சமையல் சொதப்பல்கள்....

டியர் தோழிஸ்...நாம் ஆரம்ப காலத்தில் தடுமாறி தடுமாறி சமையல் செய்ததை நினைத்தால் நமக்கே சிரிப்பாக வரும்.எனவே, நீங்கள் முதலில் சமையல் செய்யும் போது அல்லது எப்போதாவது நேர்ந்த சமையல் சொதப்பல்களை இங்கே பகிர்ந்துக்கொங்க...எல்லோரும் சேர்ந்து சிரிப்போம்.நம்மை சமையலில் தேர வைத்த அறுசுவைக்கு நன்றிகள் பல...

நான் முதல் முறை அல்வா செய்ததை என்னால் மறக்க முடியாது.பாத்திரத்திலெயெ ஒட்டி கல்லாக போன அல்வாவை,2 நாள் தண்ணீரில் ஊர விட்டு பாத்திரத்தை விட்டு பிரித்துஎடுத்தேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இந்த தலைப்பில் நானும் ஒரு இழை ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன் நீங்க தொடங்கி விட்டீர்கள் தோழி
என்னுடைய சொதப்பல் சமையல் (இது இன்னும் என் வீட்டில் யாருக்கும் தெரியாது சொல்லி விடாதிர்கள்)
எனக்கு திருமணம் முடிந்து என் கணவர் வீட்டில் முதல் நாள் என் மாமியார் சமையல் பண்ண சொல்லிவிட்டு அவர்கள் ஸ்கூல் (வொர்க் பனுறாங்க ) போயிடங்க நானும் சமையல் பண்ணிட்டேன் சாம்பார் வைக்க பருப்பு வேக வைத்து சாம்பார் வைத்தேன் சாம்பார் கெட்டியா இருந்தது (என் அம்மா எனக்கு சீர் குடுத்த பாத்திரத்தில் பருப்பு இருக்கு போட்டு வையுன்னு சொல்லிட்டாங்க அது என் சாம்பார் கெட்டிய இருந்ததுன்னு அப்போ எனக்கு தெரியலை கொஞ்ச நாள் கழித்து நான் தனி குடித்தனம் வந்து நான் கடைக்கு போயி பருப்பு வாங்கும் போது தான் தெரிந்தது அது துவரம் பருப்பு இல்லை கடலை பருப்பு என்று )
2011 தீபாவளி க்கு பாதாம் பருப்பு பர்பி பண்ணேன் அது பர்பி வரலை பாதாம் அல்வா தான் வந்தது (அரைக்கும் போது பால் அதிகமாக விட்டு விட்டேன் ) கடைசியில் பாதாம் அல்வா என்று சொல்லி வீட்டில் எல்லாருக்கும் குடுத்து விட்டேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நான் ஏற்கனவே இதுபத்தி சொல்லி இருக்கேன்னு நினைக்கிரேன். பார்க்காதவங்களுக்காக மறு படியும்,............... முதல் முறையா ரவா கேசரி
பண்ண ஆரம்பிசாப்போ பல சமையல் குறிப்புகளையும் படிச்சு அதன் படி ரவையை வறுத்து பாலில் வேக வைத்து, வெந்ததும் சர்க்கரையும் சேர்த்து நெய் சேர்த்து கிண்டரேன் கிண்டரேன் கெட்டியாகவே ஆகல்லே. ஒருமணி நேரம் ஆன பிறகு ஒருவழியா இறக்கி முந்திரி திராட்சை ஏலம் எல்லாம் சேர்த்து மூடி வச்சுட்டேன். வீட்டுக்காரர் சாயங்காலம் வீட்டுக்குள்ள வரும்போதே ஆஹா வீடு பூரா நெய் வாசனை வீசுதே ஏதானும் ஸ்வீட் பண்ணியிருக்கியான்னே உள்ள வந்தாங்க, நானும் ரொம்ப பெருமையக ஆமாங்க ஸ்வீட் பண்ணினேன் என்னபேருன்னு நீங்கதான் சொல்லனும்னேன். அவரும் ஆசையா ஸ்பூனில் எடுத்து ஒருவாய் சாப்பிட்டாங்க. என்னபேரு என்னஸ்வீட்டுன்னே கண்டு பிடிக்க முடியல்லே ஆமா நீ என்ன ட்ரை பண்ணினேன்னு கேட்டார் கேசரின்னேன் சிரிச்சுட்டே இது கேசரி மாதிரியும் இல்லே, அல்வா மாதிரியும் இல்லே அதனால நான் ஒரு புது பேரு வைக்கிரேன் கேசவா. ஓக்கேவா. என்றார். அப்பலேந்து கேசரி பண்ணும்போதெல்லாம் இந்த சம்பவம் தான் நினைவில் வரும்

இந்த தீபாவளிக்கு மைசூர்பாகு ரொம்ப ஆசையாக பண்ணினேன். ஆனால் மைசூர்பாகு சொதப்பலோ சொதப்பல். மைசூர்பாகும் கணவரும் மகளும் சேர்ந்து என்னைபார்த்து சிரிக்க எனக்கோ அழுகை-ம் சிரிப்பும் கலந்த தர்மசங்கடமான நிலை. அடுத்த தடவை சரியகபண்ணி நல்லபெயர் வாங்கணும்.

தோழிகளே, ஏற்கனவே இந்த தலைப்பில் ஒரு இழை உள்ளது. முடிந்தால் அதில் தொடருங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/15417

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் முதன் முதலில் முருக்கு செய்ய முயற்சி செய்தேன், அதுவும் மைதா மாவு ல, மாவு பினைந்து ஒலக்கு ல போட்டா வெளியவே வரல, ஏன் தெர்யுமா, அது இடியாப்ப ஒலக்கு, எப்பூடி!!!
அப்பறம் பெரிய சொதப்பலா போச்சு,
இங்க வந்து முதல் தடவை பருப்பு உருண்டை குழம்பு வச்சென், அது எனக்கு ரொம்ப பிடிக்கும், குழம்பு கொதித்ததும் உருண்டைய போடு நு அம்மா சொன்னாங்க, நான் அத மறந்துட்டு கொதிக்கிறதுக்கு முன்னாடியே போட்டுடேன், கொஞ்ச நேரம் கழிச்சு திறந்து பார்த்தா பருப்பு உருன்டை எல்லாமே உடன்சு பொச்சு எனக்கு ஒரே அழுகை தேம்பி தேம்பி அழுதேன்,
இப்ப இப்ப நானே கொஞ்சம் பழகிட்டேன் :)

இது என் மாமியாரின் சொதப்பல்,
அவங்க திருமணம் முடிந்து முதல் தடவையா மீன் குழம்பு வச்சாங்கலாம், மீன் வாங்கி சட்டில போட்டு சோப்பு போட்டு நல்லா கழுவி கழுவி ஊத்திடாங்க, அப்பறம் ஏதோ குழம்பும் வச்சுட்டாங்க, மாமா வந்ததும் சாப்பாடு எடுத்து வச்சதும் குழம்பு திறந்து பார்த்தா ஒரே நுரை நுரையா வந்துருக்கு, மாமா life வெறுத்து போஇ அவங்க அம்மாட்ட சொல்லி பொலம்பல் தான்

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்