சோயா கறி

தேதி: January 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

சோயா பீன்ஸ் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு)
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மசாலா பொடி - 1 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

சோயா பீன்ஸை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். நன்றாக ஊறிய சோயாவை குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
மிக்சியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து அரைத்த கலவையை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு வேக வைத்த சோயா மற்றும் மசாலா பொடி, உப்பு போட்டு சிறிது நேரம் மசாலா வாசனை போக வதக்கவும்.
அதனுடன் சோயாவை வேக வைத்த தண்ணீர் சிறிது கலந்து ஐந்து நிமிடம் வேக விடவும்.
இப்போது சுவையான சோயா பீன்ஸ் கறி தயார். இதை சாதம், சப்பாத்தி, பூரியுடன் சேர்ந்து சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.

"எல்லாம் நன்மைக்கே"

சோயா பீன்ஸ் கறி ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது.சோயா பீன்ஸ் என்பது கிறீன் பீஸா அல்லது வேறு ஏதுமா?

பாக்கியலஷ்மி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ;) சோயா நான் பார்த்த வரையில் வெள்ளையான மஞ்சளில் பட்டாணி மாதிரி இருந்தது. நீங்க இங்கே சொல்லியிருப்பது மொச்சை பருப்பு மாதிரி இருக்கே. முடிந்தால் தெளிவுபடுத்துங்க. மத்தபடி குறிப்பு சூப்பர்ங்க. வெங்காயம்,இஞ்சி,பூண்டு, அரைச்சு போட்டு பண்ணியிருப்பது வித்யாசமாக உள்ளது. படங்களும் அருமை. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இது கிரீன் கலர் சோயா பீன்ஸ்.இந்த கலரில் நானும் பார்த்தது இல்ல.இப்போ தான் பர்ஸ்ட் செஞ்சு பார்த்தேன்.மிக்க நன்றி.இது நான் தான்.ஐ பாடு ல இருந்து அனுப்புறேன்.

பாக்கியலக்ஷ்மி...ரெஸிபி நல்லா இருக்கு. ஆனால் இது சோயா பீன்ஸ் இல்ல. கல்பனா சொல்வது போல் மொச்சைக்கொட்டைதான். நீங்கள் பெயரை தவறாக எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

தெரியல்லையே ராதாம்மா.. கிரீன் சோய பீன்ஸ் தேடினால் இந்த பயறு தான் வந்தது. ஆனால் இது டேஸ்ட் சோயா மாதிரி தான் இருந்தது. ரொம்ப தேங்க்ஸ் உங்களுடைய பின்னூட்டத்திற்கு..

"எல்லாம் நன்மைக்கே"

பயறு எதுவா இருந்தாலும் பார்க்க குறிப்பு அருமையா இருக்கு. நான் மொச்சை வெச்சிருக்கேன் (இந்த பீன்ஸ் வகை எல்லாம் இங்க கிடைக்குமான்னு தெரியல) அதில் ட்ரை பண்ணிட்டு சொல்றேன். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா