பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?

அன்பு தோழிகளுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... அதனால வனியேவா மீண்டும் நடுவர்ன்னு கோவிக்காம எல்லாரும் வாதிட வரணும்னு அன்போடு கேட்டுக்கறேன். :)

இன்றைய தலைப்பு நம் தோழி ஆயிஸ்ரீ அவர்களுடையது:

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

மிக்க நன்றி ஆயிஸ்ரீ. :)

தலைப்பை நான் விளக்கவே தேவையில்லை, அதுவே விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே ஏற்கனவே விவாதித்த / கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை எடுத்துக்காட்டாக பேச கூடாது என்பதே விதிமுறை. காரணம் தலைப்பு கொடுத்தவர் மனதை காயப்படுத்திட கூடாது. அதனால் இந்த தலைப்பு, அந்த தலைப்பு, அவசியமா இல்லையான்னு போகாம பொதுவா பொழுதுபோக்கானதா இருக்கனுமா, கருத்தோட இருக்கனுமான்னு மட்டும் பேச வேணும்.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

பட்டி மன்றத் தீர்ப்பு அருமை வனிதா..

என்னால் தொடர்பதிவு போட முடியாது என்பதால் நான் கலந்து கொள்ள வில்லை. நகைச்சுவையோடு கலந்த நல்ல விஷயங்களே பட்டியின் சிறப்பு என்பது நல்ல தீர்ப்பு.

அவ்வப்போது வாதங்களைப் படிப்பதோடு சரி. அனைவருமே நன்கு வாதாடியிருந்தார்கள்..வாதாளிகளுக்கும், நீதிபதிக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!

உங்களின் இக்கட்டான நேரத்திலும் பட்டியை ஆரம்பித்து 'கருமமே கண்ணாயினார்' என்கிறபடி தொய்வின்றி நடத்திச் சென்ற உங்களின் ஊக்கத்திற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்!

//தாளிக்கற மாதிரி தலைப்பிருந்தாலும்// - அப்படின்னா??? எனக்கு வர வர தமிழுக்கு டிக்‌ஷனரி வேணும் போலும் :) எல்லாரும் என்ன என்னவோ பேசுறீங்க. புரிய மாட்டங்குது மர மண்டைக்கு.

ரொம்ப ரொம்ப நன்றி உத்ரா... நீங்க எல்லாரும் பங்கு பெற்றதில் எனக்கு இந்த பட்டி பெரும் மகிழ்ச்சி தந்தது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அடுத்த பட்டியில் உங்க வாதத்தையும் நாங்க எதிர் பார்க்கலாம் தானே ;) அவசியம் கலந்துக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப சந்தோஷம்... நீங்க வந்ததில் எனக்கு. உங்களை எத்தனை பட்டியில் நான் ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா... பட்டி தலைப்பை முகப்பில் பார்த்ததுமே கவிசிவா இல்லையே கூட்டணி வைக்கன்னு தான் தோனும். சீதாலஷ்மியிடம் பல முறை புலம்பி இருக்கேன்.

எனக்கு தெரியும் பலரும் நகைச்சுவை பக்கம் ஆள் சேரனும்னு தான் அந்த பக்கம் வாதாடினீங்கன்னு. நிஜமா தான் சொல்றேன். :)

நீங்க வர முடியுமோ முடியாதோன்னு சொன்னது எனக்கு ரொம்ப லேட்டா தான் நியாபகம் வந்தது கவிசிவா. அதனால் தான் தலைப்பை துவங்க தாமதம் ஆயிடுச்சு. வீட்டுலயே இருந்தா ஞாயிறு எது திங்கள் எதுன்னே நியாபகம் வர மாட்டங்குது.

சரி... அந்த கதை எல்லாம் இருக்கட்டும்... அடுத்த் அபட்டி நடுவர் நீங்க தானே??? அதில் ஏதும் மாற்றம் இல்லையே??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. வடை தானே தந்துட்டா போச்சு ;)

யாழினி நலம். கொஞ்சம் லேசா காய்ச்சல் இருந்தது... இப்போ பரவாயில்லைன்னு அம்மா சொன்னாங்க. இன்னும் பள்ளிக்கு போகல. மிக்க நன்றி.

கல்பனா அக்கா வர வெச்சுட்டு எஸ்கேப்பா??? விடாதீங்க விடாதீங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி கல்பனா... நாம துவங்குறோம்னு சொல்லியாச்சு கவிசிவாவிடம்... வேற வழி இல்லையே ;) போதாதுக்கு ஆரம்பிச்ச பின் இத்தனை பிரெச்சனை தடங்கல் வரும்னு எதிர் பார்க்கல. உங்க எல்லாருக்கும் தான் நன்றி சொல்லனும், நான் வரேனா இல்லையான்னு பார்க்காம சூடான வாதங்களை முன் வைத்தமைக்கு.

ஜூஸ் இனி எப்பவுமே கிடையாதா... !!! அடடா எத்தனை இனிப்பான விஷயம். நன்றி நன்றி.

இதுல இதுக்கு மேல விளக்கம் குடுக்க பெருசா எதுவும் எனக்கு தெரியல... எல்லாம் உதாரணமும் நீங்க எல்லாரும் வாதடும்போது அமர்க்கலமா கொடுத்துட்டீங்க.

//இந்தோனேஷியாவில் இருந்து யாராவது வந்து நடுவரா இருக்கேன்னு சொன்னா நம்பவே நம்பாதீங்க. வரேன்னு சொல்லுவாங்க. ஆனா..வர மாட்டாங்க. அப்புறம் நீங்க தான் குதிக்கனும்.. தேவையா இது/ - அட பாவிகளா... பாவம் அவங்க தானே அடுத்த நடுவர். :) முன்பே சொல்லி இருந்தாங்க தானே முடியுமான்னு தெரியலன்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க எந்த அணியில் வாதிட விரும்புனீங்கன்னு எனக்கு தான் தெரியுமே... அதனால் நம்பிட்டேன் :)

உங்க வேலைக்கு நடுவே எத்தனை சிரமப்பட்டு பட்டியில் பதிவு போட்டிருப்பீங்கன்னு எனக்கு நல்லா தெஇர்யும். நீங்க பதிவிட்டதே எனக்கு பெரிய மகிழ்ச்சி. ரொம்ப நன்றி சீதாலஷ்மி.

அதை சொல்ல காரணமே பல பட்டியில் நடுவரா வரும் போது 2 வது நாள்லயே தீர்ப்பு இப்படி இருக்கனும்னு மனசு யோசிக்க ஆரம்பிச்சுடும்... அப்பறம் பட்டி முடியும் போது அணி மாறிடுவேன் நானே... என் தீர்ப்பும் மாறிடும். கடைசி நிமிஷத்தில் தீர்ப்பை மாற்றி யோசிக்க வெச்சுடும் இங்க இருக்க வாதங்கள். அதனால் தான் அதை இங்கே சொல்ல விரும்பினேன். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. மகள் நலம். சிறிது காய்ச்சல் மட்டும் அப்பப்போ இருந்ததுன்னு அம்மா சொன்னாங்க. இப்போ பரவாயில்லை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சொன்ன உதாரணம் ஒன்னுமே இல்லைங்க.. முழு பட்டியை படிச்சு பாருங்க.. மக்கள் என்னமா உதாரணம் சொல்லி இருக்காங்கன்னு :) அசந்துட்டேன்... எப்படிடா இப்படிலாம் யோசிக்கறாங்கன்னு.

நிஜமாவே நான் தீர்ப்புக்கு 1/2 மணி நேரம் கூட சேர்ந்தாப்பல யோசிக்கலங்க. அப்போதைக்கு தோனுனதை தான் தட்டி வெச்சேன். மதியம் உணவுக்கு பின் சிறிது நேரம் யோசிப்போம்னு மகனை தூங்க வைக்க போகும் போது படுத்துட்டு யோச்சேன்... வெடுக்குன்னு தூக்கி போட்டு முழிச்சப்போ தான் தெரியுது எதையும் யோசிக்காம தூங்கிட்டேன்னு :) அதன் பின் வேறூ வழி இல்லை, அவருக்கு இரவு சமையல் ரெடி பண்ணனும், அதனால் உடனே வந்து தீர்ப்பை தட்ட வேண்டியதாயிடுச்சு. தன்னடக்கம் எல்லாம் ஒன்னுமில்லை, உண்மை தான்.

உங்களை எப்படி நினைக்காம இருக்குறது??? நீங்க வழக்கமான பட்டிமன்ற உறுப்பினராச்சே. உடமபி பார்த்துக்கங்க, அடுத்த பட்டியில் அவசியம் கலந்துக்கனும். :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அடுத்த பட்டியில் நேரம் கிடைச்சா அவசியம் கலந்துக்கங்க. //கருமமே கண்ணாயினார்// - எங்கங்க... ஓட்டாதீங்க, நானே நடுவில் அப்பப்போ காணாம போய் தானே வந்தேன் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்