எனக்கும் ஆலோசனை சொல்லுங்க தோழிகலே plzzzzzzzzz

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம் நாண் அறுசுவைக்கு புதிது...............எனக்கு எனதுபிரட்சனை எப்பிடி சொல்வதென்ரே தெரியல.ரொம்ப கஷ்டமாக உள்ளது........ எனது மன ஆருதலுக்கு உங்கலிடம் ஆலொசனை கேட்கிரேன், தயவு செய்து இது பற்றி யாருக்காவது தெரின்சால் எனக்கு பதில் பண்ணுங்க எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆச்சு, எனக்கு குழந்தைகள் இல்ல இங்கே check up செய்தோம் எனது கணவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை என்ரு டொcடெர் திடமாக சொல்லி விட்டார் என்னால் என்ன செய்வதென்ரே தெரியல டொcடெர் சொல்ரா உங்கழுக்கு குழ்ந்தை வேனும்னா தத்து எடுக்க சொல்லி இல்லாட்டா வேரொருவரின் sperm எடுத்து குழந்தை உருவாக்கும் ஒரு முரை பாற்றி சொன்னார் எனக்கு வெர வளி இல்ல இப்பிடி தான் செய்து baby எடுக்கனும் எனது husband ok பன்னிட்டார் நாண் இப்பிடி செய்யலாம???? இப்பிடி யாராவது செய்து இருக்கிரார்களா??? இந்த முறை சாத்தியமாகுமா??? இது எனது உறவுகள் ஒருதருக்கும் தெரியாது, சொல்லவும் முடியல....... அதுதான் தெரியாத இந்த அறுசுவை உரவுகளிடம் ஆலோசனை கேட்கிரேன்,, இப்பிடி யாருக்காவது செய்து குழந்தை கிடைத்துள்ளதா யாராவது எனக்கு சொல்லுங்க நானும் எனது கணவரும் ரொம்ப மனம் உடைந்து உள்ளோம் plese anser me

சோபிகா இப்படி சிலருக்கு நடக்கத் தான் செய்கிறது..மனசு உடைஞ்சு போயிடாதீங்க..கடவுள் எல்லாமே பேலன்ஸ் பண்ணி தான் படைச்சிருக்கார்னு நினைச்சுக்குங்க.உங்கள் விருப்பம் எதுவோ அதுக்கு தான் முக்கியத்துவம் தரனும்..அனாதை குழந்தைகளை போய் பாருங்க பாவமாக இருக்கும்..நல்லபடியாக ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்த மனமிருந்தால் நீங்கள் அப்படி செய்யலாம் ஒரு குழந்தையின் எதிர்காலம் நல்லபடியாக அமையும்.இது தான் நல்லது என்றும் சொல்லலாம்.
இல்ல எப்படி பார்த்தாலும் தத்து எடுப்பதெல்லாம் சரிவராது என்னும் பட்சத்தில் இரண்டாம் முறையை செய்யலாம்..இதனால் நீங்களே கர்ப்பகாலத்தை அனுபவித்து பிரசவித்த திருப்த்தி கிடைக்கலாம்..எப்படி என்பதை யோசிச்சு பாருங்க..நல்ல முடிவா எடுங்க

அன்பு சோபிகா....மனம் வருந்தாமல் ஒரு நல்ல முடிவுக்கு வரவும். பிரச்னை உங்களிடம் இல்லாதபோது நீங்கள் குழந்தை பெற தடையில்லை. ஆனால் அந்த முறையில் நீங்கள் பத்து மாதம் சுமந்து பெற்ற சந்தோஷம் வேண்டுமானால் உங்களுக்குக் கிடைக்கலாம்: ஆனால் அது உங்கள் கணவரின் குழந்தையாக இருக்காது என்பதால் பின்னாளில் பிரச்னை வரலாம். உங்கள் கணவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். 'உனக்கு என்னை விட குழந்தை பெற்றுக் கொள்வதுதான் பெரிதா?' என்ற கேள்வி வரலாம்.இன்றைக்குப் போலவே நாளைக்கும் யாரும் இருப்பர்களா என்பது நிச்சயமில்லை. வேறோர் ஆணின் ஸ்பெர்ம் எடுத்து உங்கள் கர்ப்பப்பையில் வைத்துதான் குழந்தை உருவாகும்.
சிலர் கணவரின் அண்ணன், தம்பிகளில் யாருடைய ஸ்பெர்மாவது எடுத்து இப்படி செய்வதுண்டு. ஏனெனில் அது தம் குடும்பத்து ஜீனாகவே இருக்கும் என்பதால்.அதில் உள்ள பிரச்னை இந்த விஷயம் உங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் செய்ய முடியாது.
எல்லாவற்றையும் யோசித்தால் உங்கள் கணவரின் சம்பந்தமே இல்லாத குழந்தையை நீங்கள் பெறுவதை விட ஒரு அழகான குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குறைகளை மறந்து சீராட்டி, பாராட்டி வளர்க்கலாம். உங்கள் இருவருக்குமே சம்பந்தமில்லாததால் இருவரும் தாராளமாக அன்பு காட்ட முடியும். ஒரு தாய், தந்தையில்லாத குழந்தையை வளர்ப்பது என்பது மிக அற்புதமான விஷயம். நன்கு இருவருமாக யோசித்து முடிவெடுங்கள் தோழி.
சாதாரணமாக நான் யாருக்கும் யோசனை சொல்வதில்லை. உங்கள் பதிவு பார்த்து சொல்லத் தோன்றியதால் கூறியுள்ளேன்.

சோபிகா, இது போன்ற பிரச்சனையில் இன்று பலர் உள்ளனர். நீங்கள் இங்கே சொல்லி விட்டீர்கள். சொல்லாமல் மனதுள் குமைந்து கொண்டிருப்பவர்கள் பலர். உங்களுக்கு இப்போது தேவை. திடமான மன உறுதியும்,நம்பிக்கையும் தான். நடக்காது, முடியாது என்று கைவிடப்பட்ட சில செயல்களும் நமக்கு மேலே உள்ளவனின் அற்புதத்தால் நடந்தேறிய நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் அடுத்து நமக்கென எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகும் ஏதோ ஒரு நம்பிக்கையில் மக்கள் எதையோ எதிர்நோக்கி இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கையும் வீண் போனதில்லை. அவர்கள் கஷ்டத்திற்கும் விடிவுகாலம் கிடைத்து நல்ல நிலைக்கு திரும்பி நேற்றைய அந்த சோகங்களை, பெருமிதத்தோடு திரும்பி பார்க்கவே செய்கிறார்கள். அதனால் முதலில் நீங்கள் உங்களை தேற்றிக் கொண்டு உங்கள் கணவரையும் தேற்றுங்கள். ஆறுதல் சொல்லும் அளவிற்கும், உடைந்து போகும் அளவிற்கும் உங்கள் வாழ்க்கையில் பெரிய சோகம் அல்ல இது. உங்களை பரிசோத்த டாக்டர் ஒருவர் தான் உலகிலேயே டாக்டரா? அவர் கடவுளும் இல்லை. நீங்கள் உங்கள் கணவரை அழைத்துக் கொண்டு வேறொரு நல்ல டாக்டரை போய் பாருங்கள். உங்கள் கணவரை மனதளவில் தேற்றுங்கள். பிறகு உடலில் உள்ள குறைக்கு மருத்துவம் கிடைக்கும். ஏனென்றால் குழந்தைபேற்றிற்கு 50 சதவிகிதம் ஆரோக்கியமான மனநிலையும்,50 சதவிகிதம் ஆரோக்கிய உடல்நிலையும் முக்கியம். காரியம் சிதறாமல் இருக்க பதறாத மனம் இருக்க வேண்டும்.

நீங்கள் நினைப்பது புரிகிறது தோழியே. உங்களுக்கென்ன ஈசியா சொல்லிட்டீங்க. கஷ்டப்படுறது நாந்தானேன்னு.. உங்கள் கஷ்டத்தை எங்களால் வாங்கிக் கொள்ள முடியாதே தோழியே. உங்களை சிறிதாவது எங்கள் இந்த ஆலோசனைகள் தேற்றுமாயின் அது எங்களுக்கு மகிழ்ச்சியே. சீக்கிரமே உங்களின் அந்த டாக்டர் சொன்ன வார்த்தைகளை பொய்யாக்கி உங்களுக்கே உங்களுக்காய் உங்கள் குழந்தை உங்களுக்கு பிறக்கத்தான் போகிறது. அதற்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள் தோழியே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா....ரொம்ப அழகாக ஆறுதல் சொல்லியிருக்கிறாய். நீ சொல்வது போல ஒரு அதிசயம் சோபிகாவுக்கு நடக்க நானும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். சோபிகா....மனம் தளராமல் மேலே என்ன செய்யலாம் என்று முடிவெடுங்கள்.

ஹாய் சோபிகா ,எங்கள் தோழிகல் தங்களால் இயன்றளவு உங்களுக்கு அறிவுரை தந்திருக்கிறார்கல் . அவற்றை கவனத்தில் எடுங்கள் . ’எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும் உனக்கென நான் இருப்பேன் உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம் பெரிதென நான் நினைப்பேன்” இப்படி எண்ணிப் பாருங்கள். குறை உங்கள் கணவரிடம் உள்ளதாக சொல்றீங்க அதனால அவர் மனசளவில் மிகவும் உடைந்து போயிருப்பார் என்வே குழந்தை இல்லை என்று நீங்கள் கவலைப்படுவதை அவரிடம் காட்டிக்கொள்ள வேண்டாம். கவலையை விடுங்கள் கல்பனா சொல்வது போல் வேறொரு டாக்டரிடம் போய் பாருங்கல் மருத்துவத்தை மிஞ்சும் இறைவனின் அருள் .இறைவனை நம்புங்கல் தந்தையில்லாம்லே மரியாவிற்கு குழந்தை கொடுத்த இறைவன் உங்களையும் கை விட மாட்டான், பொறுமை செய்யுங்கல் .

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சோபிகா முதலில் உங்களை நீங்க திட படுத்துங்கள் உங்கள் கணவர் மனதளவில் மிகவும் உடைந்து இருப்பார் அவருக்கு தைரியம் குடுங்கள் நம்பிக்கை தான் எல்லா வற்றையும் விட சிறந்த மருந்து உங்களுக்கு வேறு ஒரு நல்ல மருத்துவரிடம் பரிசோதனை செய்யுங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்கும் கடவுளை பிராத்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்க வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

உங்க பிரச்சினை , உங்களுக்கு மட்டுமே நடக்குது ன்னு மட்டும் நினைக்காதிங்க..
ஒரு பிரச்சினை ன்னு இருந்த அதுக்கு ஒரு சொல்யூஷன் இருக்கும் இல்லையா..
நம்ம வாழ்க்கை பிரச்சினைகளில் நாமே சொல்யுஷனை தேடனும்..
அது தான் டாஸ்க்..
இதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா நீங்க கரெக்டான இடத்தில உங்க ஆலோசனையை கேட்டது தான்..
நிறைய பேர் உங்களுக்கு பதில் தரப்போறாங்க அதிலையும் குழம்பிக்காம தைரியமா , திடமான முடிவா எடுக்கணும்..அது உங்க கையில தான் இருக்கு..

குழந்தை உண்டாவது என்பது , சாதாரண விஷயம் அல்ல.. சரி நமக்கு அது ஏற்படல ன்றப்போ , இப்படி விரக்தியாகவும் கூடாது..நான் ரொம்ப ஈசியா சொல்றேன்னு நினைக்காதீங்க.. ஆனா நமக்கு ஒரு குறை இருக்குன்னா , நாம ஏதோ ஒரு குறையை நேர செய்யணும்.. இது சிம்பிள் லாஜிக்..
அனுபவத்தில் உணர்ந்த உண்மையும் கூட..

ஜோதிடர்கள் , டாக்டர்கள், கை விட்ட கேசெல்லாம் கூட அருமையான மழலை செல்வத்தை பெற்ற உண்மையை கண் கூடாக பார்க்கிறோம்..

ஒரு விஷயம் உங்களுக்கு ஒத்து வந்தா செய்து பாருங்க.. எந்த குழந்தையை பார்த்தாலும், இல்லை புது தம்பதிகளை பார்த்தாலும் --- மனதில் ஒரு நிமிடம்
" இந்த குழந்தை ரொம்ப நல்லா இருக்கணும் "
"இந்த தம்பதிக்கு அருமையான குழந்தை பிறக்கணும்"
அப்படின்னு நினையுங்க..
நல்ல இசையை கேளுங்க..

மனதில் தேவையில்லாத குழப்பம் வரும்போதெல்லாம்..ஒரு நிமிடம் கண்டறிந்து வேறு நல்ல வேலைகளில் ஈடுபட பாருங்க..

யாராவது மனதை காயப்படுத்தினாலும் -- (வேண்டா கேள்விகள் கேட்டு) மனதில் " எல்லாம் நன்மைக்கே" சொல்லி பாருங்க

இறைவன் உங்கள் முன்னே தான் இருக்கார் ..
எதுவா இருந்தாலும் உங்க வாழ்வின் நன்மைக்கே பா
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்!

நாம சும்மா இருக்க கூடாதுன்னு நமக்கு டாஸ்க் கொடுக்கிறார் ன்னு பாசிட்வா திங்க் பண்ணுங்க

எனக்கு ஆலோசனை தந்த எல்லா நண்பர்கலுக்கும் ரொம்ப நண்ரிகள் ......என்ன செய்வது கடவுள் என் வாழ்க்கயில பெரிய துயரத்த கொடுத்துட்டார் but எனக்கு என் மீது ரொம்ப பாசம் அக்கற காட்டுற ஒரு அன்பாண கணவன கொடுத்துட்டார் அந்த கொன்ச சந்தோஷத்துல வழ்ந்துட்டு இருக்கேன்எனக்கு இந்த மாதிரி ஒரு கணவனக்கொடுத்த கடவுள் இந்த சந்தோஷத்த ஏன் பறித்தார் என்ரு தெரியல அதனால நாண் கடவுள்கிட்ட எனது பாரத்த கொடுத்துட்டு இருக்கேன் குழந்தை தத்து எடுப்பது எனக்கு விருப்பம் இல்ல மற்றய வழிதான் செய்யலாம் என இருக்கிரோம் அதுவும் அவருடய சம்மதத்துடன் இனி கடவுள் விட்ட வழிதான் மீண்டும் உங்க எல்லோருக்கும் எனது நண்ரிகள்........!

குழந்தை இல்லாதவங்க ஆலோசன கேட்டாங்கன்னா அனாதைக்குழந்தைங்களப்பத்தி பேசுறது அநாகரீகம்.அவங்களை குழந்த இல்லாதவங்கதான் தத்தெடுக்கணும்னு எந்த அவ்சியமும் இல்ல.

சோபிக்கா ஸ்பாம் வாங்கி குழந்தையை உருவாக்குனா அது 50 வீதம் உங்க குழந்த.ஸ்பேம் பிளட் பான்கில் சேகரிச்சு வக்கிறாப்ல ஸ்பேம் ம் டொனேட் பண்ணுறவங்களோடத சேத்து வச்சிருப்பாங்க.இது உங்க ஹஸ்பண்ட் நிறம் உயரம் சம்மந்தப்பபட்ட பொருத்தமான ஸ்பேமை ivf முறையில உங்களுக்கு பேபி உருவாக்குவாங்க.இந்த ஸ்பேம் க்கு உரியவர் பத்தி உங்களுக்கு எந்த தகவலும் கிடைக்காது.குடுத்தவங்களுக்கும் அது யாருக்கு வக்கிறாங்கன்னு தெரியாது.மருத்தவத்தை விளக்கமா புரிண்ட்சிட்டீங்கன்னா உங்களுக்கோ உங்க கணவருக்கோ இதுல எந்த தப்பும் இல்லங்கிறது புரியும்.உங்க வேதன உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.உங்களோட கணவரைப்பத்தி ஆளமா உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.சோ எது சமூகத்துக்கு சரிங்கிறத விட்டுட்டு எது உங்களுக்கு பொருத்தம் எங்கிறதை தெரிவு செஞ்சு முடிவெடுத்து அதனால கிடைக்கும் குழந்தை சந்தோசத்தை முழுமையா அனுபவிச்சு ஹப்பிய வாழ என்னுடைய வாழ்த்துக்களம்மா.

vanakkam sobika akka . Neenga Thirunelvi District Kuttralathil Kidaikkum Thuritham Fruits vangi just one month neengalum unga husbendum saptunga .kandippa kulandhai pakkiyam ungalukku kidaikkum.it is true .yennode akkavukkum ithei try pannithan kulanthai piranthuchhu. athanal than akka ungalukku naan soldren.pls try again akka. ippadikku ungal udanpirava Thambi tharunsasi

மேலும் சில பதிவுகள்