பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?

அன்பு தோழிகளுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... அதனால வனியேவா மீண்டும் நடுவர்ன்னு கோவிக்காம எல்லாரும் வாதிட வரணும்னு அன்போடு கேட்டுக்கறேன். :)

இன்றைய தலைப்பு நம் தோழி ஆயிஸ்ரீ அவர்களுடையது:

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

மிக்க நன்றி ஆயிஸ்ரீ. :)

தலைப்பை நான் விளக்கவே தேவையில்லை, அதுவே விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே ஏற்கனவே விவாதித்த / கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை எடுத்துக்காட்டாக பேச கூடாது என்பதே விதிமுறை. காரணம் தலைப்பு கொடுத்தவர் மனதை காயப்படுத்திட கூடாது. அதனால் இந்த தலைப்பு, அந்த தலைப்பு, அவசியமா இல்லையான்னு போகாம பொதுவா பொழுதுபோக்கானதா இருக்கனுமா, கருத்தோட இருக்கனுமான்னு மட்டும் பேச வேணும்.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

அன்பு நடுவருக்கும்,
தாளிக்கற மாதிரி தலைப்பிருந்தாலும் அசரடித்த எல்லா தோழிகளுக்கும்
வாழ்த்துக்கள்!

ரெண்டு மூணு பதிவே போட முடிஞ்சுது.. வீட்டு பணிகொஞ்சம் சிறிது அதிகம்..எனினும் எங்க அணிஇல விடாப்பிடியாக பாயின்ட்சுகளை அள்ளித் தெளித்து ஆரவாரப்படுத்திய ,தோழிகளே.. வெற்றிக் கொடியைஉயர்த்திப் பிடிங்க!!
நடுவரும், ரொம்ப அருமையாக வெள்ளக் கட்டியாக தீர்ப்பு சொல்லணும், எல்லார் மனதும் இனிக்கனும் என்ற எண்ணம் மட்டும் கொண்டிராமல், சாப்பாட்டிற்கு எல்லா சுவையும் தேவை, சில சமயம் ஆரோகியத்துக்காக, நாடு மருந்தும் அவசியம் என்பதை போல பட்டி பயனுள்ள விவாதமாக இருத்தல், பட்டி மன்றங்கள் காலம் காலமாக அழியாம இருக்கும் என்பதை காதை தீட்டிக் கிட்டு கேட்டு திடமான பதிவை போட்டுட்டாங்க!!

நன்றி!!
நன்றி!

சபாஷ் அருமையான தீர்ப்பு

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

ஆஹா தீர்ப்பு வந்தாச்சா? எதிர்பார்த்த தீர்ப்புதான் நடுவரே! (சத்தியமா இது கீழே விழுந்தாலும் ... கதை இல்லீங்கோ என்னிய நம்புங்கோ நம்புங்கோ )

கருத்துக்கள் இல்லாம நகைச்சுவை தோரணம் கட்ட முடியாதுன்னு அழகா சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள். பொழுதுபோக்குதான்னு தீர்ப்பு வந்திடுச்சுன்னா நம்ப பட்டிமன்றங்களை நாமே தரம் குறைத்து மதிப்பிடுவது போல ஆயிடுமே!

ஹி ஹி நான் கடைசி நேரத்துல நடுவரா வரமுடியாமப் போய் அத வந்து சொல்லக்கூட முடியாம இருந்து ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. ஆபத்பாந்தவியாய் கைகொடுத்து பட்டியை தொய்வில்லாம நடத்தியதற்கு வனிக்கு ஸ்பெஷலா எல்லாரும் ஓ போடுங்க... ஓ ஓ ஓ ஓ....ஹோ.

சிரமம் கொடுத்ததற்கு எல்லாரும் என்னை மன்னிச்சு மன்னிச்சு... பாவம்ல கவி மன்னிச்சுடுங்கோ!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வடை போச்சே!! வடையைக் கொடுப்பது போல் கொண்டு வந்து எதிரணிக்குக் கொடுத்து விட்டீர்களே நடுவரே!!

சில அனுபவங்கள் பட்டி மன்றங்கள் வெறும் பொழுது போக்கோ என்று நினைக்க வைத்ததுண்டு. ஆனால் முற்றிலும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் அவா :))) அதனால் தீர்ப்பில் மகிழ்ச்சியே!!

வனி, யாழினி பூரண நலம்தானே!! சாரி.. எங்கே விசாரிப்பது எனத் தெரியவில்லை. அதான் இங்கே சற்று தாமத விசாரிப்பு..

சிரமங்களுக்கு இடையில் பட்டியை நடத்திய வனிதாவிற்கு ஷொட்டு.. :)

நெடுநாளைக்குப் பின் பார்த்த கவிசிவா மற்றும் கடைசிவரை விடாமல் வாதாடிய புதுமுகம் தன்யா ராமிற்கு ஹிட்டு் :)

பட்டிக்கு வரவழைத்து விட்டு ஓரிண்டு பதிவுகளோடு எஸ்கேப்பூ ஆகிவிட்ட கல்பூ உங்களுக்கு ஒரு பெரிய கொட்டூஊஊஊ ;)))

அன்பு நடுவரே, உங்களின் வீட்டுப்பணி, குழந்தையின் உடல்நலமின்மை,பயணங்கள், உடல்நலக்குறைப்பாடு இத்தனைக்கிடையேயும் பட்டி தடைபடாமல் இருக்க தொடங்கி வைத்து, அப்போதைக்கப்போது வந்து ரன்னிங் கமெண்ட்ரி தந்து மிகவும் பொறுப்போடு நடந்து கொண்டது எங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கின.

தீர்ப்பு எங்கள் பக்கமே சொன்னது எங்களுக்கு பரமானந்தத்தை தந்தது. அதற்கு பரிசாக வாழ்நாள் முழுக்க நீங்க காங்கோ ஜூஸ் தண்டனையிலிருந்து தப்பிச்சுட்டீங்க என்பதை வருத்தத்தோடு தெரிவிச்சுக்கறேன் ;( தீர்ப்பில் நீங்கள் தந்த சுண்டைக்காய் குழம்பு,பாவக்காய் குழம்பு உதாரணம் மிகவும் அருமை. எங்கள் அணியின் மதிப்பிற்கு இந்த ஒரு உதாரணமே ஒரு சோறு பதம். நீண்ட நெடிய விளக்கங்களும், உதாரணங்களும் எங்களுக்கு அவசிப்படவே படாது. ;)

உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

நடுவரே, இந்தோனேஷியாவில் இருந்து யாராவது வந்து நடுவரா இருக்கேன்னு சொன்னா நம்பவே நம்பாதீங்க. வரேன்னு சொல்லுவாங்க. ஆனா..வர மாட்டாங்க. அப்புறம் நீங்க தான் குதிக்கனும்.. தேவையா இது? :)

//பட்டிக்கு வரவழைத்து விட்டு ஓரிண்டு பதிவுகளோடு எஸ்கேப்பூ ஆகிவிட்ட கல்பூ உங்களுக்கு ஒரு பெரிய கொட்டூஊஊஊ ;)))// சாந்து, அது வேற ஒண்ணுமில்லபா. நான் எழுதி தந்தது மாதிரியே நீங்க பேசுறீங்களான்னு நடுவர் சீட்டுக்கு பின்னாடி இருந்து பார்த்துட்டு இருந்தேன். அங்கே நான் இருந்தால் என்னை பார்த்துட்டே பயத்துல உளறி வச்சிடப்போறீங்கன்னு நல்லெண்ணம் தான் ;)

பழைய ஆட்களோடு பட்டி பழையபடி களைகட்டுவது ஆரோக்கியமாகவும்,அழகாகவும் உள்ளது. பட்டியில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக சிறப்பித்த மற்ற அனைத்து தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள் !!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//அது வேற ஒண்ணுமில்லபா. நான் எழுதி தந்தது மாதிரியே நீங்க பேசுறீங்களான்னு நடுவர் சீட்டுக்கு பின்னாடி இருந்து பார்த்துட்டு இருந்தேன். //
அப்படியா சங்கதி!!.. எப்படி நீங்க சொன்ன மாதிரியே பேசிட்டேனா? ;)

சாந்து, நான் எழுதி தந்ததை விட சூப்பரா பேசிட்டீங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு நடுவருக்கு,

அழகாக சொல்லியிருக்கீங்க. நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்.(ஷ்ஷ்..., தோத்தாலும் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...)

//வாதிட வரும்போது ஒரு சிந்தனையில் வருவோம், ஆனால் பட்டியின் முடிவில் நம் சிந்தனையே மாறி இருக்கும்... அது தான் வாதத்தின் பலம்.//

ரொம்ப ரொம்ப உண்மை. ஒவ்வொரு முறையும் பட்டிமன்றத்தில் வாதாட ஆரம்பிக்கும்போது இருக்கும் கருத்துக்கள், பட்டிமன்றத்தில் எதிரணியினரின் வாதங்களைப் படித்த்ததும் அப்படியே மாறிடுது.

பல சிரமங்களுக்கு இடையிலும் பொறுமையாக, அருமையாக பட்டிமன்றத்தை நடத்தினீங்க. பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

சிறப்பாக வாதாடி, பட்டிமன்றத்துக்கு பலமும் பெருமையும் சேர்த்த அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பின் நடுவருக்கு தீர்ப்பு அருமை “பிறரை சிரிக்க வைப்பதை விட சிந்திக்க வைப்பதே மேல்” என்று பொன்மொழி ஒன்று இருக்கிறது அதற்கொப்ப தீர்ப்பையும் தந்திருக்கிறீர்கள். மகள் நலமா? நலமே வாழ வாழ்த்துக்கள், நன்றி இப்படிக்கு பூங்காற்று.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அழகான தீர்ப்பு கொடுத்த நடுவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான ரசிக்கும் படியான விளக்கம் கொடுத்திருக்கீங்க. சூப்பர்.சூப்பர். நீங்கள் சொன்ன தீர்ப்பில்

///// நகைச்சுவை மட்டுமே பட்டிக்கு போதாது... சர்க்கரையை நீரில் கரைத்து குடித்தால் சுவைக்காது. பட்டி சுவைக்க முக்கியமாக கருத்தும், காரசாரமான வாதமும், அதை அழகாக மனதுக்கு கொண்டு செல்லும் நகைச்சுவையும் அவசியம். நகைச்சுவை இல்லாமல் கூட சில தலைப்புகளை வாதிடலாம், ஆனால் கருத்தே இல்லாமல் வாதிட இயலாது.

ஏதோ ஒரு கருத்தை முன் வைக்க நகைச்சுவையை பயன்படுத்தியவை தானே தவிற எதுவுமே வெறும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தவை அல்ல.///

போன்ற விளக்கம் நச்சுனு இருக்கு. அதுதானே உண்மை.

கசப்பு குழம்புகளில் சிறிது இனிப்பு சேர்ப்பதை சுட்டியிருக்கும் விதமும் அருமையோ அருமை.

இவ்வளவையும் யோசிச்சு சொல்லிட்டு ////அப்பாடியோ... யோசிக்காமலே தீர்ப்பு சொல்ல வைக்கிறதுல நம்ம அறுசுவையை அடிச்சுக்க ஆளே இல்லங்க.//// வேறையா... உங்க தன்னடக்கத்திற்கு அளவேஇல்லையா வனி... சூப்பர். சூப்பர்.

இன்ட்டர்னெட் ப்ளானை மாற்றுவதில் ஏற்பட்ட தாமதம், உடல்நலமின்மையால் கொஞ்சநாளாக வரமுடியலை பா. என்னை நினைத்ததற்கு மிக்க நன்றி தோழி.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்