6 மாதம் மலசிக்கல் - திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும்

6 மாதம் மலசிக்கல் - திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும்

என் மகனுக்கு 6 மாதம் ஆகிறது, தற்போது தான் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கிறோம், எங்கள் மருத்துவ ஆலோசனை படி Easum கொடுக்க ஆரம்பித்துள்ளோம். மூன்று நாட்களாக மோஷன் போகவில்லை. நிறைய கட்டுரை படித்துவிட்டேன் - மலசிக்கல் பற்றி அறுசுவையில் இல்லை. திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் வரும் மலசிக்கலுக்கு எதாவது சொல்லுங்கள் ( முக்கி கொண்டே இருக்கிறான் ) என்ன என்ன கொடுக்கலாம்னு நிறைய இருக்கிறது. எது கொடுத்தல் மலசிக்கல் வராது. அறுசுவையில் அனைத்து கட்டுரையும் படித்து விட்டேன். லிங்க் கொடுக்காமல் முடிந்தவரை பதில் சொன்னால் உதவியாக இருக்கும்

நன்றி
பாபு நடேசன்

கொஞ்சம் வெது வெதுப்பான வெந்நீர் கொடுக்கவும்.மோஷன் வந்துடும்.

திட உணவை ரொம்ப திக்கா கொடுக்காமல் கொஞ்சம் இலகுவாக விழுங்குவது போல் கொடுக்கவும்..

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

தொடக்கத்தில் என் குழந்தைகளுக்கும் அப்படித்தான் இருந்தது. 4 நாள் கூட போகாமல் இருந்திருக்கிறார்கள். வீட்டு வைத்தியம் என்றால் 2,3 காய்ந்த திராட்சையை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு பின்பு அதை பிசிறி ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடி கட்டி தரலாம். இது நல்ல பலன் தரும். 6 மாதத்தில் காய்கறிகள் கலந்து வெஜிடபுள் சூப் வைத்து தரலாம். அவ்வபோது வெதுவெதுப்பான வெந்நீரை பருக தரவும். மாதங்கள் ஆக, ஆக ஏற்படும் உணவு முறை மாற்றத்தினாலும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். இந்த சமயத்தில் பிஸ்கெட் வகையறாக்களை கொஞ்ச நாட்கள் தராமல் ஒத்தி வையுங்கள். இத்தனைக்கு பிறகு நிலைமை இப்படியே இருந்தால், குழந்தையை டாக்டரிடம் காட்டவும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தமிழ் ல சொன்ன நல்லா இருக்கும்

நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை

குழந்தைக்கு 10 மில்லி வெது வெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி சர்க்கரை கரைத்து குடிக்க கொடுக்கவும். வெது வெதுப்பா கொடுங்க. கண்டிப்பா மோஷன் போகும். குடுக்கும் உணவை கெட்டியா கொடுக்காம வெது வெதுப்பா (உணவு ஆற கூடாது, அது தான் மோஷன் பிரெச்சனை உண்டு பண்ணும்) கொஞ்சம் நீர்க்கவே கொடுங்க. குழந்தைக்கு அந்த உணவு பழகனும் முதல்ல, அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா கெட்டியான உணவை கொடுக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராகி, கோதுமை எல்லாம் அல்வா போல செய்து உப்பு போட்டு தரவும். தினமும் ஏதாவது பழம் குடுங்க...வெது வெதுப்பான தண்ணீர் நிறைய குடிக்க வைங்க.....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

6 months baby food la salt aa?

1 pinch uppu dhaan illa adhuvum vendam

மேலும் சில பதிவுகள்