பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?

அன்பு தோழிகளுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... அதனால வனியேவா மீண்டும் நடுவர்ன்னு கோவிக்காம எல்லாரும் வாதிட வரணும்னு அன்போடு கேட்டுக்கறேன். :)

இன்றைய தலைப்பு நம் தோழி ஆயிஸ்ரீ அவர்களுடையது:

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

மிக்க நன்றி ஆயிஸ்ரீ. :)

தலைப்பை நான் விளக்கவே தேவையில்லை, அதுவே விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே ஏற்கனவே விவாதித்த / கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை எடுத்துக்காட்டாக பேச கூடாது என்பதே விதிமுறை. காரணம் தலைப்பு கொடுத்தவர் மனதை காயப்படுத்திட கூடாது. அதனால் இந்த தலைப்பு, அந்த தலைப்பு, அவசியமா இல்லையான்னு போகாம பொதுவா பொழுதுபோக்கானதா இருக்கனுமா, கருத்தோட இருக்கனுமான்னு மட்டும் பேச வேணும்.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

//எதிரணியினர் சொல்ற ஜாலியான, டேக் இட் ஈசியான, அதேசமயம் புரிஞ்சி படிச்ச மாணவர்களெல்லாம் இன்னைக்கும் சாதாரண நிலையில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்// - அநியாயமா இப்படிலாம் மட்டம் தட்ட கூடாது... நானிருக்கேன்... ஒரு டெஃபனிஷனை கூட மனப்பாடம் பண்ணி எனக்கு எழுத தெரியாது. ஆனா நாங்களாம் டாப்பர்ங்க.

அடுத்து சொன்ன விஷயம் நான் ஒத்துக்குவேன்... வாழ்க்கை சீரியசான விஷயம் தான்... சிரிச்சுட்டே எல்லாத்தையும் எதிர் கொள்ள முடியாது தான். உங்க வரிகள் எல்லாம் உண்மையானவை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நடுவரே!! தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு தேவை கேள்விக்கு சரியான பதில், நல்ல கல்லூரியில் சீட் கிடைக்க தேவை நல்ல மதிப்பெண். இதில் நாம புரிஞ்சி படிக்கிறோமா, புரியாம மக்கப் பண்றோமா என்பதெல்லாம் யாரும் ஆராய்ச்சி பண்றதில்லை.//

இதுதான் நடுவரே பிரச்சினையே! எல்லாரும் ஓடறான் அதனால நானும் கண்ணை மூடிட்டு ஓடறேன்னு ஓடறாங்க. நம் நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. காரணம் எதிரணியினர் சொல்வதைப் போன்று புரிகிறதோ இல்லையோ மனப்பாடம் செய்யும் திறமையுள்ளவன் தான் புத்திசாலி என்ற நிலையை உருவாக்கிய நமது கல்வி முறை. அவனுக்கு உயர்கல்விகளை அளித்து அதையும் அவன் மக்கப் செய்தே படித்து முடிப்பான். ஒரு பாடத்தைப் பற்றிய தெளிவான புரிதல்கள் இருந்தால் மட்டுமே அவனால் அதில் புதிதாக பலவற்றை சிந்திக்க முடியும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்.

இதையும் நானா சொல்லலீங்க. பட்டிமன்ற நடுவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள்தான் ஒரு பட்டிமன்றத்தில் நகைச்சுவையாக "இப்படித்தேன் ஒரு ஊர்ல ரென்டுபேர் இருந்தாய்ங்க..." அப்படீன்னு ஆரம்பிச்சு அருமையா சொன்னார். எதிரணியினர் வெறும் கருத்துக்கள் உள்ள பட்டிமன்றமா கேட்டுட்டு அம்பூட்டையும் அங்கிட்டே மறந்துட்டு வந்துடறாங்க போலிருக்கு. எங்க அணியினர் அப்படி இல்லீங்க. நகைச்சுவையா பொழுதுபோக்கான பட்டிமன்றங்களா கேட்டு ரசிச்சு அதில் கிடைத்த நல்ல சில கருத்துக்களை பொக்கிஷமா மனசுல பதிய வச்சுக்கறோம்.

இப்போ சொல்லுங்க வெறும் கருத்துப் பட்டிமன்றங்கள் சிறந்ததா? இல்லை நகைச்சுவை பொழுதுபோக்குகளோடு அங்கங்க சில கருத்துக்களை நாசூக்கா சொல்ற பொழுதுபோக்கு பட்டிமன்றங்கள் சிறந்ததா?

//.வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்//

நல்ல கருத்துதான். ஆனால் இப்படி வெறுமனே சொன்னா யாருடைய மனதிலும் அது நிலைக்காது. இதையே சபையில் உள்ளோரின் மனநிலைக்கேற்ற நகைச்சுவை உதாரணங்களோடு சொன்னாங்கன்னு வைங்க பொய்யான மெய், மெய்யான பொய் மாதிரி ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்.

அதனால்தான் நகைச்சுவையான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இலகுவான தலைப்புகளில் நடத்தப் படும் பட்டிமன்றங்களே சிறந்தது என்று இம்முறை நடுவரை அடிக்காமல் நடுவர் முன்னால் இருக்கும் மேசையை அடித்துக் கூறிக் கொள்கிறோம்.

கைதட்டி பொன்னாடை போர்த்தி... சரி சரி அதெல்லாம் வேண்டாம் அட்லீஸ்ட் பச்சத் தண்ணியாவது கொடுங்கப்பா. டயர்டா இருக்குதுல்ல :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு நடுவர் அவர்களுக்கும் மற்ற தோழிகள் அனைவருக்கும் இனிய வணக்கம்........... கண்டிப்பாக பட்டிமன்றங்கள் பயனுள்ளவைகளே.............நடுவரே......... பொதுவாக பட்டிமன்றம் நடந்தால் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளின் வாதிகள் தங்கள் பக்க நியாயத்தையும் கருத்தையும் முன்வைப்பார்கள். அதற்கடுத்து மற்ற அணியினரின் கருத்துக்களில் உள்ள நிறை குறைகளை பற்றி அலசுவார்கள். இதில் என்ன முக்கியமான விஷயம் என்னன்னா வாதத்திறமையும், அடுத்தவரை புண்படுத்தாமல் கருத்து வெளியிடுவதும்தான். நகைச்சுவை கலந்து கொடுத்தால் சாதாரண மக்களையும் சென்றடையும் என்பதால் பலபல நியாயமான கருத்துக்களும் நகைச்சுவையாக பேசி விவாதிக்கப் படுகிறது.

பொதுவாக ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு ஆசிரியர் வகுப்பறையில் சிரிக்காமல், நகைச்சுவையாக எளிமையாக பாடங்களை நடத்தாமல் ரொம்ப அதிகாரமாக வகுப்பெடுக்குறாங்கன்னு வச்சுப்போம். கண்டிப்பாக அந்த வகுப்பு மாணவர்கள் பாஸ் பண்ணுவாங்க,மார்க் எடுப்பாங்க. ஆனா என்னத்த படிச்சோம்னு மனசில இருக்காது. அதுவே அந்த ஆசிரியர் கலகலப்பாக அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சியை உதாரணம் கூறி அதோடு பாடத்தை தொடர்புபடுத்தி வகுப்பெடுத்தால் அந்த பாடமும், அதை நடத்திய ஆசிரியரும் மாணவர்கள் மனதில் ஆயுசுக்கும் இடம்பிடிப்பர்.

கண்டிப்பா இதை வெளியிலிருந்து பார்க்கும்போது கண்ண்டிப்பான கிளாஸ் நடந்தால் 'ஆஹா.... பிள்ளைங்க என்னமா கவணிக்கறாங்க்'னு தோணும். ஆனால் உண்மையில அந்த ஸ்ட்ரிக்ட் டீச்சருக்கு பயந்து எல்லாம் புரிஞ்சதுபோல தலைய தலைய ஆட்டிகிட்டு உட்கார்ந்திருப்பாங்க என்பதுதான் உண்மை. அதுவே இரண்டாவதாக சொன்ன வகுப்பை பார்த்தால் 'என்ன....பிள்ளைங்க எப்ப பார்த்தாலும் சிரிச்சிகிட்டு, டீச்சரும் சம்பந்தமில்லாம பேசிகிட்டும் இருக்காங்க'னு தான் தோணும். ஆனால் அந்த வகுப்பு பிள்ளைகளுக்கு கண்டிப்பா பாடமும், அதிலிருக்கும் எதார்த்தங்களும் நிச்சயமாக புரிஞ்சிருக்கும்.

அதுபோலதான் பட்டிமன்றங்களும். நிறய கருத்துக்கள், நியாயங்கள் செரிந்து இருப்பதால் நகைச்சுவையோடு பரிமாறப்படுகிறது. சாதாரணமாக பார்த்தால் பொழுதுபோக்கு நிகழ்ச்சி போலதான் தெரியும். ஆனால் சரியான தலைப்போடு சரியான கருத்துள்ள வாதங்களோடும் நடக்கும் பட்டிமன்றங்கள் அனைத்துமே பயனுள்ளவைகளே..........

(ரொம்பநாள் கழித்து வருகை தந்துள்ள தோழிகளின் வாதங்கள் பிரமாதம். நீண்ட இடைவேளைக்குப்பின் பட்டியில் கண்டதில் மகிழ்ச்சி.)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

அன்பு ப்ரியா... இந்த பட்டியில் காணவில்லையேன்னு நினைச்சேன்... வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. தெளிவான கருத்துக்கள். அருமையான பதிவு.

உண்மை தான்.. வெளியே இருந்து பார்ப்பவருக்கு புரியாது. கருத்து பக்கமே உங்க ஓட்டும்... ஆனா நகைச்சுவைக்கும் ஓட்டு போட்டிருக்கீங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மை தான் பலர் இப்படி படிச்சே தான் எங்க போறோம்னே தெரியாம போயிடுறாங்க ;)

கருத்தை சிம்பிளா அழகா தானே சொல்லி இருக்காங்க... இதில் எப்படி நகைச்சுவை சேர்க்க... சொல்லுங்க... நான் கேட்கல... எதிர் அணீ தான் கேட்கறாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//எதிரணியினர் சொல்ற ஜாலியான, டேக் இட் ஈசியான, அதேசமயம் புரிஞ்சி படிச்ச மாணவர்களெல்லாம் இன்னைக்கும் சாதாரண நிலையில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்// - ////அநியாயமா இப்படிலாம் மட்டம் தட்ட கூடாது... நானிருக்கேன்... ஒரு டெஃபனிஷனை கூட மனப்பாடம் பண்ணி எனக்கு எழுத தெரியாது. ஆனா நாங்களாம் டாப்பர்ங்க.////
நடுவரே!! நான் சொல்ல வந்தது என்னன்னா!! ஜாலியான, டேக் இட் ஈசியான, அதேசமயம் புரிஞ்சி படிக்கும் மாணவர்கள் கூட சமயத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாம வாழ்க்கையில் ஃப்னான்ஸியலா தோத்துபோயிடறாங்கன்னு சொல்றேன். ஏன்னா ஒருவரின் வெற்றி என்பது பணத்தில்தானே தீர்மானிக்கபடுது.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

// தலைகால் புரியாமல் இருக்கும் இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் பயனுள்ள, கருத்துள்ள பட்டிமன்றங்கள்தான் தேவை!! தேவை!! தேவை!!//

கருத்துள்ள பட்டி மன்றங்களை எப்படி அவர்களிடம் கொண்டு் சேர்ப்பது என்பது தானே இப்போதைய கேள்வி.. நம்ம வளரும் காலத்திலயாவது ஆசிரியர்,பெரியவங்களுக்கு பயப்படும் மனோபாவம் இருந்தது.. ஆனால் இப்போதைய தலைமுறை அப்படி கிடையாதே!! எதுவா இருந்தாலும் ஃப்ரெண்ட்லியா சொன்னாதான் அவர்களிடம் போய்ச் சேரும்.. அதாவது வாழைப்பழத்துல மாத்திரையை வைத்துக் கொடுப்பது போலோ இல்லை வாழிப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலோ தான் சொல்ல வேண்டும்.. அந்த வாழைப்பழத்தைத் தான் நாங்க பட்டியில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சமா சொல்றோம்.

//ஏன்னா ஒருவரின் வெற்றி என்பது பணத்தில்தானே தீர்மானிக்கபடுது//
கருத்துள்ள பட்டி மன்றங்களை ஆதரிக்கும் எதிரணியா இப்படி ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள்? ;)

ஹய் தோழீஸ் அனைவருக்கும் வணக்கம். இடையில் வந்து இடையூறு செய்வதற்காக முதலில் மன்னிக்கவும். தனியிழை ஆரம்பித்து ஹய் சொல்லகூடாது என்ற நல்ல எண்ணத்தில் அரட்டை பகுதியில் குதித்து விட்டேன்.நான் இலங்கையில் இருந்து புதிய உறுப்பினர் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கங்கள் தோழீஸ்...

பட்டிமன்றம் பற்றியே பட்டிமன்றம்... இதுவே முதல் முறையோ?

பட்டிமன்றங்கள் நல்ல பயனுள்ள பொழுது போக்கு தான். வாதிட வரும் ஒவ்வொருவருடைய கருத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு தீர்வு கிடைப்பதால் மட்டுமல்ல... ஒவ்வொருவருடைய பேச்சு திறனை வளர்க்கவும், சிந்தனையை தூண்டவும், எழுத்தை மெருகேற்றவும் உதவுவதால் பட்டிமன்றங்கள் மிக பயனுள்ளவையே.

இப்படிபட்ட பட்டிமன்றங்கள் எல்லாரும் ரசிக்கும்படியா இருக்கனும். அதுக்காக தான் இப்பலாம் குடும்பம், பிள்ளைகள் படிப்பு, நாட்டு நடப்பு என எல்லாமே தலைப்புகளா எடுக்க காரணம். இதெல்லாம் பார்க்க பொழுது போக்கா தெரியலாம்... ஆனா உண்மையில் நிறைய உண்மைகளை நாம் உணர பெரிய உதவியாய் இருக்கின்றன. வாதிட வரும்போது ஒரு சிந்தனையில் வருவோம், ஆனால் பட்டியின் முடிவில் நம் சிந்தனையே மாறி இருக்கும்... அது தான் வாதத்தின் பலம்.

நடுவராக சில நேரம் பட்டிமன்ற தலைப்புகளை தேடும் போது என் எண்ண்ங்கள்:

- சில தலைப்பை எடுத்தா யாரும் வாதாட வர மாட்டாங்க இது எல்லாருக்கும் பேசும் விதமா இருக்காதுன்னும், சிலருக்கு புரியாதுன்னும் தோனும்.

- சில தலைப்புகள் சிரிக்க வைக்கும் ஆனா வாதாட 1 வாரத்துக்கு மேட்டர் இருக்காதுன்னு தோனும்.

- சில விஷயங்கள் என்ன தான் சுவாரஸ்யமா வாதாடினாலும் கடைசியில் தீர்ப்பு நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றபடி அமையும், நடு நிலையா இருக்காதுன்னு தோனும்.

அதை வைத்து பார்க்கும்போது பட்டிமன்ற தலைப்புகள் எல்லாமே வெறும் பொழுது போக்கா அமைவதில்லை... அதாவது கருத்தே இல்லாமல் வெறும் நகைச்சுவையை மையமாக கொண்டு அமைவதில்லை. அப்படி பட்ட பட்டிமன்றங்கள் மனதில் நிக்காது. அவ்வளவு ஏன் அதில் வாதாட ஒன்றும் இருக்காது. சுத்தி சுத்தி சொன்னதையே சொல்ல வேண்டியது தான். இங்கே பல பெரிய நடுவர்கள் பற்றிய பட்டிமன்றங்கள் உதாரணமாக காட்டப்பட்டன... அவை எல்லாமே ஏதோ ஒரு கருத்தை முன் வைக்க நகைச்சுவையை பயன்படுத்தியவை தானே தவிற எதுவுமே வெறும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தவை அல்ல.

ஆனால் சில சூடான தலைப்புகளை காரசாரமாக வெறும் வாதமாக பேசி தீர்ப்பது என்பது பாவைக்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ குழம்பை காரசாரமாக செய்து கொடுப்பது போல் இருக்கும். அதில் வெல்லம் எனும் இனிப்பான நகைச்சுவையை சிறிது கலந்து எடுத்தால் கசப்பான காயை கூட ரசித்து உண்ண வைக்கும். நல்ல தலைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நகைச்சுவை அவசியம். இதில் மாற்று கருத்து ஏதும் இல்லை.

ஆனால் நகைச்சுவை மட்டுமே பட்டிக்கு போதாது... சர்க்கரையை நீரில் கரைத்து குடித்தால் சுவைக்காது. பட்டி சுவைக்க முக்கியமாக கருத்தும், காரசாரமான வாதமும், அதை அழகாக மனதுக்கு கொண்டு செல்லும் நகைச்சுவையும் அவசியம். நகைச்சுவை இல்லாமல் கூட சில தலைப்புகளை வாதிடலாம், ஆனால் கருத்தே இல்லாமல் வாதிட இயலாது.

ஆகவே நகைச்சுவை கலந்த கருத்தாழம் மிக்க நல்ல பயனுள்ள பொழுதுபோக்காக பட்டிகள் அமைந்தால் தான் சுவைக்கும் என தீர்ப்பு.... கொடுத்துட்டேன்.

அப்பாடியோ... யோசிக்காமலே தீர்ப்பு சொல்ல வைக்கிறதுல நம்ம அறுசுவையை அடிச்சுக்க ஆளே இல்லங்க.

தீர்ப்பில் எந்த குறை இருந்தாலும் மன்னிச்சுடுங்க எல்லாரும். அழகாக வாதாடி இரு அணிக்கும் பலம் சேர்த்து என்னை குழப்பிய தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகள் எல்லாரும் அருமையா வாதங்களை முன் வெச்சீங்க. நேரம் இல்லாமலும் பலரும் கலந்துகிட்டதே இந்த பட்டியின் பெரிய வெற்றி. நான் தான் ஒழுங்கா பங்கெடுக்க முடியாம கொஞ்ச நாள் பட்டியை விட்டுட்டேன்... அதுக்காக மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். அப்பவும் தொய்வில்லாம பட்டியை நடத்திய உங்களூக்கு எப்படி நன்றி சொல்லன்னு தெரியல. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, இந்த பட்டியை பார்க்க... பலருடைய பங்களிப்பு இருந்தாலே பட்டி அழகு தான். மீண்டும் நன்றிகள் பல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்