ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாம் நலாமா இருக்கீங்கன்னு நம்புறேண் நான் ( orbitech elite )ஆர்பிடெக் எலைட் வாங்கலாம்னு இருக்கேன் இது நல்லா இருக்குமா யாராவ்து வாங்கி இருக்கீங்களா எப்ப்டி இருக்கு நான் (tbuy.com )டி பை ல கால் பண்ணி கேட்டேன் Rs 14250 சொல்றாங்க டெலிவரி சேர்த்து இதுல கலோரிஸ் குறையுதா சொல்லுங்கள் நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் வாங்குவேன் tell me soon
tellm me
யாருமே பதில் தர மாட்டீர்களா நான் ஆர்வமா உடம்ப குறைக்கலாம்னு ஆசை படுறேன் அதான் வாங்கலாம்னு கேட்டேன் சொல்ல மாட்றீங்க
orbitrek
எங்க சொந்தத்துல நிறைய பேர் வாங்கியிருக்காங்க..யாரும் உடம்பு குறைச்சு இது வரை நான் பாக்கலை ஆனால் வாங்கிவங்க எல்லாருமே நல்ல உடம்பு குறையும் என்றார்கள்..சீக்கிரம் வியர்த்து ஊத்துமாம்
orbitek
//எங்க சொந்தத்துல நிறைய பேர் வாங்கியிருக்காங்க..யாரும் உடம்பு குறைச்சு இது வரை நான் பாக்கலை//
ஹிஹி.. ஆர்பிட்ரெக் வாங்கினா உடம்பு குறையும்னு யாரோ தப்பா பிரச்சாரம் பண்ணி இருக்காங்க.. :-)
சும்மா நின்ன இடத்துல இருந்து, வெறுமனே கையை மட்டும் வீசிக்கிட்டு இருந்தாலே கலோரி குறையும்(எரியும்). உடம்பை குறைக்கணும்னு தீவிரமா ஆசைப்பட்டா, ஆர்பிட்ரெக்தான் வேணும்ங்கிற அவசியம் இல்லை. செலவே இல்லாம கொஞ்ச நேரத்துக்கு க்ரவுண்ட் எக்சசைஸ், கொஞ்சம் ஸ்கிப்பிங், அப்புறம் நின்ன இடத்துல இருந்தே கொஞ்சம் ஜாக்கிங் இப்படி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செஞ்சாலே போதும். அப்புறம் கண்டிப்பா டயட்டை மாத்தியாகணும். உடம்பை குறைச்சிடலாம்.
இப்படி ஒரு மணி நேரம் எக்சசைஸ் பண்ண முடியாத அளவுக்கு உங்களுக்கு காரணங்கள் இருந்தால், இல்லை நீங்க காரணங்கள் கண்டுபிடிச்சால், ஆர்பிட்ரெக்கும் வேஸ்ட்தான். வாங்கி கொஞ்ச நாள் செஞ்சுட்டு அப்புறம் ஒரு மூலையில போட்டுடுவீங்க.. கூகிள்ல used Orbitrek ன்னு தேடிப் பாருங்க. எத்தனை பேர் வாங்கினதை விக்கிறதுக்கு ரெடியா இருக்காங்கன்னு தெரியும்.
ப்ராடக்ட்ல தப்பு இல்லை. நல்ல ப்ராடக்ட்தான். (நானும் சைக்கிள் வாங்கி, அப்பப்ப துடைச்சி பத்திரமா ஒரு பக்கம் நிறுத்தி வச்சிருக்கேன். :-)) நமக்கு நாமத்தான் பிரச்சனையே..
ஃபர்வின்
ஃபர்வின் சொல்லலாம்னு நெனச்சேன் அட்மின் சொல்லிட்டார். உண்மை தான்.அவங்க வீட்லயெல்லாம் ஆர்பிட்ரெக்கில் டவல் தான் காயப்போடுறாங்க.உங்களுக்கு நல்ல முறையில் உடம்பும் குறைஞ்சு மனசும் சாந்தமாகனும்னா யூ டியூபில் போய் ஹீலர் பாஸ்கர் செய்து காட்டும் சின்ன சின்ன ஆசனங்கள் செய்து பாருங்க.தெளிவா சொல்லி தந்திருப்பார்.லின்க் தராம கை அரிக்குதே
thanks
ரொம்ப நன்றி தளிகா அட்மின் நீங்க சொன்னது க்ரெக்ட்தான் இருந்தாலும் நம்ம அல்ட்சியம்தான் அதனால் அதை வாங்கினாவது முய்ற்சி பண்ணலாம்னுதான் ச்ரி நீங்க சொன்ன மாதிரி பாலோ பண்ணி பார்க்கிறேன் எப்ப்டி இருக்குனு நன்றி
ORBITRACK BUY OR NO
FIRST U DO SOME WALKING
FIRST UR ABLE TO MAINTAIN THE TRAINING AND THEN DISCUSS IT THIS FORUM