தேங்காய்ப்பால் மீன்குழம்பு

தேதி: January 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (12 votes)

 

மீன் - அரை கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கெட்டி தேங்காய்ப்பால் - ஒரு கப்
உப்பு - தேவைக்கு


 

முதலில் நறுக்க வேண்டியவற்றை நறுக்கி தயார் செய்து கொள்ளவும். தேங்காய்ப் பால் எடுத்து வைக்கவும். மீனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். புளி கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வதங்க விடவும்.
அதில் அனைத்து மசாலா தூளையும் சேர்த்து சிறிது பிரட்டி விட்டு புளித்தண்ணீரை சேர்க்கவும். மசாலா, புளித்தண்ணீர் வாடை கொதித்து அடங்கட்டும்.
பின்பு சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்க்கவும். கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும். உப்பு சரி பார்க்கவும்.
மீன் வெந்தவுடன் தேங்காய்ப்பாலை சேர்க்கவும். அடுப்பு சிம்மில் இருந்து கொதிக்க வேண்டும். குழம்பு கொதித்து எண்ணெய் தெளிய ஆரம்பிக்கவும், நறுக்கிய மல்லிதழை தூவி மூடி அடுப்பை அணைக்கவும்.
சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு ரெடி. இதனை சப்பாத்தி, பரோட்டா, ஆப்பம், தோசை, இட்லி, நெய்ச்சோறு, ப்ளைன் சாதத்துடனும் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆசியா... உங்கள் அசத்தலான 300வது குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

300 வது குறிப்பை யாரும் சமைக்கலாமில் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.கண்டு பிடிச்சிட்டீங்க வனிதா.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள் :-)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

puli pathunkuvathu payathan so ungal karuthupatee thayanku meanas pathunkuvathu.

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மேடம்,
ம்ம்.மூன்னூறு..
மீன் குழம்பு வாசம் இங்கே வருது..மாமியார் இப்படி தான் செய்வாங்க.. வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்க தேங்காய்பால் மீன்குழம்பு சூப்பர்ர்..... நேற்று வஞ்சிரம் மீன்ல ட்ரை பண்னேன் செம டேஸ்டி...

இப்படிக்கு ராணிநிக்சன்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிங்க.மிக்க மகிழ்ச்சி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சூப்பரான மீன் குழம்பு பார்க்கவே சாப்பிடனம்னு தோனுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கருத்திற்கு மிக்க நன்றி.ஃபேஸ்புக் மாதிரி லைக் பட்டன் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்,எல்லா குறிப்பிற்கும் சென்று கருத்து சொல்ல ஆசை தான். நேரம் தான் கிடைக்கணும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........மீன் குழம்பு நாக்கில் நீர் ஊற வைக்குது. அமர்க்களமா இருக்கு. கண்டிப்பாக அடுத்த முறை தேங்காய் பால் சேர்த்து தான். 300வது குறிப்புக்கு வாழ்த்துக்கள். மேலும் பல குறிப்பு கொடுத்து எங்களை திக்குமுக்காட வைக்கோணும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கருத்திற்கு மகிழ்ச்சி.செய்து பார்த்து விட்டு சொல்லுங்க.நிச்சயம் அப்ப அப்ப குறிப்பு கொடுக்கிறேன்பா..

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹலோ ஆசியா மேடம் .எப்படி இருக்கீங்க ? மீன் சால்னா சூப்பர் .நான் அறுசுவைக்கு புதிது .எனக்கு கல்யாணம் இப்பதான் ஆனது . எனக்கு அவ்வளவா சமையல் தெரியாது . இந்த மாதிரி பார்த்து இப்பதான் ஒரு அளவு செய்றேன் .

சகோதரி ஆசியா.....அஸ்ஸலாமு அலைக்கும்.....நான் அறுசுவைக்குப் புதுசு....இன்று உங்கள் தேங்காய்ப் பால் மீன் குழம்பு சமைத்தேன்....சூப்பர்....முன்பு ஈசி சிக்கன் சால்னாவும் செய்தேன்....நல்லசுவை.கத்தாரில் வசிக்கிறேன்...மிக்க நன்றி..... அன்புடன் நிஜாமுதீன்

அன்புடன்
Nizamuddin - Doha,Qatar
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

300 வது குறிப்பு வாழ்த்துக்கள் ஆசியா.
தேங்காய பால் மீன் குழ்ம்பு அதுவும் ப்ரோடாவுடன் கேட்கவா வேண்டும்.

Jaleelakamal

Very tasty :) thanks for the recipe.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாதரணமான மீன் குழம்பே சூப்பரா இருக்கும் தேங்காய் பால் சேர்ந்தா சொல்லவே வேணாம் போங்க கலக்கல்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்