கடும்தண்டனையை எதிர்ப்பது ஏன்?

இப்போதைய நாளிதழ்களை படித்தால் நாலு நாள் தூக்கம் போயிடும் அந்தளவுக்கு கொடூரமான சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கு.கொலை,கொள்ளை,பாலியல் பலாத்காரம் என பெருகிக் கொண்டே போகுது.குழந்தைகள் குமரிகள் என்றெல்லாம் இப்போ இல்லை பிறந்த குழந்தைகளை கூட கட்டிக் காக்க வேண்டிய ஒரு நிலமை...இத்தனையும் நடந்தும் கடும்தண்டனைக்கு இன்னமும் எதிர்ப்பு தெரிவிக்கத் தான் செய்கிறார்கள்...அது எதனால் என்பது எனக்கு புரியாத புதிர்...என்ன கார்ணத்திற்காக இதற்கு மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.

எல்லாம் ஒரு சீப் பப்ளிசிட்டிதான் :(. மரணதண்டனையை மனித உரிமை மீறல் அவனுக்கும் வாழ்வதற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என்பவர்கள், அக்குற்றம் செய்தவனால் பாதிக்கப் பட்டவர்களின் மனித உரிமையை, அவர்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்தது பற்றி எளிதாக மறந்து விடுவதுதான் வேடிக்கை அதுவே அவர்களின் வாடிக்கை :(.

தண்டனைகள் கடுமையாக்கப் பட்டால் மட்டுமே போதாது அதை முழுமையாக செயல் படுத்தணும். இல்லேன்னா செல்வாக்குள்ளவன் தவறு செய்தாலும் எந்த தண்டனையும் அவனை ஒன்னும் செய்யாது. இதுதான் நம் நாட்டின் இன்றைய நிலைமை :(

பின்குறிப்பு: சிங்கப்பூரில் போதை மருந்து வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை. ஆனாலும் அப்பப்போ இக்குற்றத்தில் மாட்டி தண்டனை பெறுபவர்களும் இருக்கத்தான் செய்யறாங்க. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்... கதைதான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தளிகா எனக்கும் இந்த கேள்வி ஒரு புரியாத புதிராவே இருக்கு ரொம்ப நாளா, நாளிதழ்களை தினமும் படிக்கும் போது ரொம்ப பயமா இருக்கு ஊர்ல நடக்கும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு இன்னும் பல சொல்லிக்கிட்டே போகலாம் அப்போ நானும் நினைச்சுருக்கேன் சவுதி மாதிரி கடுமையான சட்டதிட்டங்கல கொண்டுவரனும் என்னன்னா கொலையினா தலை வெட்டு, கொள்ளையினா சவுக்கடியோட கடுமையான ஜெயில் தண்டனை, கற்பழிப்புனா மரண தண்டனை இது மாதிரி தண்டனைகள் இருந்தா குற்றங்கள் குறையும் நம்ம நாட்டுல ஏன் இது மாதிரி சட்டங்கள் போடல? போட்டா நல்லா இருக்குமுனு நினைச்சுருகேன்.சவுதில இவ்வளவு கடுமையான சட்டங்கள் இருக்கும் போதே சில நேரங்களில் குற்றங்கள் நடக்கத்தான் செய்யுது தளிகா என்ன செய்ரது நம்ம நாடு அவ்வாறு சட்டம் போடாவிட்டாலும் குற்றங்களை ஓரளவுக்கு குறைக்கலாம் எப்படினா சவுதி மாதிரி பெண்கள் உடலை முழுவதும் துணியால் மூடனும் ,முகத்தை மறைக்கனும் இது மாதிரி சில மாற்றங்களை நாமளே மாற்றிக்கொண்டால் குறைக்கலாமுனு நான் நினைக்கிறேன் தளிகா நீங்க என்ன சொல்ரீங்க ,உங்க மனசுல ஏற்பட்ட அதே சந்தேகம் தான் நீண்ட நாளா என் மனசுலையும் நம் தோழிகள் நமக்கு நல்ல கருத்தை சொல்லுவாங்கனு எதிர்பார்ப்போம் தளிகா...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மனிதனை ஒரு பாம்பு, நாய் கடிச்சா கூட அதை உடனே அடிச்சு கொல்லும் மனிதனுக்கு, மனிதனே இன்னொரு மனிதனின் உயிரை எடுத்தால் மட்டும் ஏனோ அறிவு வேலை செய்வதில்லை. :)

இதில் சுயநலம் தவிற வேறு ஏதும் இல்லை தளிகா. பாதிப்பு தனக்கில்லை எனும் போது பணத்துக்காகவோ, புகழுக்காகவோ, கவிசிவா சொன்னது போல பப்லிசிட்டிக்காகவோ ஒரு கடும் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஒரே வழி தான்... முன்பை பிரெச்சனை ஆனப்போ ஒருவன் உயிரோட மாட்டினான்... அப்பறம் மனி உறிமை அவனுக்கும் வாதாட ஒரு வக்கீல் வேணும்னாங்க... வர வக்கீல் வேற வழியே இல்லை அவனுக்கு வக்காலத்து வாங்கி தான் ஆகனும்னு கட்டாயம் இருக்கே... பின்ன அவன் பக்க நியாயத்தை பேச தானே அவர் இருக்கார்.

பேசிக்கா நம்ம சட்டத்தில் உள்ள ஓட்டை இதெல்லாம். என்ன கேட்டா இது போல காட்டுமிராண்டி தனமான விஷயங்களில் போராடி அவர்களை கைது செய்யாம பத்தோட பதினொன்னா அங்கையே போட்டிருக்கலாம். :) வாதாட வக்கீல் வேணாம், மண்டை காஞ்சி நம்ம நியூஸ் பார்க்க வேணாம்... கடவுளே தீர்ப்பு கொடுத்த மாதிரி ஆயிருக்கும்.

நம்ம மக்களுக்கு கொஞ்சம் அறிவு வேலை பார்க்கனும்... தனக்கு ஒரு பிரெச்சனைன்னா, சின்னதா திருட்டு போனா கூட... “என் பணத்தை கொல்லை அட்ச்சவன் உருப்புடவே மாட்டான்... கை கால் போக, சாவுடா”னு சபிப்பாங்க... இதுவே பக்கத்து வீட்டுக்காரனுக்கு போனா... “ஊரை அடிச்சு சம்பாதிச்சா இப்படி தான் போகும்”னு சிரிப்பாங்க. ஏன் சொல்றேன்னா.... அடுத்தவர் பிரெச்சனையை தன் பிரெச்சனையாக பார்க்க தெரியாதவர்கள் நம்ம மக்கள்.

இன்னைக்கு அவன் வீட்டில் போன திருட்டு, நாளை நம் வீட்டில் போகும் என்ற பேசிக் அறிவு இருந்தாலே இது போல் கடும்தண்டனைக்கு எதிர்ப்பு வருவது குறையும். இது எல்லா குற்றங்களுக்கும் பொறுந்தும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தளிகா...நம்ம நாட்டுல சட்டத்துக்கு மதிப்பே இல்லங்கறதுதான் இதுக்கு காரணம்.சட்டம் போடுவது அரசியல்வாதிகள் கையில் இருக்கு. அப்படி போட்டால் முதலில் தண்டனை பெற வேண்டியது அவர்களாகத்தான் இருக்கும்.அதோடு சட்டத்தை சுலபமாக லஞ்சம் கொடுத்து மீறி விடலாம் நம்நாட்டில்.

சிக்னலில் போலீஸ்காரர் இருந்தால் மட்டுமே மக்கள் சரியாகச் செல்கிறார்கள்.இல்லாவிட்டால் அவரவர் இஷ்டத்துக்கு போய் ட்ராஃபிக் ஜாம்தான். என் மகன் சிக்னல் விழும்வரை வண்டியை எடுக்க மாட்டான். முன்னாலிருக்கும் ஒரு வண்டி சற்று முன்னால் நகர்ந்ததும் பின்னாலிருந்து ஹாரன் சத்தம் காதைப் பிளக்கும். என் மகனோ'யார் எவ்வளவு அடித்தாலும் சிக்னலின்படிதான் நான் நகருவேன்' என்பான். இது போன்று எல்லாரும் இருந்தால் நாட்டில் பிரச்னையே வராதே?

பல வெளிநாடுகளைப் பார்க்கும்போது நம் நாட்டில் யாருமே சட்டத்தை மதிப்பதில்லை என்பது மனதுக்கு மிக வருத்தமாக இருக்கும்.சிங்கப்பூரில் நான் கசகசா வாங்க ஒரு கடைக்குச் சென்றேன். அது லிட்டில் இன்டியாவில் நம் நாட்டவரின் கடை. அவரோ பயந்து' அய்யோ மேடம்...கசகசாவெல்லாம் இந்த ஊரில் போதைப் பொருள். அதை வைத்திருப்பவருக்கு உடன் மரண தண்டனைதான். இங்கு கிடைக்காது. அதை நம்முடன் எடுத்துச் வந்தாலும் செக்யூரிடி செக்கில் பிடித்து தண்டனை கொடுத்து விடுவார்கள்' என்றார்..அங்கும் கூட ஒரு கடையில் என்னை ரகசியமாகக் கூப்பிட்டு ஒரு கடைப் பணியாளர்' மேடம்...மெதுவாப் பேசுங்க. 10 கிராம் கசகசா 5 டாலர்' என்றார். சட்டத்தை மீறி வாங்க எனக்கு இஷ்டமில்லை. அதை எப்படியோ திருட்டுத்தனமாக கொண்டு வந்தவரை நினைத்து அடப்பாவிகளா...இந்த ஊரையும் கெடுக்க நம் நாட்டு மக்கள் இருக்கிறார்களே என்று நொந்து விட்டேன். அந்த நாடுகளில் ஏன் சட்டத்தை இவ்வளவு கடுமையாக வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நான் கிட்டத்தட்ட 10 நாடுகளுக்கு மேல் சென்று வந்துள்ளேன். எல்லா நாடுகளிலுமே ஒரு ஒழுங்குமுறை உள்ளது. காரணம் கடுமையான சட்டம்.இது கண்டிப்பாக எல்லா நாட்டுக்கும் தேவைதான்.

ஹ்ம்ம்ம்....நம்ம நாட்டில் தண்டனையும் இல்லை; அதை முறையாகக் கடைப் பிடிப்பவரும் இல்லை; வாழும் மக்களும் சட்டத்தைப் பற்றி கவலைப் படுவதுமில்லை. கண்ட இடத்தில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, குப்பை போடுவது இதையெல்லம் பார்க்கும்போது 'எங்கெங்கு காணினும் குப்பையடா' என்று பாரதியார் பாடலை மாற்றிப் பாடத் தோன்றுகிறது!!! இது நம் தலைவிதி. நம் நாடு எத்தனையோ துறைகளில் முன்னேறினாலும் இந்த சட்ட மீறல்கள் ஒரு சாபக் கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.

நாம் எல்லோரும் மன வருத்தப்பட மட்டுமே முடியும்..ஒவ்வொருவரும் ஒரு 'அந்நியனா'க மாற முடியுமா?!

நம்ம சமுதாயத்துக்கு தெருஞ்சது எல்லாம், "நமக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம்". இது வீட்டு பிரச்சனைல தொடங்கி, தெரு,ஊர்,சமுதாயம்ன்னு எல்லா பக்கமும் இதை தான் பாலோ பண்றாங்க. வனி,கவி சொன்ன மாதிரி சட்டத்தில் உள்ள ஓட்டைகள் தான இதுக்கு காரணம். இனி இது மாறும்ன்னு நம்பிக்கை இல்ல, வருங்காலம் இதை விட மோசமான நிகழ்வுகள் நடக்க தான் போகின்றன. சமூகம்,சட்டம் வேடிக்கை பார்க்க தான் போகின்றன.

நம் நாட்டை பொறுத்த வரை, ஒரு விஷயம் சொல்றோம்ன்னா அதை, எந்த நல்லதுக்கு பயன்படுத்தலாம்ன்னு பாக்கமாட்டோம், எப்படி எப்படி கெட்ட விஷியங்களுக்கு பயன்படுத்தலாம்ன்னு பாப்போம். அதே மாதிரி தான், இந்த மனித உரிமைகள் ஆணையம். தூக்கு தண்டனை எதிர்பவங்க எல்லாம் யாரு தெரியுமா, "நானும் ரொம்ப நல்லவன்" ன்னு ஊருக்கு காட்டி கொள்பவன். ஒரு விஷியத்தையே அழுத்தி அழுத்தி ஆறு முறை சொன்னா, உண்மைன்னு நம்ம சமூகம்,மக்கள் நம்புவாங்க. அந்த விஷியத்தை ஆராயும் அறிவும், திறமையும் நம்ம மக்களிடம் குறைவு.

ஒரு குற்றம் நடந்தால், அதற்க்கான தண்டனை ஒரு மாதத்திற்குள் வழங்க பட வேண்டும். இத விட்டுட்டு, 5 வருஷம் - 50 வருஷம்ன்னு, குற்றவாளி செத்தும் அவன் பிள்ளைகள் வரும் வரை வைத்து கேஸ் நடத்தரத நிறுத்தனும். ஏதோ ஒரு படத்துல விஜய் சொல்ற மாதிரி, இந்த கோர்ட் ல சொன்ன தீர்ப்ப அடுத்த கோர்ட் க்கு கொண்டு போய் வெளிய வராங்க. இதை முதல்ல நிறுத்துனாலே, இந்தியாவில் பாதி குற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

படிக்காதவங்க கிட்ட தான் ஒற்றுமை இல்லைன்னு பாத்தா, படுச்ச இப்ப இருக்க சமுதாயமும் நமக்கு என்னன்னு தான் இருக்கு, இது தான் வேதனை தர கூடிய விஷயம். சின்ன சின்ன குற்றம் நடக்கும் போது, ஒருத்தர் தட்டி கேட்டா, அவருடன் 10 பேர் சேந்து கேட்டா, தப்பு பண்றவனுக்கு பயம் வரும். அதை விட்டுட்டு, நமக்கு என்னன்னு இருக்கும் வரை நம் நாட்டில் இது சாப தீடு தான் :-(

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கிராமத்துல ஒரு திருடன் மாட்டினா ஊரே சேர்ந்து தோலை உரிக்கும்... நகரத்தில் நடு ரோட்டில் அத்துட்டு போனாலே நின்னு ஒரு நிமிஷம் பார்த்துட்டு (அதுவே சில நேரம் தான் ;)) யார் நகையோ போச்சுன்னு போயிடும். அது அவங்களுக்கு அன்றைய பொது நிகழ்வுகளில் ஒன்று. இங்கே கொலையும் சாதாரணமப்பா.

படிக்காதவங்ககிட்ட ஒற்றுமை இல்லன்னு சொல்ல கூடாது சுகி... அவங்கலாது கொஞ்சம் ஒற்றுமையா இருக்காங்க, படிச்சவங்க தான் பின்னால குத்துறது, மோசம் பண்றது எல்லாம்... அபீஸ்லயே பார்க்கலாமே... ஒருவர் முன்னேரினா “சோப் போட்டே ரேட்டிங் வாங்கிட்டான்”னு அவனை மட்டம் தட்டும் மெத்த படிச்ச மக்களை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு உயிரின் மதிப்பு நம் நாட்டில் மிக மிக குறைவு. ஒரு உயிருக்குன்னு தனி விலை வைத்து உள்ளனர். ஏழைன்னா அதுக்கு ஒரு விலை, பணகாரன்ன்னா அதுக்கு ஒரு விலை. எல்லாமே பணம் என்ற நிலைமை வந்து ரொம்ப நாள் ஆச்சு. உதாரணத்துக்கு பஸ் accident நடக்குதே, 50 பேர் எல்லாம் சாகறாங்க. அந்த டிரைவர் க்கு என்ன தண்டனைன்னு நினைக்கறீங்க? அதிகபட்சம் 4 வருஷம் ஜெயில், இது தான். அந்த பஸ் ஓனருக்கு என்ன தண்டனை தெரியுமா? ஒண்ணுமே இல்ல, அந்த பஸ் சீஸ் பண்ண கூட மாட்டாங்க. கோர்ட் ல ஒரு சதவீதம் பணம் கட்டி பஸ் திரும்ப எடுத்துடலாம். செத்த உயிர்களின் மதிப்பு இவளோ தான்.

சரி தான் வனி.நீங்க சொல்றது 100 % உண்மை தான்.
இப்ப எல்லாம் ஏன்டா நம்ம நாடு முன்னேருச்சுன்னு நிறையா நாள் மனம் நொந்து இருக்கேன். சுத்தியும் நடக்கற விஷயம் பாத்தா, இந்த சமுதாயத்தில் இருக்க அருகருப்பா இருக்கு. உதாரணத்துக்கு சொல்றேன் பாருங்க, பஸ் ல ஒருத்தன் நோன்டிட்டே வந்தான். இறங்கும் இடம் வர நானும் அமைதியாவே வந்தேன், இறங்கியும் பின்னாடியே வந்து கிண்டல் பண்ணிட்டு இருந்தான், பெரிய டிராபிக் இடத்துல்ல ரோடு கிராஸ் பண்ண நிக்கறேன். என்னுடன் சேந்து ஒரு 15 பேர் நிக்கறோம், இவன் மறுபடியும் கிண்டல் பண்ணிட்டே வந்தான். திரும்பி நின்னு, 4 அரை தந்தேன். அவன் பேய் அடைஞ்ச மாதிரி நிக்கறான். எனக்கு கோபம் தாங்கல, நல்லா திட்டி விட்டுட்டேன். சுத்தி நின்னவங்க ஒருத்தர் கூட "ஏன்மா அவனை அடிக்கற?என்ன பண்ணுனான் ன்னு கேக்கல" எல்லாரும் நான் அடுச்சதை வேடிக்கை பாக்கறாங்க. இது தான் நம்ம படுச்ச சமுதாயம்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உண்மை தான்... கேட்க மாட்டாங்க... நீங்க அவங்க வீட்டு பொண்ணு இலையே :)

நான் கல்லூரி காலத்தில் தனியா இரவில் வந்தா கூட எங்க வீட்டில் பயப்பட மாட்டாங்க... பஸ்ஸில் யாராவது வம்பு பண்ணா சேஃப்டி பின்ல கிழிச்சுடுவேன். 2 முறை நடந்திருக்கு இது போல. திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி கம்முன்னு இடத்தை மாத்திடுவாங்க. யாருக்குமே தெரியாது என்னாச்சுன்னு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன உலகமோ ச்சே...சமீபத்தில் ஒரு ஃபோரம் அதில் அபார்ஷனுக்கு எதிரான விழிப்புணர்வு மெயில் ஒன்றை யாரோ போஸ்ட் பண்ணினார்கள்..நானும் பரவாயில்லை ஜனங்களுக்கு புத்தி வர தொடங்கியிருக்கு என்று நினைத்தேன் ஆனால் அப்படியே நம்ப முடியாத மாதிரி அடுத்த நாள் முதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அவரவர் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.இதற்கு எதிர்ப்பா என்று நான் குழன்பினேன்.அவர்கள் கூறும் காரணம் எதிர்பாராமல்(???) கர்ப்பமானால் அந்த குழந்தையை வளர்க்க முடியாவிட்டால் இது தானே வழி இது சாத்தியமில்லை என பலரும் அபார்ஷன் செய்துகொள்வதில் தவறில்லை என்ற மாதிரியே நியாயம் சொன்னது ஜீரணிக்கவே முடியவில்லை..இத்தனைக்கும் பார்த்தால் வயிறு கலங்கும் படத்தோடு தான் அந்த மெயில் அனுப்புயிருந்தார் இருந்தும் சர்வ சாதாரணமாக அதில் தவறில்லை என்னும் மனோபாவம் தான் நம் சமுதாயத்தில் என்று நினைக்கையில் என்னவோ ரொம்ப கஷ்டமா இருக்கு..இந்த லட்சனத்தில் இருக்கவங்க தானே நமக்கிடையில்

குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க காரணமே பணமும், போதிய கல்விஅறிவில்லாததும்தான். அதிலும் பெரும் குற்றங்கள் பணத்திற்குதான் நிகழ்கிறது. ஒருவேளை இந்த சமுதாயத்தில் எல்லாமும் எல்லார்க்கும் சொந்தமாக்கப்படுமானால் 50% குற்றங்கள் தடுக்கப்படும். நம் கல்வி முறையில் பாலியல் கல்வி அவசியமாக்கப்படணும். அப்போதான் பாலியல் குற்றங்கள் குறையும். ஆனால் இன்னமும் நாம் அதைப்பற்றி பேசுவதையே அசிங்கமாதான் நினைக்கிறோம். மக்கள்தொகை கட்டுப்படுத்தப்படணும். அப்போதான் அரசாங்கத்தின் திட்டங்கள் வலுவோடு மக்களை சேரும். மக்கள்தொகை கட்டுப்பட வேண்டுமானால் படித்தவர்கள் எண்ணிக்கை 100% மாக வேண்டும். அதற்கு தரமான இலவசக்கல்வி கட்டாயமாக்கப்படணும். அரசின் எந்த ஒரு நல்ல திட்டத்துக்கும் வரிப்பணம் முக்கியம். ஆனால் எத்தனை பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் அவர்களை விட்டு ஒருநாள் பணம் கட்ட தாமதமானால் சட்டம் என்று சொல்லி மின்சாரத்தை துண்டிக்கிறார்கள் சாதாரண மக்களுக்கு. இதில் விழிப்புணர்வு வரும்போது திருட்டு மின்சாரம் எடுத்தால் என்ன என்றுதான் தோன்றும். குற்றங்களுக்கு காரணம் அவர்களல்ல; அதிகாரம் படைத்தவர்களும், பணம் படைத்தவர்களும்தான். குற்றமே இல்லாத கனவு இந்தியா நம் ஒவ்வொருவர் கையிலும்தான் இருக்கிறது.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

மேலும் சில பதிவுகள்