எடை ஏற்ற ஆலோசனை சொல்லுங்க தோழிஸ்

நான் இப்போ 3 மாதம் கர்ப்பமா இருக்கேன் , எதும் சாப்பிட பிடிக்கல, வாந்தி வர மாதிரி இருக்கு, விருப்பமான உணவுகள் கூட பிடிக்கல, என் எடை 43 கிலொ தான் இது லோ வெயிட் னு டாக்டர் சொல்லிட்டார் , இப்போ சாப்பிட பிடிக்காததால இன்னும் எடை குறைஞ்சிடும்னு பயமா இருக்கு, அதுனால குழந்தைக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைக்காம கஷ்டப்படும், நான் எடை கூற்றதுக்கு ஏதாவது டிப்ஸ் கொடுங்க தோழிஸ் ப்ளீஸ்.என்ன சாப்பிடலாம், எப்போ சாப்பிடலாம்னு சொல்லுங்க தோழிஸ் (1st டைம் தமிழ் உபயோகபடுத்துறேன் கணினில, தப்பு இருந்த மன்னிச்சிடுங்க )

நானும் இதே எடை தான் இருந்தேன் மோர்னிங் சிக்க்னேச்ஸ் அப்புறம் நல்ல கூடியது .so dont worry dear

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணி குடிங்க. வாந்தி வருவதாக இருந்தா வந்துடும். அப்பறம் எதை வேணும்னா சாப்பிடுங்க, ஒன்னும் வராது.

அதைவிட முக்கியமா பிடிக்கலன்னு சாப்பிடாம இருக்காதீங்க... முதல் 5 மாசம் தான் குழந்தையின் மூலை, எலும்புலாம் உருவாகும் நேரம்.... அந்த நேரத்தில் அந்த குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கனும் இல்லையா... அதுக்காக கஷ்டப்பட்டாலும் சாப்பிடுங்க.

கொஞ்சம் கொஞ்சமா இடைவெளி விட்டு அடிக்கடி சாப்பிடுங்க. எதுவும் வாந்தி வராது. ஒரே நேரமா நிறைய சாப்பிட்டா தான் குமட்டும்.

தயிர் சாப்பிடுங்க. பழங்கள் அல்லது ஃப்ரெஷ் ஜூஸ் சாப்பிடுங்க. எப்படி பிடிக்குதோ அப்படி. தயிர் வெறுமனே சாப்பிட பிடிக்கலன்னா லஸ்ஸி போல சாப்பிடுங்க. அதுக்காக குடிக்க கூடாது... வழ வழப்பான எல்லாம் குமட்டும் சிலருக்கு. அதை மெதுவா கப்பில் வெச்சுகிட்டு டிவி பார்க்கும் போதோ பாட்டு கேட்டுட்டு இருக்கும் போதோ ஸ்பூன்ல மெதுவா சாப்பிடுங்க.

சாம்பார் மாதிரி ஐடம் கொஞ்சம் குமட்டினா, குழம்பா சாப்பிடுங்க. கார குழம்பு வகை இப்போ நாக்குக்கு சுவையா இருக்கும். சாப்பிட்டதும் தண்ணி குடிக்காதீங்க. வாந்தி வரும். கொஞ்சம் விட்டு சிப் சிப்பா மெதுவா கேப் விட்டு விட்டு குடிங்க.

தினமும் 2 பேரீட்சம் பழம், 2 அத்திப்பழம் (ஃபிக்ஸ்) சாப்பிடுங்க.

அப்பறம் பாருங்க... வெயிட் ஹெல்தியா கூடும்... குழந்தையும் ஆரோக்கியமா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பான ஆலோசனைக்கு நன்றி தோழி, நாளை முதல் நீங்க சொன்ன மாதிரி முயற்சி பண்றேன்.

அன்புடன்
samusri

அன்பான ஆலோசனைக்கு நன்றி தோழி, நாளை முதல் நீங்க சொன்ன மாதிரி முயற்சி பண்றேன்.

அன்புடன்
samusri

மேலும் சில பதிவுகள்