சேமியா பாயசம்

தேதி: July 21, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

தென்னிந்தியர்களின் உணவில் இந்த பாயசத்திற்கு முக்கிய இடம் உண்டு. நல்ல நாட்கள், நிகழ்வுகள் அனைத்திலும் பாயசம் தவறாமல் இடம்பெறும். செய்வதற்கு மிகவும் எளிமையானது. குறைந்தப் பொருட்களைக் கொண்டு, குறைந்த நேரத்தில் தயாரிக்கப்படும் இனிப்பு வகை உணவு இது. 50க்கும் மேற்பட்ட முறையில் பாயசங்களைத் தயாரிக்கலாம். இது சேமியா கொண்டு செய்யப்படும் பாரம்பரிய பாயசம். அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி தயாரித்துக் காட்டியவர் திருமதி. அமுதா ராஜேந்திரன்.

 

சேமியா - 100 கிராம்
சீனி - முக்கால் கப்
முந்திரி - 10
ஏலக்காய் - 3
பால் - ஒரு கப்
நெய் - ஒரு மேசைக்கரண்டி


 

நல்ல திக்கான பசும்பாலாக வாங்கிக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் பாலும் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும்.
அது கொதிக்கும் நேரத்தில், ஒரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரியை போட்டு வறுத்து, நெய்யுடன் எடுத்து தனியே வைக்கவும்.
பிறகு அதே வாணலியில் சேமியாவை உடைத்துப் போட்டு இலேசாக வறுத்துக் கொள்ளவும். நெய் சேர்க்கத் தேவையில்லை.
பால் மூன்று நிமிடம் கொதித்ததும், அதில் வறுத்த சேமியாவைப் போட்டுக் கிளறி சுமார் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
அதன்பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரியை நெய்யுடன் கொட்டவும். விருப்பம் உள்ளவர்கள் முந்திரியுடன் உலர்ந்த திராட்சையையும் (கிஸ்மிஸ்) நெய்யில் பொரித்துப் போடலாம்.
பின்னர் சீனியை கொட்டி, அது பாலுடன் நன்கு கரையும் வரை கிளறவும். சீனி கரைந்த பின்னர் 2 நிமிடங்கள் வேகவிட்டு பிறகு இறக்கவும்.
இறக்கியவுடன் அதில் ஏலக்காயைப் பொடித்துப் போடவும். இனிப்பான சேமியா பாயசம் இப்போது தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டியர் மேடம், இந்த சேமியா பாயசம் சூப்பராக இருந்தது.
சீனிக்கு பதிலாக அச்சு வெல்லம் சேர்த்தேன்.எங்கள் வீட்டில் பாராட்டு கிடைத்தது.உங்கள் குறிப்புக்கு ரொம்ப நன்றி
*நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவார்.*
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*