பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?

அன்பு தோழிகளுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... அதனால வனியேவா மீண்டும் நடுவர்ன்னு கோவிக்காம எல்லாரும் வாதிட வரணும்னு அன்போடு கேட்டுக்கறேன். :)

இன்றைய தலைப்பு நம் தோழி ஆயிஸ்ரீ அவர்களுடையது:

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

மிக்க நன்றி ஆயிஸ்ரீ. :)

தலைப்பை நான் விளக்கவே தேவையில்லை, அதுவே விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே ஏற்கனவே விவாதித்த / கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை எடுத்துக்காட்டாக பேச கூடாது என்பதே விதிமுறை. காரணம் தலைப்பு கொடுத்தவர் மனதை காயப்படுத்திட கூடாது. அதனால் இந்த தலைப்பு, அந்த தலைப்பு, அவசியமா இல்லையான்னு போகாம பொதுவா பொழுதுபோக்கானதா இருக்கனுமா, கருத்தோட இருக்கனுமான்னு மட்டும் பேச வேணும்.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

இப்போ தான் முழுமையா அனைத்து தோழிகளின் வாதங்களையும் படிக்க முடிஞ்சுது..
எப்படி பாரட்டுறது, (அதான் எல்லாரும் தொலை தூரத்துல இருக்கிங்களே) ஆனாலும் கைத்தட்டல்களை அள்ளி வீசி ஏன் மனமார்ந்த பாராட்டை தெரிவிச்சுக்கிறேன்பா..
உங்க தீர்ப்பை மட்டும் கட கடன்னு வாசிச்சு நேத்து தமிழை கூட எக்குத்தப்பா அடிச்சேன்.. அடுக்கு கூட என்னை பாராட்டி கவுரவ படுத்திய நீங்க சூப்பர் நடுவர்..

"ஆற்றுப்படுத்தல்" ன்ற வார்த்தைக்கு கன்வின்ஸ் பண்றது ன்னு சொல்லியிருந்திங்க... அதை விட பாசிபை (passify) என்ற வார்த்தை பொருத்தமானது.. ஏன் உங்களை அப்படி சொன்னேன் என்றால் இரு அணியினரையும் கை தட்டி கூப்பிட்டு வாத பிரதி வாதத்தையும் கேட்டு --- தீர்ப்பு சொல்லுபோது " நான் இந்த கச்சிங்கோ " ன்னு சொல்லி எதிர் தரப்பை வருத்தப்படவைக்காம -- இது இப்படி இருந்தா இன்னும் நல்ல இருக்குமே --- ன்னு சொல்லி ரெண்டு பக்கம் நின்னுக்கிட்டிருக்கற ரெண்டு அணிகளையும் உங்க கைங்கர பாலத்தால இணைச்சு வைக்கறீங்க.. அது எல்லா நீதிபதி யும் செய்யறது தானே நீங்க சொல்லறது என் காதில விழாம இல்ல..ஆனா வார்த்தைகள் தானே உங்க கைப்பாலம்.. அதை சொல்லும்விதம் ரொம்ப நல்ல விதமா இருக்கறதால பாலம் வலுவோட இருக்கு..
அப்படி அடுத்தவர் நோகாம சொல்றதை தான் ஆற்றுப்படுத்தல்ன்னுவாங்க!
ஏதோ எனக்கு தெரிந்த தமிழ்..

தாளிப்பு..தாளிக்கற தலைப்புன்னு வேற சொல்லிட்டேன், ஆக்சுவலா தலைப்பு பார்த்து ரொம்பவே யோசிச்சேன், என்னடா இது பட்டிகே பட்டியா..ரெண்டு பக்கமும் நிறையவே விஷயங்கள் இருந்தாலும் இந்த நகைச்சுவை பத்தி பேசலாமா ரொம்ப யோசனை ப்பா.
அதை விட தீர்ப்பு வந்த பின் இந்த வார்த்தயை சொன்னதற்கு "என்னதான் அருமையா சமைத்தாலும் தாளித்தால் தான் அறுசுவை இல்லையா .. ஆனா தாளிக்க நிறைய தடவை சோம்பேறியாயிடிவோம்(வேன்).

சோ தாளிக்கற மாதிரி ன்னு சொன்னேன்..( அப்பாடி தப்பிச்சுட்டேனா)

மீண்டும் நன்றி !!
என் தமிழை( தமிழ் டைப்பிங்க) பொறுத்துக்கிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல!!

வனி உங்களுக்கும் உங்க பெண்ணுக்கும் என் விசாரிப்புகள்(நடுவரா இல்ல அறுசுவை தோழியா) ஓகே இங்க போட்டா படிப்பிங்க அதான்!!

அடுத்த பட்டியை ஆஆஆஆஆவலுடன் எதிர்பார்க்கும்

உத்ரா

நீங்க சொன்ன ஒவ்வொரு குட்டி குட்டி வார்த்தைக்கும் இவ்வளவு அர்த்தம் இருக்கா...!!! கலக்குங்க... இப்படிலாம் வார்த்திஅயை நான் எப்போ கத்துகிட்டு எப்போ பேசுறது... ;(

பாபு அண்ணா பார்த்தா புலம்புவார்.... நீ முதல்ல பேசுற கொஞ்சம் தமிழை தப்பில்லாம தட்டு... அப்பறம் புதுசா கத்துக்கலாம்னு :(

மகள் நலம். நன்றி உத்ரா. :) நானும் அடுத்த பட்டியை கவிசிவா நடுவர் பதவியில் இருப்பதை காண ஆவலோடு காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்