதை கொஞ்சம் விரிச்சு வெச்சு கேட்க ஆரம்பிச்சாங்கன்னா “ கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு “ ன்னு அருமருந்து ஆயிடும் .. அருசுவை தளமே அதுக்கு எடுத்துக்காட்டு ..மசாலா மட்டும் இல்லாம எல்லாம் கலந்து ஆரோக்கியமாகவும் ஆக்குது!!// - இதுல இருந்து எனக்கு ஒன்னு புரியுது... அறுசுவை பற்றியே ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அபிப்ராயம் இருக்குன்னு. :) இரண்டு அணியும் வித விதமா பேசுறீங்க ஒரே விஷயத்தை. கலக்குங்க.

//என்னடா சீரியசா பேசறாளே , சிரிக்க எதுவும் இல்லையேன்னு நினைக்காதீங்க .. சிரிக்க சிரிக்க பேசினா எதிர் அணியினர் வாதம் செய்யாம சிரிச்சிகிட்டே கிளம்பிடுவாங்க ..அவங்களை பிடிச்சு இழுத்து சிந்திக்க வைக்கனுமே !!// - மேட்டருக்கு வந்துட்டாங்க... நகைச்சுவையா பேசினா எதிர் அணி பதில் போட மாட்டீங்களாம்... சண்டைக்கு கூப்பிட்டா தான் வருவீங்களாம் :)

இனி ஒழுங்கா வரேன் உத்ரா... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எதிர் அணிக்கு பதிலெல்லாம் தெளிவா சொல்லிருக்கீங்க போலிருக்கே ;)

நொந்து போய் இருக்கவங்க கிட்ட கருத்து சொல்றதும் பசியா இருக்கவங்க கிட்ட நகைச்சுவை செய்வது போல தான்னு சொல்லிருக்கீங்க.

//பட்டிமன்றங்கள் பாமரனுக்கும் போய்ச் சேரணும்னா அவர்களுக்கு புரியும் சொல்நடையில் நகைச்சுவையாக பேசினால்தான் பட்டிமன்ற சுவையை அம்மக்களும் அனுபவிக்க முடியும்.// - நியாயம் தான் சீதால்ஷ்மி சொன்ன மாதிரி அவை கர்னாட்டிக் மியூஸிக்... தெரிஞ்சவங்களுக்கு தான் சுவைக்கும்.

புரியாத விஷயம் ஆரம்பத்திலேயே கவனத்தில் பதியாது... அப்பறம் எங்க அதை ரசிக்குறாதுன்னு கேக்கறீங்க...

//அய்யோ நடுவரே! வெறும் கருத்துக்களா பேசினா பார்வையாளர்களை "ஒழுங்கா வாங்க"ன்னு மிரட்டி கூப்பிட வேண்டியிருக்கு. ஆனா நகைச்சுவை பட்டிமன்றம்னா அறுசுவை பட்டிமன்ற பக்கங்கள் ட்ராஃபிக் ஜாம்னால திக்கு முக்காடிப் போயிடும்.// - ஹஹஹா... எதிர் அணி கேளுங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்ப தான் பட்டி கலைகட்டுது ;)

பதிலடி பலமா இருக்கே இருபக்கமும்... நன்றி.

எப்படி இனிப்பே சாப்பிட முடியாதோ, அது போல் காரமேவும் சாப்பிட முடியாது தான்.

//கார சாரமான விவாதத்தால் மனதளவில் ஒரு விதமான இறுக்கமான சூழல் ஏற்படும்.அத்தகைய சூழல்களை இலகுவாக்குவதே நகைச்சுவைதான்.// - சூடான தலைப்பையே மணிக்கணக்கா கவனிக்க வைக்க நகைச்சுவை தான் உதவுதுன்னு சொல்லிருக்கீங்க.

தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே... சில காரணங்களால் வேறு தீவுக்கு போக வேண்டியதாகிட்டுது, அங்கே இண்டெர்னெட்டும் இல்லை, அதனால் பதிவிட முடியாமல் போயிடுச்சு. மன்னிக்கனும் எல்லாரும். இம்முறை நடுவர் பொறுப்பை கட்டாயமானதால் எடுத்தேன், இருந்தாலும் சில தவிர்க்க முடியாத அவருடைய அலுவலக சம்பந்தமான வேலைகளில் நானும் கலந்து கொள்ல வேண்டியதானதால் மாட்டிக்கொண்டேன். மன்னிக்கனும் மீண்டும்.

இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன... அனைவரும் வருக... பட்டியை வெற்றி பெற செய்கன்னு கேட்டுக்கறேன். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே!! நாங்க ஒன்னும் நகைச்சுவையே வேண்டாம்னு சொல்லல தேவைக்கு மட்டும் போதும்னுதான் சொல்றோம்.
ஒரு சமுதாய ப்ரச்சினையையோ, நாட்டு நடப்பையோ விவாதிக்கும் மன்றங்கள் சூடான வாதங்களால்தானே ருசிக்கும்?
ஆனால் எதிரணியினரோ எல்லாத்தையும் காமெடியாவும், கோமாளித்தனமாவும்தான் சொல்வோம்னு அடம்பிடிக்கிறாங்க!! இது அவங்களோட அறியாமையை காட்டுது நடுவர் அவர்களே!!
சும்மா வீட்டுநடப்பு டாப்பிக்குகளாவே பேசி, சிரிப்பு காட்டிட்டு இருந்தா கிணத்து தவளையாவே இருக்க வேண்டியதுதான். சின்ன குழந்தைங்க கூட வடிவேலு மாதிரி நம்மையும் காமெடி பீஸாதான் பார்ப்பாங்க நடுவரே!!
தெனாலிராமன்(விகடகவி), பீர்பாலைப் பற்றி எல்லோருக்குமே தெரியும்!! அவர்களின் நகைச்சுவையும், டைமிங் சென்ஸோடு கலந்த பகுத்தறிவான, சாதுர்யமான, துணிச்சலான பேச்சு யாருக்கு வரும்?(நாங்க இதுமாதிரியான நகைச்சுவையைதான் விரும்பறோம் நடுவரே!!) ஆகவே நடுவரே!! எதையுமே நாம் அணுகும் விதத்தில் அணுகினால் எல்லோரையும் கவரும், கண்கானிக்கவும் படும். ஆயகலைகள் அறுபத்துநான்கினுள் பேச்சும் அடங்கும் நடுவரே!!
ஆனால் இரட்டை அர்த்தம் இல்லாத (மறைமுகமாகவோ, நேரடியாகவோ) ஒரு காமெடியும், பொழுதுபோக்கும் கூட இன்று இல்லை, அவர்கள் வியாபார நோக்கத்தோடு அப்படி பேசி லாபம் அடைகிறார்கள்!! இதனால் நாம் பெற்ற இன்பம் என்ன? இதைக்கேட்கும் ரெண்டும்கெட்டான் வயதுடைய குழந்தைகளும் அப்படியேதான் பேச (அர்த்தம் தெரியாமலேயே) முற்படுகிறார்கள்.
நம் வீடுகளில் நிறைய பேருக்கு கேரட், பீட்ரூட், கீரை எல்லாம் பிடிக்காது, உடனே நாம் அதை கோதுமை மாவில் கலந்து ஏமாற்றி கொடுக்கலாமென்று முடிவெடுப்போம். இதுவரை நோக்கம் சரிதான். ஆனால் அதை சப்பாத்தியாக இட்டு கொடுக்கிறோமா இல்லை எண்ணெயில் மூழ்கடித்து பொரித்து கொடுக்கிறோமா என்பதில்தான் விஷயமே இருக்கிறது.
மன அழுத்தத்தால் எத்தனை பேர் தற்கொலைக்கு முயற்சிக்குறாங்க, அவங்களுக்கு தேவை அப்போதைய தீர்வா?(நகைச்சுவை, பொழுதுபோக்கு), வாழ்நாள் தீர்வா?(நம்பிக்கை கொடுக்கும் நல்ல பேச்சு, வெற்றியாளர்களின் வாழ்க்கைப்பாடங்கள், பெரியோர்களின் அனுபவங்கள்).
ஏதாவது சொன்னா கழுத்தறுக்குறாங்கன்னு சொல்ற இவங்க, காசு கொடுத்து அப்பாயிண்ட்மென்ட் வாங்கி மன நலமருத்துவரிடம் எப்படி வாழணும்னு கருத்து கேக்கறாங்க நடுவரே!! அதுவே பொழுதுபோக்கா பயனுள்ள கருத்து கிடைச்சா வேணாமாம்!!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

//காமெடியாவும், கோமாளித்தனமாவும்தான் // காமெடி வேறு கோமாளித்தனம் வேறு... கோமாளித்தனம் என்பது மட்டுமே பொழுது போக்குனு எதிரணியா முடிவு கட்டிகிட்டா நாங்க பொறுப்பு இல்லைங்க நடுவரே..

//அதை சப்பாத்தியாக இட்டு கொடுக்கிறோமா இல்லை எண்ணெயில் மூழ்கடித்து பொரித்து கொடுக்கிறோமா என்பதில்தான் விஷயமே இருக்கிறது.//

யார் யாருக்கு எப்படி கொடுக்கணுமோ அப்படித்தான் கொடுக்க வேண்டும்.. அதிக எண்ணெய் உடம்புக்கு ஆகாது தான் ஆனால் அதற்காக சிறு வயது பிள்ளைகளுக்கும் நாங்க சப்பாத்திதான் செய்து தருவோம்னு அடம் பிடித்தால் எப்படி நடுவரே??!! ஓடி ஆடி விளையாடுற அந்த பசங்களுக்கு பூரியாகக் கொடுப்பதில் தவறேதும் இல்லையே??,, சப்பாத்தி திண்ணு திண்ணு என்று பசங்களைப் படுத்தினால் கடைசியில் குழந்தைகளுக்கு உணவின் மீதே வெறுப்பு வந்து விடும்..

//சும்மா வீட்டுநடப்பு டாப்பிக்குகளாவே பேசி,//

மாற்றங்கள் முதலில் வீட்டிற்குள்ளிருந்து தான் துவங்க வேண்டும்.. உள்ளே ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டு நாட்டைத் திருத்தப் போவதில் எந்தப் பயனும் இல்லை தானே!

//மன அழுத்தத்தால் எத்தனை பேர் தற்கொலைக்கு முயற்சிக்குறாங்க,//

மன அழுத்தம் வரக் காரணமே வாய் விட்டுச் சிரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் தானே நடுவரே!! வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்னு சும்மாவா சொன்னாங்க நம்ம பெரியவங்க.. மன அழுத்தத்தில் இருப்பவனுக்கு முதலில் மனசு லேசாகனும்...அதற்கான வழியைப் பார்ப்பதை விட்டி விட்டு அவன்கிட்ட போய் லெக்சர் அடிச்சா அவனுக்குக் (தற்)கொலை வெறிதான் வரும்.. ;)இப்படி எல்லாம் ஆளாலுக்கு அவன் மனதில் என்ன இருக்குன்றதையே தெரிஞ்சுக்காம லெக்சர் அடிப்பதால் தான் அதற்கென படித்த மன நல மருத்துவரை காசு கொடுத்துத் தேடிப் போகிறான் மனிதன்..

எதிரணி ஏதோ பொழுதுபோக்கான பட்டி மன்றம்னா கருத்துக்களே இருக்காதுன்ற மாதிரியே பேசுறாங்க!! நடுவ்ரே நீங்கள் உங்கள் விளக்கத்தில் கருத்துக்கள் இல்லாமலும் இருக்கலாம் என்றுதானே கூறி இருந்தீர்கள் ..கருத்துக்களே இல்லாத பட்டி மன்றங்கள் என்று கூற வில்லையே!! அப்படிக் கருத்துக்களே இல்லாத பட்டி மன்றங்களும் சமயத்தில் தேவைதான்.. வாதடுபவர்களுக்கும் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கும்...கருத்து செறிவுள்ள தலைப்பா பேசிப் பேசி (அ) நடத்தி நடத்தி அவங்களுக்கும் போரடிக்காதா என்ன?...

மேலும் சில பதிவுகள்