தமிழ் கவிதை

ஹாய் தோழிஸ்,

இங்க உங்களுக்கு பிடிச்ச தமிழ் கவிதைகள பகிர்ந்துக்கலாமே .
எனக்கு மிகவும் பிடித்த வைரமுத்து கவிதை இது தான்

" இங்கு யாரும் வாழ்கையே வாழவில்லை,
ஏழை மகிழ்ச்சியாய் இல்லை,
பணக்காரன் நிம்மதியாய் இல்லை,
வைற்றுக்கு சம்பாதிக்கும் ஏழை,
வருமான வரிக்கு சம்பாதிக்கும் பணக்காரன்,
இருவருமே வாழ்கையை சம்பாதிக்க மறந்து விட்டனர்".

நல்ல வரிகள்... உண்மையான வரிகள். நான் அதிகம் கவிதைகள் படித்ததில்லை. அப்படியே படிச்சாலும் நினைவில் நிக்காது. இனி ஏதும் படிச்சு பிடிச்சா வந்து அவசியம் பகிர்ந்துக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,

மிகவும் நன்றி,
எனக்கு இந்த கவிதை ரொம்ப பிடிக்கும்.
வைரமுத்துவின் "சிகரங்களை நோக்கி" . இந்த புக் ரொம்ப நல்லா இருக்கும்.எனக்கும் ரொம்ப சூட் ஆகற மாதிரி இருக்கும்.

வனிதா என்னோட தமிழ் எப்படி இருக்கு?

Then How was ur week end?

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

உங்கள் மேடை உங்கள் நாக்கு
எது வேண்டுமானாலும் பேசுங்கள்.

உங்கள் பேனா உங்கள்
அச்சகம் எது வேண்டுமானாலும்
எழுதுங்கள் .

உங்கள் தராசு உங்கள் உங்கள் எடைக்கல்
எது வேண்டுமானாலும் விமர்சியுங்கள் .

உங்கள் சுவர்கள் உங்கள் காகிதங்கள்
எது வேண்டுமானாலும்
ஒட்டிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாத்தியங்கள் உங்கள் கச்சேரி
எது வேண்டுமானாலும் வாசியுங்கள்.

உங்கள் தூரிகை உங்கள் வர்ணங்கள்
எதுவேண்டுமானாலும் வரையுங்கள்.

ஆனால்........... நாளை காலத்தின்
விமர்சனம் உங்கள் பிணங்களைக் கூடத் தோண்டி
யெடுத்து வந்து தூக்கில் போடும்
என்பது ஞாபகம் இருக்கட்டும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று,

அருமையான கவிதை,

எனக்கு பிடித்த இன்னொரு கவிதை,

ஓர் ஆணின் மனசும் பெண்ணின் மனசும் ஒன்றோடொன்று இடறி விழுந்து, இடறி விழுந்த மனசுகளின் சம்மதத்தோடு உடம்புகளும் தொட்டுக்கொண்டு, இன்பம் போல ஒரு துன்பத்தையும், துன்பம் போல ஒரு இன்பத்தையும் ஒரு சேர அனுபவிப்பதே காதல்....

வைரமுத்து from கவிதை கள்ளி காட்டு இதிகாசம்

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

எனக்குப் பிடித்தப் பெயர்.. :) எனக்குக் கவிதைகளில் அதிக ஆர்வம் இல்லை.. ஆனால் எப்போதாவது படிப்பது உண்டு.. வெகு சமீபத்தில் படித்த கவிதை இது..

நம்புங்கள்
.................

முச்சந்தியில் விளக்கேற்றுங்கள்
தாலி பாக்கியம் தங்க
மஞ்சள், பச்சையில்
புடவை உடுத்துங்கள்.

அண்ணாமலை தீபம் அணைந்ததாம்
அடுக்கடுக்கடுக்காக இனி
துன்பங்கள்தான் என்கிறார்கள்.

மூத்த பிள்ளைக்கு ஆகாதாமே?
மறக்காமல் வேப்ப மரத்தில்
மஞ்சள் கயிறு கட்டுங்கள்

வீட்டுக்கு வீடு மரம் நடுங்கள்
பூமியே பிழைக்காதென்றால்
புரளியாய்க்கூட
நம்புகிறார்களில்லை!

- சு.கவிபாலா

(சொல்வனம் - ஆனந்த விகடன் டிச.1, 2010)

உங்க கவிதை நல்லா இருக்கு.
இப்பொழுது நடைமுறைக்கு ஏற்ற கவிதை.
மரங்களை நட வில்லை என்றாலும் சரி. வெட்டாமல் இருந்தாலே கொஞ்சம் நல்லது.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

மேலும் சில பதிவுகள்